Tuesday, June 27, 2006

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே...

குப்புசாமி செல்லமுத்து

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி.. கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல், பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் என எல்லா வகையிலும் முன்னேறியிருந்த சமுதாயம் தமிழ்ச்சமுதாயம். சிற்பம், கட்டிடம், கலை, இசை 'யூ நேம் இட்' அதை நாம் கொண்டிருந்தோம். வெறும் பழம்பெருமை மட்டுமே பேசிப் பேசி நம் முன்னேற்றத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோமோ என்கிற ஐயங்கள் பல சமயங்களில் என்னை ஆட்கொண்டதுண்டு.

எந்தச் சமுதாயத்தில் வரிசையில் நிற்க மனிதன் கூச்சப் படுவதில்லையோ, அதுவே முன்னேறிய சமுதாயத்திற்கான சோதனையில் அடுத்த கட்ட வடிகட்டலுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறான அளவுகோளின் படி நாம் எங்கிருக்கிறோம் எனச் சிந்தித்துப் பார்த்தால் கீழ்த்தரமாக உள்ளது.
சுய மதிப்பீடுகளின் வாயிலாக இதே மாதிரியான பலதரப்பட்ட அம்சங்களை சுட்டிக் காட்டலாம். அவற்றில் முக்கியமான கலாச்சார அடையாளமான ஒரு குணாதிசிய வெளிப்பாட்டைக் குறித்து ஏற்பட்ட விரக்தியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அது தான் மொழி விருந்தோம்பல்.

கீஸ் டீ யாங், அவ்ரது மனைவி, 4 குழந்தைகளுடன் இரவு உணவுண்ண இல்லத்திற்கு அழைத்திருந்தார். உணவு மேசையில் படைக்கப்பட்டதைத் தொடும் முன், இறைவனுக்கு நன்றி சொல்லுதல் அவரது நெதர்லாந்துக் கத்தொலிக்க மதநம்பிக்கை. என்றைக்கும் 'டச்சு' மொழியில் பிரார்த்திப்பவர் அன்றைக்கு ஆங்கிலத்தில் ஆரம்பித்தவுடம் குழந்தைகள் புரியாமல் குழம்பின.

அவரது வாசகங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

"எல்லா வல்லவரே! எங்களுக்கு உண்ண இந்த உணவைக் கொடுத்தமைக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அதை விட, இந்தியாவில் இருந்து வந்திருக்கும் நண்பர் குப்பு எங்களோடு இந்த மாலையைக் கழிக்கச் செய்த உமக்கு கோடானகோடி காணிக்கைகள்" எனத் தொடங்கி என் புகழ் பாடவே பல நேரம் ஆனது.

நான் ஒரு இந்தியன், தமிழன், இந்து. கிறித்துவ பிரார்த்தனையில் எனக்குப் பொருளில்லை. அவர் பாட்டுக்கு டச்சில் தொழுது விட்டுச் சாப்பிடிருக்கலாம். மேலும், அரைகுறை ஆங்கிலம் பேசும் அவர்கள் எனக்காக 4 வாரம் அலுவலகத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசினர். டச்சுக்காரர் விருந்தோம்பலுக்கு இது சான்று.

"நான் மும்பையில் வேலை பார்க்கும் போது அங்கே அத்தனை பயலுவலும் இந்தியில் பேசி என்னைக் கடுப்பு ஏத்திட்டே இருப்பானுவுக" என்பதால், 10 பேர் கொண்ட குழுவில் 3 வட இந்தியர் இருக்கும் போது குழு விவாதங்களை வேண்டுமென்றே தமிழில் செய்யும் சிலரை நான் அறிவேன். அமெரிக்காவில் போய் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தெலுங்கில் உரக்க மாட்லாடும் கொல்டிகளும் உண்டு. ஒரு தேசத்தின் தூதுவர்களாக வந்திருக்கிறோம் என்பது இந்த மாக்களுக்கு நினைவே இருப்பதில்லை.

கூட்டமாக இருக்கும் போது ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்பதில்லை. இருக்கிற அனைவருக்கும் பொதுவான மொழியில் பேசுவது நாகரீகம். அவன் செய்தான் என்பதற்காக நாமும் அதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. குரைக்கும் நாயிடம் திரும்பப் போய்க் குரைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

வேற்று மொழிகள் பலவந்தமாகத் திணிக்கப் படும் போது போராடும் நாம், மொழி விருந்தோம்பலை கடைபிடித்துக் காட்ட வேண்டியதும் முக்கியம். முதலில் நாம் கற்போம், பிறகு உலகிற்குக் கற்பிப்போம்..

தமிழர்கள் மேல் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் சிலருக்கு இந்தப் பதிவு மகிழ்ச்சி கொடுக்கலாம். நாம் என்றில்லை, அனேகமாக எல்லா இடங்களிலும் பக்குவமின்மை தோற்றிவிக்கும் செயல் இவை. நாம் பக்குவப்பட்டவர்கள்; பிறருக்கு முன் மாதிரியாகத் திகழ்வோம்.

14 comments:

நாகை சிவா said...

குப்பு அருமையான கருத்தை சொல்லி உள்ளீர்க்கள்.
ஆனால் சில சமயம் நம் மொழி பேசும் நபர்க்களை காணும் போது சுற்றி இருப்பவர்க்களை சிறிது மறந்து நம் தாய்மொழியில் பேசி விடுகின்றோம். இது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான். பொதுவாக இது போன்ற சந்தப்பம் அமைந்தால் நான் தமிழில் பேசி விட்டு தமிழ் தெரியாவதற்களுக்கு அதை ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்து கூறுவேன். ஆனால் என்னுடன் இருக்கும் வட இந்தியர்க்கள் பெரும்பாலும் அதை செய்வது கிடையாது. நானும் அதை எதிர்ப்பாப்பது கிடையாது.

நீங்கள் கூறியப்படிய முன் மாதிரியாக திகழ்வோம்.

செந்தில் குமரன் said...

குப்புசாமி பங்கு வணிகத்திலிருந்து இப்பொழுது கரையோரமா வாங்க!!!

ஒரு கருத்தை இரண்டு விதமாக சொல்லலாம் இதமாகவும் சொல்லாம் கடுமையாகவும் சொல்லலாம்....

இந்தப் பதிவு சற்று கடுமையாக எழுதப் பட்டிருக்கிறது...இது சிலருக்கு கோபம் கொடுக்கலாம்... சொல்வதை சற்று இதமான பாணியில் சொன்னால் பலருக்கு சென்று சேரும், விவாதங்களும் ஆரோக்கியமானதாக இருக்கலாம் அல்லவா?

ஏதோ தோணிணதை சொன்னேன் தப்பா சொல்லி இருந்தால் விட்டுங்க கரெக்டா சொன்னேனு நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

:))

மேலும் பதியுங்கள்....

Anonymous said...

குப்பு பிச்சுட்டீங்க!
இந்தப் பதிவில் உள்ள உங்களின் அனைத்துக் கருத்துக்களுடனும இங்கே இப்போது உடன்படுகிறேன்.

நான் இப்பத்தான் நன்மனம் பதிவில் http://nalozukkam.blogspot.com/2006/06/blog-post_27.html இதச் சொல்லிவிட்டு வந்தேன்...
//ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு பழம பெருமை மட்டுமே பேசுவது ? இப்போதுள்ள சீர்கேடுகளைச் சரி செய்ய அவரவர் தத்தம் அளவில் முயல வேண்டும்.//

நீங்களும் அதையொத்த கருத்தையே சொல்வது மகிழ்ச்சி.

மணியன் said...

நன்றாகச் சொன்னீர்கள். வெளிநாடு என்றில்லை, நமது அண்டை மாநிலங்களில் கூட மற்றமொழியினருக்கு முன்னே தங்லீஷில் பேசி அவர்களை அந்நியப்படுத்துவார்கள். இது வட இந்தியரின் நோய் என்றாலும் நம்மை பீடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதே சமயம் இரு தமிழர்கள் மட்டும் பேசிக் கொண்டு இருக்கும்போது ஆங்கிலத்தைக் குறைப்பதும் நம் மொழிக்காற்றும் கடமையாகும்.

பொன்ஸ்~~Poorna said...

குப்பு,
நியாயமான பேச்சு.. நான் பொதுவா இந்த மாதிரி ஆகும் போது கஷ்டப் பட்டு தட்டுத் தடுமாறி அவங்க மொழியில பேச ஆரம்பிச்சிடுவேன்.. அந்த "மொழிக்கொலையைப்" பொறுக்க முடியாம, ஆங்கிலத்துக்கு வந்துடுவாங்க..

என்னோட ஒரு நண்பர், இன்னோரு காரியம் செய்தாரு.. ரெண்டு பேர் தொடர்ந்து இந்தியில பேசி அவரைக் கலாய்ச்சிகிட்டு இருந்தாங்க.. ஒரு நாள் அவங்க பேசும்போது டக்குன்னு ஒரு கெட்ட வார்த்தை சொன்னாரு இந்தியில.. எங்க கத்துகிட்டார்னு தெரியலை.. ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பார்க்.. அதுக்கப்புறம் ஆங்கிலத்தை விட்டு மாறுவாங்களா என்ன? :))

நன்மனம் said...

நல்ல கருத்துக்கள்.

குமரன் எண்ணம் சொன்னா மாதிரி கொஞ்சம் கோவமா தெரியுது.

// பொன்ஸ் said

அந்த "மொழிக்கொலையைப்" பொறுக்க முடியாம, ஆங்கிலத்துக்கு வந்துடுவாங்க//

இது கூட நல்ல டெக்னிக்கா இருக்கே:-)

குமரன் (Kumaran) said...

மணியன் சொன்னதை முழுதாக வழிமொழிகிறேன். பொன்ஸ் சொன்ன வழிமுறைகளில் இரண்டாவது எளிதாக இருக்கிறது. அதனால் அதனை பரிந்துரைக்கிறேன். :-)

துளசி கோபால் said...

குப்பு செல்லம்,

நீங்க சொன்னது ரொம்பச்சரி. எல்லாருக்கும் புரியற பொழியிலே பேசறதுதான் நாகரீகம்.
அதே சமயம், தமிழர்கள் மட்டும் இருக்கற இடத்துலே அனாவசியமா ஆங்கிலம் பேசறதும்
அநாகரீகம்னு நினைக்கிறேன்.

Kuppusamy Chellamuthu said...

//நம் மொழி பேசும் நபர்க்களை காணும் போது சுற்றி இருப்பவர்க்களை சிறிது மறந்து நம் தாய்மொழியில் பேசி விடுகின்றோம்//
அமாங்க சிவா. அது தவிர்ர்க இயலாததும் கூட.

//இந்தப் பதிவு சற்று கடுமையாக எழுதப் பட்டிருக்கிறது...இது சிலருக்கு கோபம் கொடுக்கலாம்... //
குமரன் எண்ணம், உண்மை. பொன்ஸ் கையளச் சொல்கிற உத்திகள் ரசிக்கத்தக்க வகையிலும், உரைக்க வைக்கின்ற வகையிலும் இருக்கும். நான் எழுதியதில் கோபம் வெளிப்படுகிறது. அதைக் காட்ட வேண்டியவர் இப்போது வெளிநாடு போயிருக்கிறார். அதான் பதிவில் காட்டிவிட்டேன். நீங்கள் சுட்டிக்காட்டுவது மகிழ்ச்சி தான்.

Kuppusamy Chellamuthu said...

மணியன், குமரன், துளசி எல்லாருமே ஒருமித்த கருத்துக் வைத்துள்ளோம். கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

பொன்ஸ் சொல்ற ஐடியா எல்லாமே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.. :-)

வி.கண்ணன் said...

//தமிழர்கள் மேல் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் சிலருக்கு இந்தப் பதிவு மகிழ்ச்சி கொடுக்கலாம்.//

Well said.

கார்திக்வேலு said...

KS ,
நியாயமான ஒரு வருத்தம் , வெகு பரவலாகக் காணக்கிடைக்கும் வழக்கம்.
இந்தியாவின் எந்தப் பகுதியில்
இருந்து வந்தவர் என்ற பாகுபாடில்லாமல் சிலருக்கு இந்தப் பழக்கம் உள்ளது.

மேலும் வருந்தக் கூடிய விஷயம் அலுவல் சம்மந்தமான பேச்சுக்களில் கூட (குறிப்பாக தொலைபேசியில்) இது நிகழ்வது.

Vaa.Manikandan said...

small article...but 'nach' article kupps!!!

Kuppusamy Chellamuthu said...

நன்றி கார்த்திக் மற்றும் மணிகண்டன்.

//இந்தியாவின் எந்தப் பகுதியில்
இருந்து வந்தவர் என்ற பாகுபாடில்லாமல் சிலருக்கு இந்தப் பழக்கம் உள்ளது.//

ஆஸ்திரேலியாவிலும் அதே கதை தான் போல இருக்கிறது.