Friday, June 30, 2006

அண்ணியின் அணைப்பில்....

-செல்லமுத்து குப்புசாமி 

மாலதியை அண்ணன் திருமணம் செய்து கொண்டபோது கல்லூரி இறுதியாண்டில் இருந்தேன். கிட்டத்தட்ட என் வயது தான் அண்ணிக்கு. அவளைக் கொண்டதற்கு அவன் கொண்டதை விட அதிகமாகச் சந்தோசம் கொண்டது நானாகத்தான் இருக்கும்.

வீதியில் நடக்கும்போது அண்ணியைத் திரும்பிப் பார்க்காத கண்களே இருக்காது. அத்தனை அழகி அவள். நளினம், அப்பழுக்கற்ற சிரிப்பு, மூடியும் மூடாததுமான வாளிப்பு, குறும்புப் பார்வை....அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் நிகரற்ற பேரழகியாக விளங்கினாள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

ஒரு 'ஹலோ'விற்காக பல ஆடவர்கள் துல்லியமாகத் திட்டமிட்டு அவள் நடக்கும் பாதைக்கு எதிர்த் திசையில் வருவர். "நம்ம கிட்ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்கு?" பெண்டிரையும் வியக்க வைத்தவள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

எங்கள் வீட்டுக்கு மாலதி வந்த ஒரே மாதத்தில் நட்பானேன். அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் இருக்கும் போது நெருக்கமாகக் காட்டிக் கொள்ள மாட்டாள். அவர்கள் இல்லையென்றால் ஒரே குஷி தான். அண்ணனுக்கு அடிக்கடி வெளியூர்ப் பயணம் வேலை நிமித்தமாக. கொஞ்ச நாளில் அப்பா, அம்மாவும் ஊருக்குப் போனார்கள். பிறகென்ன?

அண்ணியுடன் ஜாலியாக இருக்க வேண்டிக் கல்லூரியைக் கட் அடித்தேன். அவள் சமைக்கும் போது உதவி என்ற பெயரில் குறும்பு செய்தேன். டி.வி. பார்க்கும் போது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வாள். கையை விடவே மாட்டாள். உலகையே நான் மறந்த வேளைகள் அவை.

"லவ்வர்ஸ் மாதிரி பீச்சுக்குப் போலாமா?" ஒரு நாள் கேட்டாள். மறுக்க நானென்ன பைத்தியமா? அவளோடு சேர்ந்து ஊர் சுற்ற எனக்கும் ஆசை என்பது அண்ணிக்கு நன்றாகவே தெரியும். என்னை வண்டி ஓட்ட விடாமல், அவளே ஸ்கூட்டியை எடுத்துக் கொள்வாள். இடுப்பைக் கையால் வளைத்துக் கட்டிக் கொண்டால், "யூ நாட்டி... கையை எடு" அவ்வளவு தான். அதற்கு மேல் எதிர்ப்பு இருக்காது. கிள்ளுவதும் கிச்சுக்கிச்சு மூட்டுவதும் அவளுக்குப் பிடித்தே இருந்தன. குறுகுறுப்பில் திளைப்பேன்.

டூர் முடிந்து அண்ணன் வந்தால் 'எப்படா போவான்' என இருக்கும். அப்படி அவன் வரும் போதெல்லாம் அண்ணி என்னை மறந்து விடுவாள். அல்லது மறந்தது போல நடிப்பாள். சல்லாபக்காரி. அவன் போனதும் சகஜ நிலைக்கு உடனே வந்து விடுவாள்.

இப்போதெல்லாம் குளிக்கும் போது என் அனுமதி இல்லாமலே உள்ளே நுழைந்து முதுகு தேய்க்க வருகிறாள். அவள் முன்னால் உடை மாற்றும் போது சிரித்துக் கொண்டே அங்கீகரிக்கிறாள். என் தேக இளமையை மாலதி ஓரக்கண்ணால் இரசிப்பது தெரிந்தே தான் அப்படிச் செய்கிறேன்.
அண்ணி குளித்து வந்ததும் பிரா, ஜாக்கெட் கொக்கி மாட்டி விட என்னை அழைப்பது இயல்பான ஒர் சங்கதியாகி விட்டது. குளித்த ஈரம் காயாத முதுகுப் பரப்பு....அடடா.. ஸ்லீவ்லெஸ் நைட்டி எப்போவதாவது தான் அணிவாள். மொழு மொழு தோள்களைத் தடவிப் பார்க்க ஆசை அப்போதெல்லாம் தலையெடுக்கும்.

கிளாஸ்மேட் சுந்தர் அவள் கேர்ள்-பிரண்ட் கூட மகாபலிபுரம் போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்த கதையைச் சொன்னபோது, சிரித்துக் கொண்டே கேட்ட அவள் இமைகள் ஆடவில்லை. "நீ அந்த மாதிரிப் போய் என்ஜாய் பண்ற ஐடியா இல்லியா?". ராட்சசி.. மனதில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.

"தனியாப் படுக்கப் பயமா இருக்கு. என் ரூம்ல வந்து கூடப் படுத்துக்கிறியா?" மறுக்க முடியுமா? அன்று தொட்டு ஒவ்வொரு இரவும் ஒரே கட்டிலைப் பகிர்ந்து வருகிறோம். மாலதியில் உடல் கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில் தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.

நடந்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன். இருந்தால் மட்டும் என்ன? அவனுக்கும் தெரியட்டும். கட்டின மனைவியை விட அவனுக்கு வேலை தான் பெரியதா!

இப்படியாக எனக்கும் மாலதி அண்ணிக்குமான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவளின்றி நானில்லை என்ற நிலைக்கு வந்தேன். இந்தச் சமயத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலையும் கிடைத்திருந்தது.

எனக்கு வயதாவதாகச் சொல்லி, வீட்டில் துணை தேட ஆரம்பித்து விட்டனர். என் எதிர்ப்புகள் எடுபடவில்லை. என் ஒப்புதல் இன்றி என் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. அண்ணி எதுவுமே பேசவில்லை.

மணமேடை. பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடும் மெகா சீரியல் ஓசை போல புரோகிதர் சொல்லும் மந்திரம் தேய்ந்து போய் என் காதில் விழுகிறது. இயலாமை, வெறுப்பு, குழப்பம், ஆற்றாமை, பாதுகாப்பின்மை ஒட்டு மொத்தமாக ஆட்கொண்டன. பொறுத்தது போதும்.....இவ்வளவு தான். இதற்கு மேல் தாங்காது. பிரேக்-ஈவன் பாய்ண்ட் என ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்தப் புள்ளியை எட்டி விட்டேன். கூட்டத்தை மறந்தேன், சமூகத்தை மறந்தேன். மனதெல்லாம் நினைவால் அண்ணியே நிறைந்திருந்தாள்.

என்னையுமறியாமல் எழுந்தோடி மேடைக்குப் பக்கத்தில் நிற்கும் மாலதியைக் கட்டிக் கொள்கிறேன். ஒரே அழுகாச்சி.. நான் அழ, அண்ணி அழ....
"என்னடா... ஒன்னும் இல்ல. நாங்க எல்லாம் இதே ஊர்ல தான இருக்கோம்! நெனச்சா எப்ப வேணாலும் ஒரு மணி நேரத்துல வந்து பாத்துக்கலாம்." இன்னும் ஏதேதோ சொல்லி என்னைச் சமாதானப் படுத்தி மணவறையில் மறுபடியும் அமரச் செய்கிறாள் அண்ணி.

அப்பா, அம்மா, அண்ணன், (சற்று நேரத்தில்) மாமனார், மாமியார் அனைவர் கண்களிலும் ஈரம் துளிர்த்திருந்தது.

"மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன்.

(இதை விட குஜாலான ஒரு நாவல் இரவல் காதலி - ஆங்கிலத்தில் Borrowed Girlfriend)

142 comments:

நன்மனம் said...

:-)

செந்தில் குமார் said...

குப்ஸ், உங்களுக்குள் இப்படி ஒருத் திறமையா! க்ளைமாக்ஸில் பின்னி விட்டீர்கள்!! வாஆஆஆஆஆவ்!!! (திறந்த வாய் மூடவில்லை)

Hari said...

Kupps…

That was a wonderful post…I really liked it… I was actually expecting a twist in the middle itself…but this was even better… Very Good…Keep writing…

குழலி / Kuzhali said...

//Kupps…

That was a wonderful post…I really liked it… I was actually expecting a twist in the middle itself…but this was even better… Very Good…Keep writing…
//
எனக்கும் அதே அதே...

Kuppusamy Chellamuthu said...

நன்மனம், நீங்க இப்படிச் சிரிச்சா நான் என்ன நினைக்கறது? எதை நெனச்சுச் சிரிக்கறீங்களோ?

நன்றி செந்தில் குமார். குயில் இப்பதான் கூட்டை விட்டு வெளியே வந்து கூவுது போல இருக்கு.

பாராட்டுக்கு நன்றி Hari

Udhayakumar said...

மல்கோவா மாமி, ஆப்பிள் ஆன்ட்டின்னு எழுதராரே செருப்பு, சீமாருன்னு வரும்ன்னு பார்த்து வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்கப்பா...

நாகை சிவா said...

குப்பு, தலைப்பை பார்த்து படிக்க ஆரம்பிக்கும் போதே, உங்கள் மேல் உள்ள மதிப்பாலும், நம்பிக்கையாலும் கண்டிப்பாக அது போல் இருக்காது என்று நினைத்தேன். அதை தாங்களும் மெய்பித்து வீட்டீர்க்கள்.
சூப்பர்..........

இலவசக்கொத்தனார் said...

உங்க சிறுகதை மார்கெட்டின் குறியீடு 10,000 புள்ளிகள் எல்லாம் தாண்டி போயிருச்சு. சூப்பர் மாமூ.

S. அருள் குமார் said...

மன்னித்துக் கொள்ளுங்கள் குப்புசாமி,
சூர்யா படம் பார்த்ததுபோல் இருக்கிறது. (செல்லக்கூடாததையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் அதற்கு ஒரு நியாயம் சொல்வது)

முதலில் போலி டோண்டு பதிவு போல் இதுவும் ஒரு போலியின் வேலையோ என்றுதான் நினைத்தேன் :(

நட்புடன்,
அருள்.

கார்திக்வேலு said...

KS,
what did u have for breakfast today :-)

நிலா said...

நடை நல்லா இருக்குங்க. ஆனா ரொம்ப predictable ஆக இருக்குதுங்க. இது போல ஏகப்பட்ட கதை வந்துட்டதுனால கூட இருக்கலாம்

நல்லா எழுத வருது. அடுத்த முறை வித்தியாசமான கருவைத் தேர்ந்தெடுத்து எழுதுங்க...
வாழ்த்துக்கள்

சதயம் said...

ஹி..ஹி..ஹி...கொஞ்சம் தடுமாறி...அப்படியே ட்ராக் மாறி...ஹி..ஹி...அடடா...ன்னு சூடுபிடிச்சுக் கெளம்பும்போது,...க்ளைமாக்ஸ போட்டு தாளிச்சுப்புட்டீங்களே குப்பு.....

அசத்தீட்டீங்க....முன்னாலயே ஒருதரம் சொல்லீருக்கேன் 'உங்க எழுத்துநடை எழுபதுகளின் சுஜாதாவை நினைவுறுத்துகிறது' என்று...நிரூபித்திருக்கிறீர்கள்.....

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

கழுத்தை என்ற வார்த்தை மட்டும் இல்லாவிட்டால் கழுதை கெட்டது போல் இருந்திருக்கும். நல்ல சஸ்பென்ஸ் ... :)

Kuppusamy Chellamuthu said...

//செருப்பு, சீமாருன்னு வரும்ன்னு பார்த்து வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்கப்பா...//

உதயகுமார், இதுகு நேரடியாகவே நீங்கள் திட்டியிருக்கலாம் :-)

************
சிவா, கொத்ஸ்.. நீங்க 2 பேருமே அருமையான ரசிகர்கள் என்பதை மீண்டும் நிருபிச்சுட்டீங்க ..ஹி.ஹி.ஹி..ஹி..
*********
//மன்னித்துக் கொள்ளுங்கள் குப்புசாமி,
சூர்யா படம் பார்த்ததுபோல் இருக்கிறது.//

அருள்குமார், இதற்கு எதுக்குங்க மன்னிப்பு? எஸ்.ஜே.சூர்யா மாதிரி.. அதே தான். என் மனதில் புதைந்திருக்கும் விகாரங்களின் வெளிப்பாடு தான் கதை(?). குடைக்குள் மழை படம் பார்த்திருக்கிறீர்களா? சிஙப்பூர்ல இருந்து ஒரு பார்த்திபன் பாத்திரம் வருமே? அது மாதிரி எனக்குள் மட்டுமல்ல உங்களுக்குள்ளும் ஒருவன் இருக்கிறான்.

********
மறந்துட்டேன். நன்றிங்க குழலி.

நாகை சிவா said...

//சூர்யா படம் பார்த்ததுபோல் இருக்கிறது. (செல்லக்கூடாததையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் அதற்கு ஒரு நியாயம் சொல்வது)//
என்னங்க அருள், உங்களுக்கு மேட்டர் தெரியாதா, எஸ்.ஜே. சூர்யாவின் பல படத்துக்கு அண்ணன் தான் கதை வசனம். அவருக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காது. அததான் படத்தில் இவர் பெயர போடலை ;)

நன்மனம் said...

//Kuppusamy Chellamuthu said...
நன்மனம், நீங்க இப்படிச் சிரிச்சா நான் என்ன நினைக்கறது? எதை நெனச்சுச் சிரிக்கறீங்களோ?//

முடிச்ச போது வித்தியாசமா இருந்ததால வெரும் சிரிப்போட கிளம்பிட்டேன்.

S. அருள் குமார் said...

//அது மாதிரி எனக்குள் மட்டுமல்ல உங்களுக்குள்ளும் ஒருவன் இருக்கிறான்.// நிச்சயம் இருக்கிறான். அப்படி ஒருவன் இருப்பதுதான் இந்த கதையின் ஆதாரமே. எல்லோருக்குள்ளும் அப்படி இருப்பவனைத் தூண்டிப்பார்க்கும் விதமாக கதையின் முக்கால் பாகமும் அமைந்திருப்பதால் தான், இப்படி எழுதியிருக்க வேண்டாமே என தோன்றியது.

//எஸ்.ஜே. சூர்யாவின் பல படத்துக்கு அண்ணன் தான் கதை வசனம்.// இது வேறையா?! :))

Kuppusamy Chellamuthu said...

கார்த்திக், I did not break my fast today :-)

*****
//அடுத்த முறை வித்தியாசமான கருவைத் தேர்ந்தெடுத்து எழுதுங்க...
வாழ்த்துக்கள் //
நம்பிக்கைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிங்க நிலா.

இராம் said...

நல்ல கிளுகிளுப்பா இருந்து கடைசில சப்புன்னு போச்சு... ;-)))

Anonymous said...

I don’t agree with anyone who negatively criticizes. Reading first time gives a potty impression. On the other hand when it is read second time after knowing the climax, man.. I tell you it is a master piece. Good work.

Sivabalan said...

//மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன்.//

அட்ரா சக்கை... கலகீட்டீங்க... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி!!

SK said...

இது போல பல கதைகள் வந்திருந்தால் என்ன?
கடைசி வரியைப் படித்ததும், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து படித்து, புது மகிழ்ச்சியை அடைய வைக்கிறதே, அதுவே இந்தக் கதையின், தங்கள் நடையின் வெற்றி.

மனவிகாரங்கள்!! :))

Kuppusamy Chellamuthu said...

சதயம் .. கிரிக்கெட் மேட்ச் ரன்னிங் கமெண்டரி மாதிரி, நீங்க தான் கலக்கறீங்க போங்க.

பாராட்டுக்கு நன்றி கோவி.கண்ணன்.

//எஸ்.ஜே. சூர்யாவின் பல படத்துக்கு அண்ணன் தான் கதை வசனம்// சூடான்ல இருந்து இப்போதைக்கு நீங்க ஒருத்தர் தான் இப்படிக் கிளம்பியிருக்கீங்க :-)

//நல்ல கிளுகிளுப்பா இருந்து கடைசில சப்புன்னு போச்சு// கே ராம். வேற எப்படியப்பு முடிக்கறது? அண்ணியோடு இணைபிரியாத தோழியாய் இருந்து திருமணத்தில் இதே பாசக் காட்சிகளை அரங்கேற்றிய ஒருத்தின் அடியொற்றிய கரு. ஆனால், வேறு சங்கதிகள் எல்லாம் என்னுடைய இடைச் செருகல்கள் :-)

அருள்குமார், அனானி பிறகு பேசிக்கலாம்.

துளசி கோபால் said...

பாதிக்கதையில் ஊகிக்க முடிஞ்சது.

ஆனாலும் 'குமுதம் லெவல்'லே எழுதிட்டீங்க.

நல்லாவே வந்துருக்கு.

வாழ்த்து(க்)கள்.

பொன்ஸ்~~Poorna said...

இந்தக் கதையைப் பொறுத்தவரை, குப்புசாமிகிட்டேர்ந்து எதிர்பார்க்காத கதை..

நல்லா இருக்கு.. இல்லை.. ரெண்டும் சொல்ல முடியலை.. கொஞ்சம் ஓவர் டோஸோன்னு தோணுது.. அவ்வளவு தான்..

அதாவது, எஸ்ஜே சூர்யாவுக்கும் இணையப் போலிக்கும் இடையில் இருக்கும் நூலிழையில் கதை பின்னி இருக்கீங்க.. சூர்யாவே எனக்கு ஓவர் டோஸ்னு தோணும்.. நீங்க.. அதையும் தாண்டி...

முத்துகுமரன் said...

:-)

பத்மா அர்விந்த் said...

நல்ல நடை. ஆரம்பத்திலேயே ஊகிக்க முடிந்தது.

Guru said...

though one could guess the plot from 5th paragraph, nice narration holds the interset till the end. (but very sexy..) expecting more from you like this...hi hi :-))))

Syam said...

இங்க காமெண்ட்க்கு வர வரைக்கும் இது கதைனு உரைக்கலைங்க...இப்போ தான் முதல் முதலா வரேன்...இனி புரிஞ்சு போகும்.. :-)

Syam said...

நம்ம புலிக்குட்டி நாகை சிவா பதிவுல இருந்து அவர் வழிகாட்டி விட்டார் இங்க வரதுக்கு....

முத்து(தமிழினி) said...

:))

குசும்பு குப்புசாமி

Anonymous said...

பொன்ஸை வழிமொழிகிறேன். எஸ். ஜே. சூர்யாவே தேவல எனலாம் :( இதுக்கேன் மற்றவர்கள் வாழ்த்துகிறார்களெனத் தெரியவில்லை.

Kuppusamy Chellamuthu said...

நேர்மையான பின்னூட்டத்தைக் கொடுத்த பொன்ஸ்க்கு நன்றி.

அருள்குமார்: சூர்யா, செல்வ ராகவன் எப்படி வேணாலும் வச்சுக்கலாம். ஆனால் இது ஒன்றும் நீதிக்கதையல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

சிவபாலன், எஸ்.கே. இருவருக்கும் நன்றிகள்.

துளசி டீச்சர் குமுசம் கதை மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. ஆணுடன் நெருங்கிப் பழக அனுமதிக்காத சமூகத்தில் சம வயதுடைய பெண்கள் தத்தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்வது கலாச்சார அதிர்ச்சியாக இருக்கலாம். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்த எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் இப்போது, 'ஆணுறை உபயோகப் படுத்துங்கள்' எனப் பிரச்சாரம் செய்கிறது. சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

தேன்துளி மற்றும் குரு, ஆரம்பத்திலேயே அனுமானிக்க முடிந்தாலும் ஓரளவு ரசிக்க முடிந்தது என்று எண்ணுகிறேன். பாராட்டுக்கு நன்றி.

முத்து, சியாம், முத்துக்குமரன் மற்றும் ஏற்றுக் கொள்ளாத அனானி, அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக மறுதலித்துப் பேசிய அனானிக்கு.

பொன்ஸ்~~Poorna said...

//ஆணுடன் நெருங்கிப் பழக அனுமதிக்காத சமூகத்தில் சம வயதுடைய பெண்கள் தத்தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்வது கலாச்சார அதிர்ச்சியாக இருக்கலாம். //
குப்பு, இந்த கலாச்சார அதிர்ச்சிக்காகத் தான் நான் அப்படிச் சொல்றேன்னு நினைக்கிறீங்களா? என்னை மாதிரி, துளசி மாதிரி பெண்கள் இந்த ஸ்டேஜைத் தாண்டாம தான் வந்திருக்கோமா? இது அதிர்ச்சியா?

இந்தக் கதையை மறுமுறை வாசிச்சி பாருங்க.. நீங்க சொல்லும் அந்தரங்கம் இதுல எங்க ஓவர்டோஸா வெளிப்பட்டிருக்குன்னு..

பெண்களின் அந்தரங்கப் பரிமாற்றம் தான் இங்க இத்தனை ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கா?

வி said...

தங்கள் கரையோரம் வலைபதிவை இதோடு படிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நமது எழுத்துக்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பது போன்றே எத்தனை பேரை நல்ல சிந்தனையில் வழி வழிநடத்துகிறது என்பதும் அவசியம்.

விஜய் said...

தங்கள் கரையோரம் வலைபதிவை இதோடு படிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நமது எழுத்துக்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பது போன்றே எத்தனை பேரை நல்ல சிந்தனையில் வழி வழிநடத்துகிறது என்பதும் அவசியம்.

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ். நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள்.

//பெண்களின் அந்தரங்கப் பரிமாற்றம் தான் இங்க இத்தனை ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கா?// உள்ளே புதைந்திருக்கும் வக்கிரமத்தின் வெளிப்பாடு என ஏற்கனவே சொன்னேன்.

//என் மனதில் புதைந்திருக்கும் விகாரங்களின் வெளிப்பாடு தான் கதை// இதை விடத் துணிச்சலான நேர்மையான பதிலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா? நல்லவனாக முகத்திரை இட்டு அணிவது வசதியானது என்றாலும் அதைச் செய்யவில்லை.

கலாச்சார அதிர்வை நியாயப்படுத்தவில்லை நானிங்கு. அதே சமயத்தில், உங்களைப் போலவே ஒட்டு மொத்த சமுதாயமும் அப்பழுக்கற்றதாக எண்ணிவிட வேண்டாம். (அதே மாதிரி என்னைப் போல குரூர புத்தி படைத்தவர்களால் சமுதாயம் நிறைந்திருக்கவும் இல்லை). பெண்களின் அந்தரங்கப் பரிமாற்றம் தான் இத்தனை ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கா? ஆமென்றும் இல்லையென்றும் சொல்லலாம். எதற்காக கோக் வாங்கிக் குடிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? அதைக் கையில் வைத்தபடியே சிரிக்கும் ஐஸ்வர்யா ராயை அடைய முடியாத ஏக்கத்தை இப்படித் தீர்க்கிறோம், அந்த உண்மையை அறியாமலே. விலங்கியலும், உளவியலும் மோதிக்கொள்ளும் இடம் அது. பெண்களுக்காக எழுதப் பட்ட Nancy Friday புத்தகங்கள் பெண்களை விட ஆண்களே அதிகம் வாசித்திருக்கலாம். ஆனால், பென்கள் எவரும் அதை விரும்பவில்லை என்பீர்களா?

'சாந்தினி பார்' படத்தைக் கூடத் தான் கலாச்சார சீரழிவாக பெண் அமைப்புகள் போராடின. அவை இல்லையென்கிறீர்களா? பெண்களின் பாலியல் fantasy உள்ளூர நிறைய இருந்தாலும் இந்தியச் சமுதாயம் சமுதாயம் அங்கீகரிப்பதில்லை.

'broad minded couple wanted' என ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை நீங்கள் பார்திருக்க மாட்டீர்கள். Swapping கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தம்பதியர் பெங்களூரிலும், சென்னையிலும் உண்டு என்பதை அறிவேன்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் விமர்சனம் நியாயமனது. அதைப் புறக்கணிக்கவோ, குறை சொல்லவோ நான் விரும்பவில்லை. அதே மாதிரி என்னையும், ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்தையும் புத்தர்களாக முன்னிறுத்துவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பொறுக்கியாகவும் கருத வேண்டாம்.

பொன்ஸ்~~Poorna said...

//இதை விடத் துணிச்சலான நேர்மையான பதிலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா? //
உங்க நேர்மையைப் பாராட்டணும்னு நினைக்கிறீங்களா? ஏனோ என்னால முடியலை.. நீங்க நேர்மையா எழுதி இருக்கலாம்.. இதைப் பார்த்து நாலு பேர் அதே நேர்மையைக் கடை பிடிக்கிறேன்னு இதுவரை (உங்க அளவுக்கு விஸ்தாரமா) சைட் அடிக்காதவன் எல்லாம் அதைச் செஞ்சிட்டு இப்படி ஒரு நேர்மையான கதை எழுதுறேன்னு ஆரம்பிச்சா?

// கலாச்சார அதிர்வை நியாயப்படுத்தவில்லை நானிங்கு.//
கலாச்சார அதிர்வை நியாயப் படுத்தினாலும் தவறில்லை.. ஆனா அந்தக் கலாச்சார அதிர்வை விட மற்ற சமாச்சாரங்கள் தான் இந்தக் கதையில் முக்கியமாகிவிட்டது.. ரீச் எதுக்குன்னு பாருங்க..

// அதே சமயத்தில், உங்களைப் போலவே ஒட்டு மொத்த சமுதாயமும் அப்பழுக்கற்றதாக எண்ணிவிட வேண்டாம். //
யாரும் 100% ஒழுங்கு இல்லை. என்னோட குறைகள் எனக்குத் தெரியும். அதை ஒப்புக் கொள்வது வேற, அதை ஒப்புக் கொள்ளும் விதம் ஒரு மாதிரி அங்கீகரிக்கக் கூடிய விஷயமா அதை நியாயப்படுத்துவது வேற.

//எதற்காக கோக் வாங்கிக் குடிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? அதைக் கையில் வைத்தபடியே சிரிக்கும் ஐஸ்வர்யா ராயை அடைய முடியாத ஏக்கத்தை இப்படித் தீர்க்கிறோம், அந்த உண்மையை அறியாமலே. விலங்கியலும், உளவியலும் மோதிக்கொள்ளும் இடம் அது. பெண்களுக்காக எழுதப் பட்ட Nancy Friday புத்தகங்கள் பெண்களை விட ஆண்களே அதிகம் வாசித்திருக்கலாம். ஆனால், பென்கள் எவரும் அதை விரும்பவில்லை என்பீர்களா?

'சாந்தினி பார்' படத்தைக் கூடத் தான் கலாச்சார சீரழிவாக பெண் அமைப்புகள் போராடின. அவை இல்லையென்கிறீர்களா? பெண்களின் பாலியல் fantasy உள்ளூர நிறைய இருந்தாலும் இந்தியச் சமுதாயம் சமுதாயம் அங்கீகரிப்பதில்லை.

'broad minded couple wanted' என ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை நீங்கள் பார்திருக்க மாட்டீர்கள். Swapping கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தம்பதியர் பெங்களூரிலும், சென்னையிலும் உண்டு என்பதை அறிவேன்.//
இதையெல்லாம் உங்கக் கதை கன்வே பண்ணலை.. இது தான் என்னோட எண்ணம்.

//அதே மாதிரி என்னையும், ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்தையும் புத்தர்களாக முன்னிறுத்துவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பொறுக்கியாகவும் கருத வேண்டாம். //
ம்ம்.. இதைப் படிச்சி எல்லாம் நான் என்னோட அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில்லை.. ஆனா, அப்படி உருவாக்கிக் கொள்ளக் கூடிய பெண்களும் இருப்பாங்க.. அவங்களையும் மனதில் வைத்து நம்ம எழுதணும்.

வி.கண்ணன் said...

Guys, need a referee?

முத்து(தமிழினி) said...

நான் அம்பயர் ஆக இருக்கத்தயார்...ஹிஹி

நாமக்கல் சிபி said...

//நான் அம்பயர் ஆக இருக்கத்தயார்...ஹிஹி
//

தேர்ட் அம்பயர் தேவையா?

பிரதீப் said...

கடைசி வரியில நச்சுனு மூஞ்சியில குத்துன மாதிரி இருந்துச்சு...

நாமக்கல் சிபி said...

இங்கு வருபவர்கள் எல்லாருமே கொண்டாட வரவில்லை ஐயா!


//எல்லோருக்குள்ளும் அப்படி இருப்பவனைத் தூண்டிப்பார்க்கும் விதமாக கதையின் முக்கால் பாகமும் அமைந்திருப்பதால் தான், இப்படி எழுதியிருக்க வேண்டாமே என தோன்றியது.
//

அருள் குமரன் கூறியிருப்பதைப் பாருங்கள். நியாயமான விமர்சனம்.

நானும் அவரைப்போல் போலியின் வேலையோ என்றுதான் எண்ணினேன்.


குமுதம் ரேஞ்ச் என்று சிம்பிளாகச் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் ஓவர்தான்.
:(

முத்து(தமிழினி) said...

//// முத்து(தமிழினி) said...
நான் அம்பயர் ஆக இருக்கத்தயார்...ஹிஹி //

வந்துட்டார்யா.... வந்துட்டார்யா!!

:-)//

nanmanam,

ஹிஹி..சொந்த பெயரை பொட்டு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தானே கேட்டார்...


நானும் ஒரு ஸ்மைலி போட்டு விடுகிறேன். எதற்கு வம்பு :))

(குப்பு,.தொந்தரவுக்கு மன்னிக்கணும்.முதலில் இது பிளாக்கர் நம்பரை எடுக்கவில்லை.அதனால் அனானியாக வந்துவிட்டது)

G.Ragavan said...

கதையைப் படித்து விட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தப்பா சரியா என யோசித்துப் பார்த்தேன். எல்லாம் சரியுமில்லை. தப்புமில்லை.

பொதுவாக பெண்களின் காம உளவியல் தளம் என்பது இந்தியாவில் (பல நாடுகளிலும் கூட) இன்னும் ஏற்றுக் கொள்ளப் படாததே. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து விசில் அடித்தால் அது சாதாரண ஈவ் டீசிங் நிகழ்வு. அதே ஒரு பெண் ஆணைப் பார்த்து விசில் அடித்தால்....அந்தக் காட்சியின் பரிமாணம் பல நிறங்களில் மாறும். இதற்கு மதவாதிகளும் பண்பாட்டுக் காவலர்களும் பெண்களைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று கொதித்தெழுவார்கள்.

மனதளவில் இருக்கின்ற அழுக்குகளை இப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவது சரியோ என்று தோன்றுகிறது.

சதயம் said...

குப்புசாமி என்ன சொன்னார் என்பதைவிட எப்படிச் சொன்னார் என்பதில்தான் இந்தப் பதிவின் வெற்றியும் அதன் பின்னோட்டங்களும் இருப்பதாக நினைக்கிறேன்.

எதையும் நாம் எடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது...இதை படித்து முடிக்கும் போது உங்கள் மனதில் ஹாஸ்ய உணர்வும் முகத்தில் விஷமச் சிரிப்பும் இருப்பின் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் எனலாம்.......

நண்பர் குப்புசாமி தன்னிலை விளக்கமளித்த பிறகும் பதிவின் நீள,அகலங்களைஆராய்வதும்...நண்பர் குப்புசாமியை ஒரு ரேஞ்சில்(!) வைத்துப் பார்ப்பதும் தேவையற்து.

நான் குப்புசாமியை ஆதரிக்கிறேன்...எந்த நிபந்தனையுமில்லாமல்....

icarus prakash said...

குப்புசாமி சார், நல்லாத்தானே இருந்தீங்க? இப்ப என்ன குமுதம் ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்க?

மனதின் ஓசை said...

பொன்ஸ் சொல்வது நியாயமாக பட்டாலும் எனக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது... ஒரு கதையாக மட்டும் பார்க்கலாம்...அந்த சஸ்பென்ஸ் உடையும் வார்த்தை அருமை...
சந்தேகமாக இருந்ததால் profile போய் பார்த்து விட்டு வந்து மிச்சத்தை படித்தேன்...அதனால் எப்படி முடியும் என்ற ஆர்வம் முழுதும் இருந்தது..போக போக என்னடா இது இப்படி ஒவரா போகிறதே.. இதை எப்படி சரியாக முடிக்க முடியும் என எண்ணினேன்... கலக்கலாக ஒப்புக்கொல்லும் படி முடித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

Kuppusamy Chellamuthu said...

Pons, this is neither pornography nor theology and I am pleased you appreciate it.

கெட்டுப் போகணும்னு இருக்கிறவன் எப்படியும் கெட்டுப் போவான். இதைப் படிச்சு தான் கெடணும்னு இல்லை.

//இதுவரை (உங்க அளவுக்கு விஸ்தாரமா) சைட் அடிக்காதவன்// உள்குத்து இல்லை சாமி இது நேர் குத்து :-) பை த பை, சைட் அடிக்கலனாத்தான் ஏதோ பிரச்சினைன்னு அர்த்தம்.

//தங்கள் கரையோரம் வலைபதிவை இதோடு படிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளேன்// விஜய், எதை எழுத வேண்டும் என எப்படி நீங்கள் எவருக்கும் ஆணையிட முடியாதோ அதே மாதிரி எதைப் படிக்க வேண்டும் எனவும் யாரும் உங்களுக்கு ஆணையிட முடியாது. தகவலுக்கு நன்றிகள்.

பொன்ஸ்~~Poorna said...

//இதுவரை (உங்க அளவுக்கு விஸ்தாரமா) சைட் அடிக்காதவன்
- உள்குத்து இல்லை சாமி இது நேர் குத்து :-) பை த பை, சைட் அடிக்கலனாத்தான் ஏதோ பிரச்சினைன்னு அர்த்தம்.
//
தலைவா, இந்த லைன்ல கூட உங்களைக் குறை சொல்லய்யா.. நீங்க சொல்வது போல், அதெல்லாம் இல்லைன்னாத் தான் ஏதோ குறையுது, நார்மல் இல்லைன்னு அர்த்தம்..
கேள்வி, இந்த தீம் எப்படி கையாண்டிருக்கீங்க என்பது தான்..

எனிவே.. இதுக்கெல்லாம் கரையோரம் படிக்க மாட்டேன், எழுத்தாளர் சரியில்லைன்னெல்லாம் நான் சொல்லலை.. அப்படிச் சொல்றவங்களை ஒப்புக்க முடியாது.

சரி சரி, முதல்ல இந்த தர்ட் அம்பையர் எல்லாம் வெளில அனுப்புங்க... எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசித் தீர்த்துக்கலாம் :)

Udhayakumar said...

நான் தர்ட் அம்பையரா இங்க வரலை...

//ம்ம்.. இதைப் படிச்சி எல்லாம் நான் என்னோட அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில்லை.. ஆனா, அப்படி உருவாக்கிக் கொள்ளக் கூடிய பெண்களும் இருப்பாங்க.. அவங்களையும் மனதில் வைத்து நம்ம எழுதணும்.
//
ஊரில ஆயிரம் சினிமா போஸ்டர் ஒட்டியிருக்கும். அறைகுறை ஆடையுடன் ஒரு பொண்ணு மேலே ஏறி கிழிக்குது, அதை ஊர் கூடி வேடிக்கை பார்ப்பது அந்த பெண்ணின் தைரியத்துக்காக இல்லை... (உபயம்:- ரமணா). நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி தெரிங்சுக்கற அளவுல பிளாக் வாசிக்கும் பெண்கள் இல்லை...

மன விகாரம், அழுக்கு ன்னு என்ன பேர் வேணா வைச்சுக்கலாம், ஆனால் அதெல்லாம் உண்மையில்லைன்னு சொல்ல முடியுமா???

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்... இது இவரோட ஸ்டைல்ன்னு தூர ஒதுக்குவதும், பூதக் கண்ணாடி கொண்டு எந்த அளவு ரீச் ஆயிருக்குன்னு முடிவு கட்டுவதும் அவரவர் விருப்பம்.

//அதே ஒரு பெண் ஆணைப் பார்த்து விசில் அடித்தால்....அந்தக் காட்சியின் பரிமாணம் பல நிறங்களில் மாறும். //

இதையும் ஒத்துக் கொள்கிறேன்.

We The People said...

குப்பு கலக்கீட்டீங்க! நல்லா இருக்கு கதை, நம்ம குமுதம் பத்திரிக்கையில வர ஒரு பக்க கதைமாதிரி.

//*
//இதை விடத் துணிச்சலான நேர்மையான பதிலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா? //
உங்க நேர்மையைப் பாராட்டணும்னு நினைக்கிறீங்களா? ஏனோ என்னால முடியலை.. நீங்க நேர்மையா எழுதி இருக்கலாம்..*//


ஆனா வக்கிரமத்தின் வெளிப்பாடு கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது தல!

பொன்ஸ் சொல்லறது கரெட்டு தான தல. என்னாலயும் இந்த நேர்மையை ஏற்றுக்கொள்ள முடியல...


பொன்ஸ்

//* இதைப் பார்த்து நாலு பேர் அதே நேர்மையைக் கடை பிடிக்கிறேன்னு இதுவரை (உங்க அளவுக்கு விஸ்தாரமா) சைட் அடிக்காதவன் எல்லாம் அதைச் செஞ்சிட்டு இப்படி ஒரு நேர்மையான கதை எழுதுறேன்னு ஆரம்பிச்சா?*//

"My Experiments with Truth" கூட இது போன்ற வக்கிரமத்தின் வெளிப்பாடு தான் அதை மக்கள் ஏத்துக்கலயா!! என்னால ஏத்துக்க முடியல அது வேற விசயம்.

//*ஒரு நேர்மையான கதை எழுதுறேன்னு ஆரம்பிச்சா?*// அடுத்த சத்திய சோதனை ரெடி!!!

Kuppusamy Chellamuthu said...

ஆகா, சக பதிவர்கள் தருகிற ஊக்கத்தைப் பார்க்கும் போது 'மனதின் விகாரம்' அது இதுன்னு பேசி ரொம்ப டிஃபன்சிவ் ஆக போய்ட்டனோன்னு தோணுது. :-)

விகாரம், உண்மை எல்லாம் தான்டி இதுல நிறைய விஷயம் இருக்குன்னு ஒருத்தர் சொன்னார். மார்டன் ஆர்ட் பெயிண்டிங் மாதிரி வரையறவனுக்கே தெரியாத புரிதல்கள், ரசிப்பவர் பார்வையில்.

கண்ணன், முத்து, பிரதீப், சிபி ஆகியோருக்கு நன்றிகள்.

விவாதப் பொருளை மிக்கியமான கோணத்தில் பார்க்க உதவிய சதயம், ராகவன் ஆகியோரின் பக்குவத்திற்கும் வேறென்ன நன்றிகள் தான்.

"My Experiments with Truth" ரேஞ்சுக்கு சீர்தூக்கிப் பார்த்த வீ த பியூப்பிள், இகாரஸ் பிரகாஷ், மனிதின் ஓசை அந்தருக்கு சால தேங்க்சண்டி (ஒரு சேஞ்சுக்கு தெலுங்கில்)

பொன்ஸ் , நாம அவுட் ஆஃப் த கோர்ட் செட்டில்மென்ட் செய்துக்கலாம்.

பொன்ஸ்~~Poorna said...

குப்பு,
நம்ம கோர்ட்டுக்கு வெளில பேசிக்கலாம், ஆனா எனக்குப் பதில் சொன்ன சிலருக்கு ரெண்டு வார்த்தை, உங்க அனுமதியோட:

சதயம்,
//எதையும் நாம் எடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது...இதை படித்து முடிக்கும் போது உங்கள் மனதில் ஹாஸ்ய உணர்வும் முகத்தில் விஷமச் சிரிப்பும் இருப்பின் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள் எனலாம்.......//
இது உங்க எண்ணம், ஆனா, ராகவன் சொல்லி இருக்கும் பின்னூட்டத்தைப் படிங்க.. அவர் சொல்ல வருவதைத் தான் குப்புசாமி கன்வே பண்ண முயற்சிக்கிறேன்னு சொல்றாரு.. இது எத்தனை பேருக்குத் தோணிச்சு - ராகவனைத் தவிர? அதான் அருள் சொல்வது போல், எல்லாருக்குள்ளும் இருக்கும் விகாரத்தை உரசிப் பார்ப்பதில் தான் இந்த நடை வெற்றி பெற்றிருக்கிறது. ராகவன் மாதிரி எத்தனை பேரால இந்த சரியான புள்ளியைத் தொட முடிஞ்சிது? - அப்கோர்ஸ், என்னையும் சேர்த்துத் தான் சொல்றேன்

உதய்,
// நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி தெரிங்சுக்கற அளவுல பிளாக் வாசிக்கும் பெண்கள் இல்லை...//
அப்போ ப்ளாக் வாசிக்கிற பொண்ணுங்களுக்கு /ஆண்களுக்கு மட்டும் தான் குப்பு எழுதப் போறாரா?

We the people, தலைவா, நீங்க சொல்றது சுத்தமா புரியலை.. குப்புவும் சரிதான், பொன்ஸும் சரிதான், காந்தியும் சரிதான்னு ரெண்டுபக்கமும் தலையாட்டினா எப்படி? :)))

Anonymous said...

கதையப் படிச்சமா ரசிச்சமான்னு இல்லாம, சும்மா கூவிக்கினு.. இன்னா குப்புசாமி கரீக்டா நான் சொல்றது?

முத்து(தமிழினி) said...

பிரச்சினைக்கு பிறகான மீள்வாசிப்பில் இந்த கதையைவிட குப்பு பின்னூட்டத்தில் கூறிய சில கருத்துக்களை நான் ஆதரிக்கவேண்டியவன் ஆகிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//குப்பு பின்னூட்டத்தில் கூறிய சில கருத்துக்களை நான் ஆதரிக்கவேண்டியவன் //

அப்படின்னா, அவுட் ஆப் கோர்ட் போகும்போது கட்டப் பஞ்சாயத்துக்குக் கூட தலைவர கூப்பிட முடியாது :))

//கதையப் படிச்சமா ரசிச்சமான்னு இல்லாம, சும்மா கூவிக்கினு..//
சர்தாம்பா.. இதோ அபீட் ஆய்கினேன்..

Anonymous said...

தலைப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றேன்
படிக்கும்போதும் குழப்பம்தான்
இந்த இழையில் நான் படித்த 2வது கதை இது. கதை எழுதும் திறமை
உங்களுக்கு நிறைய இருக்கு. ஆனாலும்
நல்ல கருவை தேர்ந்தெடுத்து எழுதவும்.
மந்திர சக்தியை நல் வழியில் செலுத்தினால் வெற்றியின் பாதையில் செல்லலாம்

(சுருக்கமாக சொன்னால் இளம் வாலிபர்களுக்கு தீனி போட்டது போல்
உங்கள் இந்த கதை)

---தஞ்சை மீரா

சதயம் said...

பொதுவில் பல விடயங்களில் என் சக வலைப் பதிவர்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு உலகம் இருண்டதாய் தர்க்கம் செய்வதில் எனக்கு ஏமாற்றமே...!

மேலும் மிகச் சில வலைப்பதிவர்களே தங்கள் இமேஜ் பற்றி கவலைப் படாமல் எல்லாத் தளங்களிலும் பயணிக்க முயற்சிக்கின்றனர்....அவர்களை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, கலாச்சார எல்லைக்குள் நின்றுகொண்டு குறை சொல்வதில் எந்த நியாமுமில்லை என நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//பொதுவில் பல விடயங்களில் என் சக வலைப் பதிவர்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு உலகம் இருண்டதாய் தர்க்கம் செய்வதில் எனக்கு ஏமாற்றமே...!
//

நன்றி சதயம்

manasu said...

குப்பஸ்னாலே பங்கு வணிகம் தான் தெரியும். இந்த பதிவு பற்றி தெரியல... அதான் லேட்.

பொன்ஸ்ஸின் கருத்துக்களோடு முழுதாய் உடன்படுகிறேன்.

நீங்கள் சொல்வது போல் எல்லோருக்குள்ளும் இன்னொரு முகம் இருக்கிறது, உண்மைதான்.

எல்லோரும் தான் உறவுகொள்கிறோம் அதற்காக அதை எங்கும் செய்யமுடியுமா?

குப்ஸ்ண்ணா எனக்கென்னவோ கொஞ்சம் ஓவராதான் தெரியுது.

சிபி உங்க தேர்ட் அம்ப்யர் கமெண்ட் சூப்பருங்கோ (இப்பெல்லாம் ஃபோர்த் அம்ப்யர் கூட இருக்கதா சொல்றாங்களே!!!!!)

நாமக்கல் சிபி said...

//முதல்ல இந்த தர்ட் அம்பையர் எல்லாம் வெளில அனுப்புங்க... எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசித் தீர்த்துக்கலாம்//

யாரு பந்து போட்டாலும் எதிர் டீம் காரன் அடிச்சி விளையாடுறப்போ சரி அம்பயரையே கூப்பிட்டு ரெண்டு ஓவர் போடச் சொல்லலாமான்னு கேக்கும் கங்குலியோட கள்ளங்கபடம் இல்லாத வெகுளித்தனம் உங்களுக்கு இல்லைன்னு நினைக்கிறேன் பொன்ஸ்.

Anonymous said...

To me its a gist of playboy story,send it to respective publisher little more details.

Prabhu

Anonymous said...

Even after reading the last line, if you go back and skim the following lines what do you expect the reader should think..,

"மாலதியில் உடல் கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில் தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.

நடந்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன்."

Prabhu

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ், சதயம் அவர்களுக்கு நீங்கள் சொல்லும் நன்றிகள் அனைத்தையும் நானே முன் வந்து ஏற்கிறேன்.

முத்து(தமிழினி) said...

//அம்பயரையே கூப்பிட்டு ரெண்டு ஓவர் போடச் சொல்லலாமான்னு கேக்கும் கங்குலியோட கள்ளங்கபடம் இல்லாத வெகுளித்தனம் //

:))

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
மன்னிக்கவும். எமது தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் கதை போல் எனக்குத் தெரிகிறது.
உங்களைப் போலவோ அல்லது இங்கே உள்ள பல வலைப்பதிவர்கள் போலவோ எனக்குத் தமிழறிவு இல்லை. தப்பாகச் சொன்னால் மன்னித்துக் கொள்ளுங்கள். எதற்கும் இன்னொரு தடவை வாசித்துவிட்டு வருகிறேன்.

நன்றி.

We The People said...

குப்ஸ்,

தல இது ரொம்ப ஓவரு!

//* "My Experiments with Truth" ரேஞ்சுக்கு சீர்தூக்கிப் பார்த்த வீ த பியூப்பிள்*//

என்ன இருந்தாலும் "My Experiments with Truth" அளவுக்கு வக்கிரம் இல்லை உங்கள் "அண்ணியின் அணைப்பில்...."

பொன்ஸ்க்கு உங்கள் அனுமதியோட ஒரு வார்த்தை சொல்லலாமுன்னு இருக்கேன்:

நான் பாராட்டியது, குப்ஸ் எழுத்து நடை மற்றும் அவரது கருவை கையாளும் விதத்துக்கு. ஆனால் கதை கரு மற்றும் அதன் வக்கிர போக்கில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை தெளிவாத்தான் சொல்லிவிட்டேன்னு நினைத்தேன்.சாரி, சரியா எழுதலையோ!

//*ஆனா வக்கிரமத்தின் வெளிப்பாடு கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது தல!

பொன்ஸ் சொல்லறது கரெட்டு தான தல. என்னாலயும் இந்த நேர்மையை ஏற்றுக்கொள்ள முடியல...*//

//*We the people, தலைவா, நீங்க சொல்றது சுத்தமா புரியலை.. குப்புவும் சரிதான், பொன்ஸும் சரிதான், காந்தியும் சரிதான்னு ரெண்டுபக்கமும் தலையாட்டினா எப்படி? :)))*//

இதில் குப்ஸ் & காந்தியின் வக்கிரத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லைன்னுதான எழுதினேன்!!! தவறான கருமம் செய்து அந்த தவறை ஒப்புக்கொண்டால, அவன் நல்லவன் என்று சொல்லுவது உலக மகா தவறு என்பது என் கருத்து.

பொன்ஸ்~~Poorna said...

We the People,
அட, சும்மாத் தாங்க சொன்னேன் :)))
ஸ்மைலி போட்டிருக்கேன்ல, விளக்கமெல்லாம் எதுக்கு.. அட.. ஃப்ரியா விடுங்க :)))

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

நமக்கு (தனக்கு/எனக்கு ) பிடிக்காத விஷயங்கள் என்பதற்காக அவை உலகத்தில் இல்லை என்று சொல்ல முடியாது.

கதையில் வெளிப்படும் பாலியில் வர்ணனைகள் நிச்சயம் இரண்டு பெண்களுக்கு இடையே உடல்ரீதியான கவர்ச்சி/ஈடுபாடு இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அப்படியே அதை விட்டிருந்தால் இது ஒரு Bisexual கதையாக இருந்திருக்கும்.

அப்படியே விட்டிருந்தாலும் தவறு இல்லை.உறவின் இன்னொறு இருண்ட பகுதியை ஆசிரியர் சொல்லியிருக்கிறார் என்று விட்டிருக்கலாம். இது உலகில் இல்லை என்று சொல்ல முடியாது.(Just because I hold an opinion about sex I can not say other things doesn’t exist in the world)

குப்ஸ் எங்கே திணறுகிறார்....

பாலியல் கவர்ச்சி உள்ளது எனற உண்மையை அப்படியே முடிக்காமல் ஏதோ இரு பெண்களும் தேம்பித்தேம்பி அப்பாவியாய் அழுவது போன்று முடித்திருப்பது வாசகனை முட்டாளாக்க.அல்லது வாசகனை ஏமாற்ற "...பார்த்தாயா நீ ஆண் என்று நினைத்தாய் அப்படி இல்லை கதையின் நாயகி பெண்தான்....அவர்களுக்கு இடையில் அப்படி ஒன்றும் இல்லை"

உண்மையில் இரு பெண்களும் பாலியல் கவர்ச்சி இல்லாமல் இவர்களைன் உறவு ஒரு அழகான அண்ணி சராசரி் நாத்தனார் என்ற அளவில் இருந்திருந்தால் இந்த "தேம்பித்தேம்பி அப்பாவியாய் அழுவது " எடுபட்டிருக்கும். அப்படியிருப்பின் இந்த அளவு பாலியில் வர்ணனைகள் தேவை இல்லை.

அண்ணி பிடிக்கும்..
அழகானவள்..

போன்ற இயல்பான வர்ணனைகள் போதும்...

//"மாலதியில் உடல் கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில் தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.

நடந்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன்."//

இது தேவை இல்லாதது.

குப்ஸ் சொல்ல நினைத்தை சொல்லாமல் சமரசம் செய்து கொண்டார் அல்லது சஸ்பென்ஸ் கொடுக்கிறேன் என்று சறுக்கிவிட்டார்.ஆண்/பெண் பால் சஸ்பென்ஸிற்கு இந்த பாலியல் வர்ணனை tooooooooooooo much.,

==========

Culture is an outsider's view of what the insider produces.

Generalization:
Do not assume that because you hold an opinion, the same is true of the rest of the world. If you write, "Nobody thinks smoking is acceptable any more," you will undoubtedly be assaulted by a mob of irate tobacconists. You must be aware of the circumstance and be more precise: "Nobody in my class thinks smoking is acceptable."

You must be careful not to assume that what applies to one situation always applies to another.

A hasty generalization will draw a conclusion from an insufficiently representative source; for example, a survey of one state might produce the information that 90% had read Da Vinci Code. One could not assume, however, that ninety percent of all country people had read it.

செந்தழல் ரவி said...

போலியார் கதையோ என்று தான் நினைத்தேன்....எப்படி எ.ஜே.சூர்யா படத்தை குடும்பத்தோட பார்க்கும்போது நெளிவோமோ அந்தமாதிரி இருந்தது...

நான் நெளிவதில்லை...

Kuppusamy Chellamuthu said...

தஞ்சை மீரா, தார்மீக ஆதரவளித்த தமிழினி, தாங்கிப் பிடித்த சதயம், குசும்பு பண்ணும் சிபி, ஒவர்னு காதை கிள்ளிய மனசு, கடிந்து கொண்ட பிரபு, வருத்தப் பட்ட வெற்றி, ஃபீல் பண்ணிக் கண்ணுல தண்ணி வர வச்ச வீ த பீப்பிள், வழக்கம் போல பொன்ஸ்..எல்லோருக்கும் நன்றிகள்.

கல்வெட்டு, என்ன ஒரு திறனாய்வு!!. இதை விட எனக்கு மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இருக்க இயாலாது. இந்தக் கதைக்குப் பல தளங்களில் இருந்து விஷ்யங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. அதையெல்லாம் விளக்கிச் சொன்னால் தேவையிலாத விவாதங்கள் வளரும். சறுக்கியதாகச் சில விஷயங்களைச் சொன்னீர்கள்.

சில விஷயங்கள் சொல்லப் பட்டன. சில விஷ்யங்கள் யூகத்திற்கு விடப் பட்டன.

அவர்களுக்கு இடையில் ஏதாவது இருந்ததா என்பது எப்படி தெளிவாகச் சொல்லப்படவில்லையோ அதே மாதிரி //அவர்களுக்கு இடையில் அப்படி ஒன்றும் இல்லை// என்பதும் சொல்லப்படவில்லை. சிலர் வருத்தப்பட்டது போல பல விஷங்களை கதை 'கண்வே' செய்யாமல் இருந்திருக்கலாம். நீங்கள் சொல்வது போல சறுக்கியிருக்கலாம். இருப்பினும், ரொம்ப வெளக்கியிருந்தா, கோனார் உரை லெவலுக்குக்த் தான் இருந்திருக்கும்னு எனக்குப் படுதுங்க.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//அவர்களுக்கு இடையில் ஏதாவது இருந்ததா என்பது எப்படி தெளிவாகச் சொல்லப்படவில்லையோ அதே மாதிரி//

நான் இங்கே மாறுபடுகிறேன்.
உங்களின் வர்ணனைகள் அவர்களுக்கிடையில் "பாலியல் கவர்ச்சி/தொடர்பு" உள்ளது என்பதை தெளிவாகச் சொல்கிறது. பட்டும் படாமல் சொல்லவில்லை. பட்டென்றே சொல்கிறது :-)

//அவர்களுக்கு இடையில் அப்படி ஒன்றும் இல்லை// என்பதும் சொல்லப்படவில்லை. ////

அவர்களுக்கு இடையில் அப்படி ஒன்றும் இல்லை என்பதை சொல்லும் முயற்சியே (அல்லது வாசகனை நம்ப வைக்கும் அல்லது சஸ்பென்ஸ்) அப்பாவி அழுகை முடிவு.

//ரொம்ப வெளக்கியிருந்தா, கோனார் உரை லெவலுக்குக்த் தான் இருந்திருக்கும்னு எனக்குப் படுதுங்க.//

:-)))

enRenRum-anbudan.BALA said...

Nice story ! Nice twist in the end !!!

vAzthhtukkaL.

enRenRum anbudan
BALA

முத்து(தமிழினி) said...

90 கிராஸ் ஆனால் சொல்லவும்
:))

ஜோ / Joe said...

கல்வெட்டின் கருத்துக்களோடு உடன் படுகிறேன்.

Kuppusamy Chellamuthu said...

சொல்றேன் Muthu, if at all it happens..

//கல்வெட்டின் கருத்துக்களோடு உடன் படுகிறேன்// ஆகட்டும் ஜோ.

நன்மனம் said...

// முத்து(தமிழினி) said...
90 கிராஸ் ஆனால் சொல்லவும்
:))//

போனி பண்ணதுக்கு குப்ஸ் அடிக்காம இருந்தா சரி.:-))

// Udhayakumar said...
மல்கோவா மாமி, ஆப்பிள் ஆன்ட்டின்னு எழுதராரே செருப்பு, சீமாருன்னு வரும்ன்னு பார்த்து வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்கப்பா..//

பின்னூட்டம் எல்லாம் படித்தாயா!!இதுக்கு தானே ஆசைபட்டாய் உதை:-))

Kuppusamy Chellamuthu said...

அவரு உதை இல்லீங்க. உதய்.

Udhayakumar said...

நன்மனம், சந்தோஷம், மகிழ்ச்சி, ஞாபகப் படுத்துனதுக்கு... பல ஆங்கிள்ல விவாதம் போகுது. புதிது புதிதான வார்த்தைகள் (எனக்கு), புதிது புதிதான மனிதர்கள்ன்னு நல்லாத்தான் இருக்கு.

ஆனா, ஒன்னும் மட்டும் உறுதி... இது 100-ஐ தாண்டும்..

Udhayakumar said...

குப்ஸ், என் பேரை கொலை செய்ய ஒரு கூட்டமே திரியுது. அதுல நன்மனமும் , பொண்ஸ் மட்டும் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யறாங்க...

ஜொள்ளுப்பாண்டி said...

அடடா குப்ஸ் அண்ணா நீங்களா இது !!!(ஆச்சரியக்குறி ) :))

என்னடாது கரையோரம் கும்பல் அதிகமா இருக்கே மீனுகீனு விக்கறாங்களோ கூச்சல் வேற ஜாஸ்த்தியா இருக்கேன்னு இனிக்குதான் ஒதுங்கினேன்.
தலைப்பை பார்த்தேன் ! என்னவோ எலக்கியம் போலன்னு அப்படியே மேஞ்சேன் ! குஜால்ஸா இருக்கு !

கவர்ச்சியா கதை அமைச்சதுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்! கவர்ச்சிக்கும் ஆபாசத்திர்க்கும் நெறையா வித்தியாசம் இருக்கு. இந்தக்கதை கவர்ச்சின்னுதான் எனக்குப் படுது ! :))

ஒரு நெருடலான கருத்தை உங்க திறமையான எழுத்தால் நல்லா சொல்லியீருக்கீங்க !

We The People said...

//*ஃபீல் பண்ணிக் கண்ணுல தண்ணி வர வச்ச வீ த பீப்பிள்*//

சாமி என்னை விட்டுவிடு, உங்க வழிக்கே நான் இல்லை! என்னால பாவம் உங்க கண்ணீர் வீன்னாக வேண்டாம்!

ஐயோ பாவம்!!! (மும்தாஜ் styleல)

அடுத்த கதை எப்போ!! ;)

Anonymous said...

I am female blogger. I do not want to reveal my face and name. These things are not strange in India. There were some of my class mates in college hostel who moved close. Later only we all came to know the level of relation they had. I stand by the writer of this story.

Kuppusamy Chellamuthu said...

செந்தழல் ரவி & என்றும் அன்புடன் பாலா இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

ஜொல்லுப்பாண்டி வாய்யா.. நீங்க எல்லாம் சும்மா இருந்தா உங்க வேலைய நாங்க பண்ண வேண்டி இருக்கு.

//கவர்ச்சிக்கும் ஆபாசத்திர்க்கும் நெறையா வித்தியாசம் இருக்கு. இந்தக்கதை கவர்ச்சின்னுதான் எனக்குப் படுது ! :))//
அதே.. உங்கள் கலை ரசனை எனக்குப் புரியாமையா இருக்கும் ? எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :-)

பொன்ஸ்~~Poorna said...

உதய் அண்ணாச்சி,

பேர் வச்ச வாத்தியாரைச் சொல்லாம மறந்துட்டீங்களே!!!
- பொன்ஸ்

Btw, கல்வெட்டு (பலூன் மாமா)வின் கருத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. நல்ல தெளிவான (எனக்குப் பல விஷயங்களைத் தெளிவாக்கிய) பின்னூட்டம்.. நன்றி! (உங்களை ஏங்க அப்படிக் கூப்பிடறாங்க? )

கோவி.கண்ணன் said...

வாயை பிளக்க வைச்சிட்டிங்க ... 85 பின்னூட்டங்களா ... அண்ணியின் அணைப்புக்கு ஆதாரவைப் பார்க்கும் போது. 'அந்த' கதைகளுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது என்பது புரிகிறது. குப்ஸ் நடத்துங்க நடத்துங்க.

பொன்ஸ்~~Poorna said...

பை த பை குப்பு மற்றும் எல்லா அம்பயர்களுக்கும்,
இந்தப் பதிவுக்காக குப்புவுக்கு என் சார்பா ஒரு வாழ்த்து ..

குப்பு,
அம்புட்டுத்தாங்க.. நம்ம மொய் இத்தோட தீர்ந்துது.. இனிமே உங்களை 90க்குக் கூட்டிப் போக வேற யாராவது வராங்களான்னு பார்க்கணும் ;)

Udhayakumar said...

பொன்ஸக்கா, பொண்ஸ் என நான் சொன்னதில் எழுத்துப்பிழை இல்லை... சும்மா, என் லெவெலுக்கு எதோ...

நன்மனம் said...

Next comment is 91 :-)

Kuppusamy Chellamuthu said...

//அடுத்த கதை எப்போ!! ;) // வீ த பீப்பிள், என்னது அடுத்த கதையா?? நல்ல கதையா இருக்கே..

பொன்ஸ்..என்ன என்ன்வ்வோ பெசறீங்க. பலூன் மாம, பேரு வெச்ச வாத்தியார்.. நாங்க பிளாக்ல பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த விஷ்யங்கள் போல இருக்கு..

Ravi said...

I dont understand why Kuppusamy is behind numbers, number of comments ;-)

Nanmanam, you are wrong. Next comment will be 93.

Kuppusamy Chellamuthu said...

//'அந்த' கதைகளுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது என்பது புரிகிறது.// :-)

உங்க பதிவு பாத்தேன் கோவி.கண்ணன். அங்கே வற்றேன்..

//பொண்ஸ் என நான் சொன்னதில் எழுத்துப்பிழை இல்லை... // கருத்துப் பிழை.

நன்மனம் said...

Ravi, the things to be discussed about this Story has been discussed. There should be some fun also inbetween and these comments about numbers is just for fun and i could see that these have not in any way influenced the person who is willing to comment genuinely. That is the spirit and Kupps is not behind numbers, it is people like me who are doing this fun.

Kuppusamy Chellamuthu said...

நன்மனம், விட்டுத் தள்ளுங்கப்பு.

குறிப்பா அந்த பெயர் சொல்ல விரும்பாத பெண் பதிவர்.
//These things are not strange in India. There were some of my class mates in college hostel who moved close. Later only we all came to know the level of relation they had// செஞ்சுரி விளையாட்டில் அதை நான் மறக்க விரும்பவில்லை.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

பலுன்மாமா என்னுடைய இன்னொரு பதிவு http://balloonmagic.blogspot.com

அதுதான் கல்வெட்டு (எ) பலூன்மாமா .I am a child entertainer :-) வேற இரகசியம் இல்லை

Kuppusamy Chellamuthu said...

கல்வெட்டு, உங்க பதிவு தெரியும். அதுக்கு பேர்க் காரணம் தான் தெரியாம்ம இருந்தேன்.

அனிவே, இட் இஸ் 97 நாட் அவுட்..

தயா said...

கதையை படித்துவிட்டு விட்டுவிட்டேன். 97 மறுமொழியை படித்தவுடன் தான் கதையில் உள்ள ட்விஸ்ட்டே புரிந்தது. (அப்படி ட்விஸ்ட் இருக்கிறதா என்ன?)

மீண்டும் ஒரு தடவை படித்ததேன். கதை சொல்பவரின் பால் எங்கேயும் வெளிப்படவில்லை. அது பெண் தான் என எப்படி முடிவு கட்டுவது? அவருக்கு கல்யாணம் செய்துவைக்கிறார்கள் என்பதாலா? மணவறையில் அண்ணியை கட்டிபிடிப்பதாலா?

குப்பு "கதையில் பாலியல் கவர்ச்சி கூட சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது" என்ற வாக்குமூலத்தில் உண்மையில்லை.

க்ளைமாக்ஸை படித்தவுடன் இப்படிக்கூட ஏமாத்தலாமா என்ற உணர்வு தான் எனக்கு தோன்றியது. இதெல்லாம் சகஜம்பா! கண்டுக்காதீங்க! என்ற ரீதியில் தான் கதையின் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

மற்றபடி "பலான" கதையை படித்த உணர்வு இருந்தது.

Kuppusamy Chellamuthu said...

நன்றிங்க தயா. //மற்றபடி "பலான" கதையை படித்த உணர்வு இருந்தது.// படிக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். நிறைய விவாதங்கள் முடிந்துவிட்டன. உங்கள் கருத்தையும் அதற்கு எதிரான கருத்தையும் பலர் பிரதிபலித்துள்ளனர். எனவே, நான் இப்போது என்ன சொன்னாலும் மறு ஒளிபரப்பு மாதிரித் தான் இருக்கும்.

manasu said...

வெற்றி வெற்றி.......அண்ணியின் வெற்றி,குப்ஸின் வெற்றி.....100 நாட் அவுட்!!!!!!

//கவர்ச்சிக்கும் ஆபாசத்திர்க்கும் நெறையா வித்தியாசம் இருக்கு. இந்தக்கதை கவர்ச்சின்னுதான் எனக்குப் படுது //

ஜொ.பா எந்த நடிகைக்கு மேனஜாரா இருக்கீங்க??? கவர்ச்சி, ஆபாசம் விளக்கமெல்லாம் சூப்பர்!!!

குப்ஸ் அண்ணா என்னதான் 100 நாட் அவுட்னாலும், இது கரையோரத்தின் "கறை" தான்.

பொன்ஸ்க்கு தாங்ஸ் சொல்லுங்க 10 ரன் அவுங்கதுதான்.

Kuppusamy Chellamuthu said...

மனசே மனசே.. தலைவி அண்ணி, அண்ணியின் ரசிகர்களாகிய நாம், அவரது பகழ் தூற்றும் எதிர் மன்றத் தலைவி பொன்ஸ் (பாதுகாப்புக்காக 2 ஸ்மைலி :-))) போட்டுக்கறேன்) என அனைவருமே இந்த வெற்றியில் பங்கு கொள்கிறோம்.

பிரேமா said...

அடப்பாவமே.....பேச வரைக்கும் பேசிக்கிட்டு கடைசியில பாதுகாப்பு வேற இல்லைங்கிறீங்களே...

சதயம் said...

102 Notout.......Nice

விழுந்து விழுந்து கதைய படிச்சிட்டு....ஹி..ஹி...எல்லாருக்கும் முகமூடிகள் தேவைப்படுது.

குற்ற உணர்ச்சிகள்தான் எதிர்மறை கருத்துக்களா வருதோன்னு கூட தோணுது.

அப்புறம் நான் புதுசா ஒரு தளத்தினை வலையேற்றியிருக்கேன்...வந்து பார்த்து உங்கள் பொன்னான ஆதரவினை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

யோவ் குப்பு, பேசாம பங்குச் சந்தை வேலைய பாருய்யா.

உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? மார்க்கெட்டு சரியும்போது நடிகைகள் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதுபோல உங்கிட்ட என்ன சரக்கு தீந்திபோச்சா?

கோவி.கண்ணன் said...

'அந்த' மாதிரி கதைகளுக்கு எங்க வெப்சைட்டில் சென்ற மூன்று நாளாக ஹிட் குறைஞ்சிடிச்சின்னு உங்களையும், என்னையும் ஒருத்தர் இவந்து பின்னுட்டத்தில் திட்டிட்டு போறார். அழித்துவிட்டேன்

செல்வன் said...

அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
ரகசிய பேச்சு அம்பலம் ஆச்சு
அதை எண்ணி தவித்தாளே
குவா,குவா...

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் பாட்டு.கதைக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை சாமியோவ்....

நாராயண,நாராயண..

த.அகிலன் said...

நல்லா இருக்குது சார்
அன்புடன்
த.அகிலன்

கானா பிரபா said...

குப்புசாமி, பின்னீட்டிங்க போங்க :-))

கோவி.கண்ணன் said...

'குப்ஸ்' உங்கள் பாதையில் ஒரு அடியை வேகமாக வைத்துவிட்டேன் ... இப்போது பந்து உங்கள் பக்கம் இருக்கிறது
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_115217163398482455.html

நாமக்கல் சிபி said...

தேர்ட் அம்பயர் எஸ்கேப்!

இளவஞ்சி said...

111 !

இதுக்குமேலயும் என் பொன்னான கருத்துக்களை சொல்லலைன்னா நல்லா இருக்காது!

அண்ணன் கல்வெட்டின் கருத்துக்களை வழிமொழிகிறேன்! ஹிஹி...

(கல்வெட்டு, என்னங்க ரொம்பநாளா ஆளைக்காணோம்?! :) )

Kuppusamy Chellamuthu said...

//அடப்பாவமே.....பேச வரைக்கும் பேசிக்கிட்டு கடைசியில பாதுகாப்பு வேற இல்லைங்கிறீங்களே...// பிரேமா.. தோடா எதிரணித் துணைத்தலைவி

//யோவ் குப்பு, பேசாம பங்குச் சந்தை வேலைய பாருய்யா.// சரிங அனானி..நீங்க சொல்லிச் செய்யாம இருக்க முடியுமா..?

கோவி.கண்ணன்..ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.. கலக்குங்க..உங்கள் பதிவுகள் பாத்தேன்.. நிறைய தைரியம் தான் போங்க..

நன்றி செல்வன், அகிலன் மற்றும் கானா பிரபு.

//தேர்ட் அம்பயர் எஸ்கேப்!// :-)

Kuppusamy Chellamuthu said...

மன்னிக்கவும் கானா பிரபா.. அவசரத்தில் கானா பிரபுன்னு டைப் ஆகிடுச்சு.

//இதுக்குமேலயும் என் பொன்னான கருத்துக்களை சொல்லலைன்னா நல்லா இருக்காது!//வாத்தியார் கருத்து எல்லாம் பசங்க என்னைக்கு கேட்டு இருக்கோம்.. :-)

கல்வெட்டை அகழ்வாராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதான் ரொம்ப நாளாக் காணோம்.

நாமக்கல் சிபி said...

//இப்போதெல்லாம் குளிக்கும் போது என் அனுமதி இல்லாமலே உள்ளே நுழைந்து முதுகு தேய்க்க வருகிறாள். அவள் முன்னால் உடை மாற்றும் போது சிரித்துக் கொண்டே அங்கீகரிக்கிறாள். என் தேக இளமையை மாலதி ஓரக்கண்ணால் இரசிப்பது தெரிந்தே தான் அப்படிச் செய்கிறேன்.
அண்ணி குளித்து வந்ததும் பிரா, ஜாக்கெட் கொக்கி மாட்டி விட என்னை அழைப்பது இயல்பான ஒர் சங்கதியாகி விட்டது. குளித்த ஈரம் காயாத முதுகுப் பரப்பு....அடடா.. ஸ்லீவ்லெஸ் நைட்டி எப்போவதாவது தான் அணிவாள். மொழு மொழு தோள்களைத் தடவிப் பார்க்க ஆசை அப்போதெல்லாம் தலையெடுக்கும்.
//

இந்த வரிகள் கொஞ்சம் ஓவர் டொஸ்.

முத்து(தமிழினி) said...

//தேர்ட் அம்பயர் எஸ்கேப்!//

hehe sibi..third umpire usually sits in pavilion..in case of need he will respond..


குப்பு, அழுத்தி புடிங்க..200 வர வரவரைக்கும் விட மாட்டோம்..

முத்து(தமிழினி) said...

//தேர்ட் அம்பயர் எஸ்கேப்!//

hehe sibi..third umpire usually sits in pavilion..in case of need he will respond..


குப்பு, அழுத்தி புடிங்க..200 வர வரவரைக்கும் விட மாட்டோம்..

மனதின் ஓசை said...

//குப்பு, அழுத்தி புடிங்க..200 வர வரவரைக்கும் விட மாட்டோம் //

சரி. அதுக்கு இப்படி ரெண்டு ரெண்டா பின்னூட்டம் போடனுமா? :-)

மனதின் ஓசை said...

//குப்பு, அழுத்தி புடிங்க..200 வர வரவரைக்கும் விட மாட்டோம் //

சரி. அதுக்கு இப்படி ரெண்டு ரெண்டா பின்னூட்டம் போடனுமா? :-)

Kuppusamy Chellamuthu said...

//சரி. அதுக்கு இப்படி ரெண்டு ரெண்டா பின்னூட்டம் போடனுமா? :-) //

பிளாக்கர்ல ஏதோ பிரச்சினைன்னு நினைக்கறேன் மனதின் ஓசை. உங்க பின்னூட்டம் கூட ரண்டு வந்துருக்கு. சுயநலம் கருதி இரண்டையும் பிரசுரிக்கிறேன்.

மனதின் ஓசை said...

//third umpire usually sits in pavilion..in case of need he will respond..//

ஊடால வராத....ஓரமா போய் குந்திக்கினு கட-ன்னு சொல்றீங்களா? அதுவும் சஙத்த்து தளபதி சிபிய பாத்து...
இன்னா தகிரியம் உங்களுக்கு....

மனதின் ஓசை said...

//பிளாக்கர்ல ஏதோ பிரச்சினைன்னு நினைக்கறேன் மனதின் ஓசை. உங்க பின்னூட்டம் கூட ரண்டு வந்துருக்கு.//

அடடா..இப்படி இருக்கியளே... ஒரு பிரச்சினையும் இல்ல சாமி... வெணும்னுதான் ரெண்டு தடவ பொட்டேன்.. இப்படி விளக்கம் சொல்ல வச்சிட்டியளே...சரி.. ஏதொ நம்மாள முடிஞ்சது..121 ஆச்சா?

மனதின் ஓசை said...

//சுயநலம் கருதி இரண்டையும் பிரசுரிக்கிறேன். //

அது...

122ஆ?

இதெல்லாத்துக்கும் ஒழுங்கா பதில் சொல்லுங்க..

நாமக்கல் சிபி said...

////ஊடால வராத....ஓரமா போய் குந்திக்கினு கட-ன்னு சொல்றீங்களா? அதுவும் சஙத்த்து தளபதி சிபிய பாத்து...
இன்னா தகிரியம் உங்களுக்கு....
//

ஆஹா! இங்க கூட நமக்கு ஆளுக இருக்காங்களா! தம்பி ஓசை! சங்கக் கடமையெல்லாம் தலையோட வெச்சிக்கணும். தளபதிக்கெல்லாம் கொண்டு வரக் கூடாது!

இங்க வந்து கதைய மறுபடி முழுசா படிச்சதினால எதுக்குடா வம்புன்னு எஸ்கேப் ஆயிக்கினிருக்கேன். இப்ப வந்து தகிரியம் அது இதுன்னு சொல்லி நம்மளை உசுப்பேத்தி விட்டுறாதப்பூ!

முத்து(தமிழினி) said...

//ஊடால வராத....ஓரமா போய் குந்திக்கினு கட-ன்னு சொல்றீங்களா? அதுவும் சஙத்த்து தளபதி சிபிய பாத்து...
இன்னா தகிரியம் உங்களுக்கு.... //


ஹிஹி ..தளபதி அத்தெல்லாம் சங்கத்தோட..இங்க எங்களுக்குல்ல தனி கணக்கு....(ஓரே ஊருக்காரவங்க)

123

மனதின் ஓசை said...

//ஆஹா! இங்க கூட நமக்கு ஆளுக இருக்காங்களா! தம்பி ஓசை!//

அண்ணா...சொல்லுங்கண்ணா...

//சங்கக் கடமையெல்லாம் தலையோட வெச்சிக்கணும். தளபதிக்கெல்லாம் கொண்டு வரக் கூடாது! //

ஓஹோ.., அது தலயோடவா.. நான் தளயோடயோன்னு நினைச்சிட்டேங்ணா.. ..
(அதெல்லாம் சரி.. நீங்க அஞ்ஜாவது, ஆறாவது ஆள் தேடறதா ஆறுல சொன்னிங்களே.. அதுக்கு நம்மள பிடிச்சி போட்டுடாதீங்கப்பூ...)

// இப்ப வந்து தகிரியம் அது இதுன்னு சொல்லி நம்மளை உசுப்பேத்தி விட்டுறாதப்பூ!/

சங்கத் தளபதின்னு நிரூபிச்சிட்டீங்க..:-)

மனதின் ஓசை said...

//ஹிஹி ..தளபதி அத்தெல்லாம் சங்கத்தோட..இங்க எங்களுக்குல்ல தனி கணக்கு....(ஓரே ஊருக்காரவங்க)//

என்னா முத்து பெரிய ஊரு.. நாங்க எல்லம் ஒரே குடும்பத்துகாரங்க தெரியுமா..போன பின்னூட்டத்த பாருங்க தெரியும்... :-)
தப்பு தப்பா சொல்றீங்களே முத்து..அது 123 இல்ல 124 :-)

தள.. இப்படி யெல்லாம் தனிக்கூட்டு வச்சிக்கப்படாது..ஆமாம்...

Kuppusamy Chellamuthu said...

ஆஹா..உங்க சண்டையத் தீக்கவே ஒரு ரெ·ப்ரி வேணும் போல இருக்கே..

//இப்ப வந்து தகிரியம் அது இதுன்னு சொல்லி நம்மளை உசுப்பேத்தி விட்டுறாதப்பூ!//

தளபதி விகடகவி ரூட்ல போற மாதிரித் தெரியுது... :-)

முத்து(தமிழினி) said...

மனதின் ஓசை.

ஹிஹி..என்னுடைய டபுள் காமெண்ட்டில் ஒன்றை கழித்து கணக்கு போட்டிருக்கேன் :))என் வழி தனி வழி..

குடும்ப சண்டையை குடும்பத்தோட வைச்சிக்குங்க :))

Prabu Raja said...

போலியார் கதை யார் யார் படிச்சாங்கன்னு வந்திருக்கற பின்னூட்டங்கள வச்சி ஒரு லிஸ்ட்டு போடுங்க பாப்போம்.
;)

Anonymous said...

Good Lesbian story!!!!!!!!!!! Being man(??), You r able to show a woman's feeling

Regds
The Critic

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

உயிர் படத்தைப் பத்தி ஆளாளுக்குப் பேசிக்கறாங்களே அதப் பத்தித்தான் எழுதிருக்கீங்கன்னு வந்து பாத்தா சரியான நச் சிறுகதை. கடைசி வரியில் புதிர் விடுபடும் உத்தியை நிறையப் படித்திருந்தாலும் இதையும் ரசிக்க முடிந்தது.

கச்சிதமான சிறுகதை.

பாராட்டுகள்.

தொடர்ந்து எழுதுங்கள் (வேறு வித்தியாசமான கதைக் களன்களை எடுத்துக் கொண்டு).

பொன்ஸ்~~Poorna said...

குப்புசாமி, அதென்ன, ரக்ஷா பந்தனும் அதுவுமா இந்தப் பதிவு முழிச்சிகிட்டிருக்கு? :))))

Kuppusamy Chellamuthu said...

பிரபு ராஜா, அனானி விமர்சக அய்யா & சுந்தர், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

Kuppusamy Chellamuthu said...

//அதென்ன, ரக்ஷா பந்தனும் அதுவுமா இந்தப் பதிவு முழிச்சிகிட்டிருக்கு? :))))//

:-))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//குப்பு, அழுத்தி புடிங்க..200 வர வரவரைக்கும் விட மாட்டோம்..//
அது தானே... இப்பதான் இந்த பக்கமே பார்க்கிறேன்.
பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்.
தல சொன்னதுக்காக.. இந்த பின் ஊட்ட்டம்.. :))))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

செக்ஸ் தாத்தா சுஜாதா... தமிழுக்கு அறிமுகப்படுத்திய நடை என்று நினைக்கிறேன்.
கதையை பாதி வாசிக்கும் போதே முடிவை யோசிச்சாச்சு...
ஆனாலும்.. இந்த கதையின் நடையின் எனக்கு உடன்பாடு இல்லை.
மனித உறவுகளை பக்கம் பக்கமாய் காலி செய்து விட்டு, மனைவியோடு மட்டும் உறவு கொள்ளுங்கள் என்று சொல்லும் மஞ்சள்(அது ஏங்க அப்படி சொல்லுகிறார்கள்..?) பத்திரிக்கையின் சமூக நோக்கு எப்படி பாராட்டத்தகுந்தவையாக இருக்கமுடியும்..?
சமூகத்தில் பாலியல் தொழிலை ஒழித்து அம்மக்களுக்கு அதிலிருந்து விடுதலையோ, மாற்று வழியோ செய்து கொடுக்காமல்.. அவர்களுக்கு அடையாள அட்டையும், ஆண்களுக்கு காண்டம் குறித்த அறிவுரையும்.. எப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவோ...
அப்படித்தான் உங்களின் இந்த படைப்பும்..
(மற்றவைகளைப் படித்தபின்..தனியே..)

தமிழன் said...

அருமையான கதை உயிர் படத்தின் சாயல் அடித்தாலும் கிளைமாக்ஸ்கலக்கலாயிருக்கு.
இன்னும் நிறைய இப்படிக் கதைகள் எழுதுங்கள்.

vijayam said...

தல சும்மா சொல்லப்படாது....பின்னிட்டீங்க......முடிவில் வெழுத்துவாங்கிட்டிங்க...இப்படி சொல்லி நான் நல்லவனாக விரும்பவில்லை.இது தான் இன்றைய எழுத்து நடையாய் மாறிக்கொண்டிருக்கிறது.ஆரம்பத்தில் இப்படி தடுமாற வைத்து கடைசியில் இப்படி முடிப்பது தானா நவீன உரை நடை???????இவ்வாறான நடைகளால்
நிச்சயமாக வாசகர்கள் மனம்மாற இடமுண்டு.அதுக்காக நான் யோக்கியன் இல்லை.ஆனால்உங்களுடைய இக் கதையினால் இதைவிட உணர்வுகளைத்தூண்டக்கூடிய கதைகளை வாசகர்கள் நாட இடமுண்டு..இது தான் எனதுதற் பயணம் என்றாலும் உங்களுடைய கதை மேற்கத்தைய இலக்கிய பாணியினை நாடுவது போன்று உள்ளது.எமது தமிழ்க் கலாசாரத்தை மனதில்க்கொண்டு நீங்கள் இனிமேல் ஆக்கங்களை படைப்பீர்கள் என நம்புகிறேன்..

Naresh Kumar said...

விவகாரமா ஆரம்பிக்கறவே முடிவு இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்....(ஏற்கனவே இது போன்ற கதைகள் வந்தது காரணமாயிருக்கலாம்...)

நடை நல்லாயிருக்கு!!!!!

ஒரு கதை சாதா கதையா, வில்லங்கமான கதையாங்கிறது கடைசி புள்ளியில கூட மாறுது பாத்தீங்களா???

தப்பா நினைச்சதுக்கு நம்ம மனசு காரணமா இல்லை கதை காரணம்னு சொல்றதா???

கதையைவிட பின்னூட்டங்கள் மிகுந்த சுவராஸ்யம்தான்....

நரேஷ்
www.nareshin.wordpress.com

Look4Reality said...

கதையின் தலைப்பை படித்தவுடனே கதையும், கிளைமாக்சும் யூகித்துவிட்டேன்.

Freedom said...

அனைத்து கருத்துக்களும் நன்றாக உள்ளது.....

Selvaraj Ramachandran said...

உன்னையெல்லாம் பிஞ்சு போன செருப்பாலயே அடிக்கணும்டா நாயே!