Tuesday, May 30, 2006

கனவே கலையாதே!!

-குப்புசாமி செல்லமுத்து

சேரன் இயக்கிய திரைபடம் ஒன்று. நமது 'பட்ரோல் பங்க்'களில் வெளி நாட்டு வெள்ளைக்காரர்கள் வேலை செய்வதாக ஒரு காட்சி இடம் பெறும். வெறும் கனவு மட்டுமே என அதை எண்ணினோம் நாம். அந்தக் கனவு மெய்ப்படத் தொடங்கி விட்டதோ?

நம் கல்வி முறை மாறியிருக்கிறது. ஊதிய ஏற்றத் தாழ்வு காரணமாக மெக்கானிக்கல், சிவில் முதலிய அடிப்படைப் பொறியியல் படிப்புகளை எவரும் படிப்பதில்லை இன்று. சிறப்பான இலக்கியவாதிகளை சினிமா அரக்கன் வளைத்துக் கொண்டது போல, இவர்களை கணிப்பொறி அரக்கன் வளைத்துக் கொள்கிறான்.

நெசவு இயந்திர உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இலஷ்மி மெசின் வொர்க்ஸ் எனப்படும் LMW. அதிலே 12 வருடங்களாக முக்கியப் பொறுப்பில் இருந்து வரும் ஒரு பொறியாளருடம் சில தினங்களுக்கும் முன் பேச நேர்ந்தது. "பாஸ், ஒரு 2 மாசத்துல SAP படிச்சு சாப்ட்வேர் கன்சல்ட்டிங் சைடு வர முடியுமா?" என்பதே அவரது வினா.

இப்படியே போனால் கிராம வாசிகள் நகரங்களுக்குப் படையெடித்து வரும் அதே அளவு, அடிப்படைத் துறைகளின் வல்லுனர்கள் கணிப்பொறி மற்றும் அழைப்பு மைய வேலைகளை நோக்கிப் படையெடுக்கலாம்.

அடிப்படை உள் கட்டுமானத் தேவைகளான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், வான்முகங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றை நிர்மாணிக்க வேண்டியதே இன்றைய கட்டாயம்.

L&T (போன்ற எல்லா) நிறுவனம் தரமான சிவில் பொறியாளர்கள் உள் நாட்டில் கிடைக்காமல் திணறி வருகிறது. நாம் ஒத்துக்கொண்டாலும், கொள்ளாவிடிலும் இது போன்ற நிறுவனங்கள் தான் தேசத்தை நிர்மாணிக்கின்றன.

நம்மவர்கள் H1 விசா வாங்கி அமெரிக்காவில் பணியாற்றுவது போல, வெளி நாட்டவர் இங்கு வந்து வேலை செய்கின்றனர். ஆதாரம் தேவையென்றால் L&T தலைவர் நாயக் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

குழந்தைகளின் நாயகன் குடியரசுத் தலைவர் அப்துல் காலாம் கண்ட 2020 கனவு நனவாக, நிரம்பச் செய்ய வேண்டி இருக்கிறது. 2010 க்குள் என திட்டக் கமிஷன் அமைத்திருக்கும் இலக்கு கூட இன்றைக்கு வெறும் கனவு போலத் தோன்றுகிறது. It is time to adjust our priorities.

நாளை அப்பிரிக்காவில், மனிதன் கணிப்பொறியும் ஆங்கிலமும் கற்க ஆரம்பித்து விட்டால், IBM, மைக்ரோசா·ப்ட் மட்டுமின்றி TCS, இன்போசிஸ், விப்ரோ கூட அங்கே ஓடிவிட வாய்ப்பு உண்டு. இப்போது கூட கிழக்கு ஐரோப்பா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, சீனா ஆகிய தேசங்களில் இவை வேர் விட ஆரம்பித்து விட்டன. பட்டொளி வீசும் கொடிகளாத் தோன்றும் இந்தத் துணிகள், வலுவான கம்பத்தை நாம் அமைக்காவிடில், வெறும் பட்டமாக மாறிவிடும். காற்றின் போக்கில் பறந்து விடும்.
அடப் போங்கப்பா. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

M.S. படிக்க நம் மாணவர் அமரிக்கா போவது போல, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கே வந்து படிப்பவர்களைக் காண முடிகிறது. (நான் வசிக்கும் பகுதியில் டீக்கடை, புரோட்டா கடை என எங்கும் இவர்கள் தான்)

அதெல்லாம் இருக்கட்டும். சேரனின் கனவும், காலாமின் கனவும் நனவாகுமா?

9 comments:

Sivabalan said...

Kuppusamy Chellamithu,

You are 100% correct. In my UG, only 40% pass rate in Civil. So, it is obivious we fall short of Civil Eng. We are not encouraged to study Civil. I am only person asked for "Willing Civil" in my batch bcos my father was in that line.

But I am lucky enough to get good civil job (Planning)and same field in US also.


Excellent Blog.

Anonymous said...

appa varum kalankallil civil mattrum adai charnda padippukalluku nalla varaverpu undu enkireerkalla???

துளசி கோபால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து.
இன்னிக்குத்தான் உங்க பதிவுகளைப் பார்த்தேன்.
அட்டகாசமான நடை.

வாழ்த்து(க்)கள்.

பொன்ஸ்~~Poorna said...

நீங்கள் சொல்வது 100% உண்மை குப்புசாமி. சரியான நேரத்தில் எழுதி இருக்கிறீர்கள். தந்தையும் மற்றொருவரும் இணைந்து செய்யும் மெக்கானிகல் துறை சம்பந்தமான சிறு தொழில்சாலை(SSI) ஒன்றில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இப்போது DME படித்து விட்டு, அஞ்சல் வழி உயர்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களும் படிப்பு முடிந்ததும் வேறு நல்ல பெரிய கம்பனிகளுக்கு மாறிப்போக, இங்கே கடந்த 5 வருடமாகத் தொடர்ந்து வேலை செய்வது அப்பாவும் கம்பனியின் மற்றொரு பங்குதாரரும் மட்டுமே!

இப்படியே போனால், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தான் ஆள் அழைத்து வந்து வேலை பார்க்கச் சொல்லவேண்டும் என்று நானும் அப்பாவும் கொஞ்ச நாள் முன்னால் தான் பேசிக் கொண்டிருந்தோம்..

அனுசுயா said...

அடிப்படைப் பொறியியல் படிப்பு படிக்க யாரும் முன் வருவதே இல்லை. நான் சிவில் துறையை தேர்ந்தெடுத்தபோது அனைவரும் கேட்ட கேள்வி ஏன் கணிணி பொறியியல் பாடம் கிடைக்கவில்லையா என்பதுதான். அது மட்டும் இல்லை இத்துறையை எடுக்கும் மாணவர்களை ஏதோ வேறு வழியின்றி படிப்பது போல ஒரு எண்ணம். இன்று அடிப்படை பொறியியல் துறையில் பல பணியிடங்கள் நிரப்ப்படாமல் காலியாக இருக்கின்றன்.

Kuppusamy Chellamuthu said...

சிவபாலன்,

நீங்கள் சொல்வதைக் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. சுய விருப்பத்தின் அடிப்படையில் துணிச்சலான முடிவு எடுத்து அதே துறையில் பொருளாதாரமாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனாலும் அமெரிக்கா போயிட்டீங்களே? இங்கே வந்து சொந்தமா இரு கட்டுமானத் தொழில் நிறுவனம் நீங்களே தொடங்கலாம்ல? :-) (என் கதையில் கூட படிச்ச துறைக்கும் வேலை செய்யுற துறைக்கும் சம்பந்தம் இல்லாமத் தான் இருக்கு)

//Excellent Blog.// Thank you very much!!

Kuppusamy Chellamuthu said...

//appa varum kalankallil civil mattrum adai charnda padippukalluku nalla varaverpu undu enkireerkalla???//
நம்புவோம்; அதற்குரிய மரியாதையும் ஊதியச் சமன்மாடும் நிகழும் பட்சத்தில். சாப்ட்வேர் அளவிற்கு சிவில் பொறியாளருக்கு ஊதியம் கிடைக்குமா என்பது சந்தேகமே. காரணம், சாப்ட்வேர் முழுக்க முழுக்க ஏற்றுமதி சார்ந்தது!

Kuppusamy Chellamuthu said...

துளசி அக்கா. வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள். !!!

பொன்ஸ்.. நீங்கள் சொன்ன அத்தனை அம்சங்களும் சத்தியமான உண்மை. சிறு தொழில் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களுக்கும் இதே பிரச்சினை இருந்தாலும், ஏதோ ஓரளவு சமாளித்துக் கொண்டு வண்டியை ஓட்டுகிறார்கள் அவர்கள்.

Kuppusamy Chellamuthu said...

சரிதான் அனுசுயா. ஒப்பிடுதலின் அடிப்படையில், திறமைக்கு ஏற்ற ஊதியம் கட்டுமான வல்லுனர்களுக்குக் கிடைப்பது இல்லை.

//இத்துறையை எடுக்கும் மாணவர்களை ஏதோ வேறு வழியின்றி படிப்பது போல ஒரு எண்ணம்.// வருந்துவோம்..