Saturday, September 23, 2006

டானிக் மனிதர் - பால்ராசு

பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பிற்கு கோவையின் பழம்பெரும் பள்ளி ஒன்றில் சேர்ந்திருந்த காலம். பால்ராசை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். அவன் படித்த எலுகாம் வலசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். நானும் எனது பள்ளியில் முதல் மார்க் என்றாலும் அவனை விட சுமார் 50 மார்க் குறைவாகவே எடுத்திருந்தேன்.

நாங்கள் இருவருமே ஒரே பூகோளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மாதிரியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் ஒரு ஒற்றுமை. மைக்கேல்ஸ் ஸ்கூல் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. அங்கே கண்டிப்பாக ஏதாவது ஒரு கேம்ஸ் ஆடியே தீரவேண்டும். பால்ராசு வாலிபால் ஆடுவது மிக வேடிக்கையாக இருக்கும். பந்தின் திசைமாற்ற வீதம் அவனின் இடமாற்ற வீதத்தோடு எதிர்மறைத் தொடர்பு உடையதாக இருக்கும்.

டாக்டர் ஆவதே இலட்சியம் என்று இடைவிடாது உயிரியல் பாடம் படித்துக் கொண்டே இருப்பான். அதனால் கணக்கில் போதுமான கவனம் செலுத்தினானா என்று தெரியவில்லை. நானெல்லாம் பத்தாவதில் 'தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படம் வரைந்து பாகங்களைக் குறி' என்ற கேள்வியில் இருந்தே உயிரியல் சங்கதியில் இருந்து தூரமாக விலகி நிற்க ஆரம்பித்து விட்டேன். பிளஸ்-2 பயாலஜி தேர்விற்கு முந்தைய நாள் டி.வி.யில் 'தூறல் நின்னு போச்சு' படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொறியியல் கல்லூரியில் எனக்கு சுலபமாக இடம் கிட்டியது. ஜி.டி.நாயுடு காலேஜ், நிறைய மரம் இருக்கிறது போன்ற காரணங்களால் (இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது) GCT யில் சேர்ந்தேன். பால்ராசு நினைத்தபடி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்ல்லை. முதல் தர பொறியியல் கல்லூரியிலும் இடம் இல்லை. நினைத்திருந்தால் குமருகுரு போன்ற ஏதாவது ஒரு காலேஜில் பேமெண்ட் சீட் வாங்கியிருக்கலாம். ஆனால் அவனோ, அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலோ அதை அனுமதிக்கவில்லை. முடிவாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி படிப்பில் சேர்ந்தான்.

மருதமலைச் சாலைக்கு வடக்குப் பக்கம் உள்ள வளாகத்தில் தெர்மல் லேப், மெஷின் டிசைன் என நான் உலவிக் கொண்டு இருந்த போது, அதே சாலைக்குத் தென் புறமாக மண் வளம், மகசூல், பூச்சிக் கொல்லி என்று காக்கி டவுசரோடு அலைந்து கொண்டிருந்தான் பால்ராசு.

நான்கு வருடக் கல்லூரி வாசத்தில் ஏழெட்டு முறை தான் அவனைச் சந்தித்து இருப்பேன். இறிதியாண்டு, புராஜெக்ட் ஒர்க், கேம்பஸ் இன்டர்வ்யூ என்ற நீரோட்டத்தில் ஐதராபாத் வந்து கரை ஒதுங்கினேன். பால்ராசைப் பற்றிய நினைவு அறவே இல்லாமல் போனது. ஊரக வளர்ச்சித் துறை எதிலாவது வேலை செய்து கொண்டு இருப்பான் என நினைத்துக் கொள்வேன். சில ஆண்டுகள் கழித்து அவனது தந்தை டெம்போவில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.

பின்னர் ஒரு நாள் ஊருக்குப் போன போது நாங்கள் (கோவையில்) படித்த பள்ளியில் பால்ராசுக்குப் பாராட்டு விழா நடந்ததாகச் சொன்னார்கள். அவன் ஐ.ஏ.எஸ். ஆஃபீசர் ஆகிவிட்டானாம்.மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்த மாமன் மகளையே மணம் செய்திருக்கிறானாம்.

அவனது மானமார் மூலம் பால்ராசின் செல்போன் நம்பர் வாங்கி அழைத்தேன். பையன் இமாச்சலப் பிரதேசத்தில் ஏதோ ஒரு ஊரில் சப்-கலெக்டராக இருக்கிறான். அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம் உரையாடல் இருந்ததாகச் சொன்னான்.

அண்ணமாலை படத்தில் ரஜினிகாந்த் ஒரே பாடலில் பெரிய ஆளானதைப் போல அமையவில்லை பால்ராசின் வளர்ச்சி. பி.எஸ்.சி. அதன் பிறகு எம்.எஸ்.சி. அதன் பிறகு வேறு ஏதோ படிப்பு, தொடர்ந்து பி.எச்.டி. என்று படித்துத் தள்ளியிருக்கிறான். அது போதாதென்று கடைசியாக ஐ.ஏ.எஸ்.
தனது குறிக்கோளில் கவனம் சிதறாமல் எடுத்த காரியத்தை முடித்த டாக்டர்.பார்ராசு ஐ.ஏ.எஸ். அவர்களோடு (ஒரு மரியாதை தான்) ஒப்பிடுகையில் வாழ்க்கையில் எதைத் தேடி ஓடுகிறோம் என்ற முகப்பு இல்லாமல் 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்று குழம்பும் இன்றைய இளைஞர்கள் கீழான நிலையில் இருக்கிறார்கள்.

என்னவோ படித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், கிரடிட் கார்ட் வாங்கினோனம், செலவு செய்தோம் என்ற அற்ப வாழ்வு வாழாமல் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பால்ராசு. தன் மகனை டாக்டர் ஆக்க வேண்டுமென அவரது தந்தையார் தான் அதிகம் ஆசைப்பட்டார். அந்தக் கனவை மகன் நிறைவேற்றவில்லை என்றாலும், தந்தையின் ஆவி மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு.

வாழ்த்துக்கள் நண்பனே!! ஒரு நாள் உன்னை வெளியுறவுத் துறைச் செயலாளராகவோ அல்லது ஐ.நா.விற்கான இந்தியத் தூதராகவோ சந்திப்பேன்.

15 comments:

லதா said...

எல்லோரும் போற்றக்கூடிய ஒரு உயர்ந்த உதாரண மனிதர் பால்ராசு அவர்களுக்கு எங்கள் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். (தன் குழந்தைகளைச் சிறந்த மருத்துவராக வளர்க்கும் வாய்ப்பினை அவருக்கு அளிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்)

manasu said...

kupps anna, no problem, share market la antha aaraavathu idathai pidichiurnga............

மங்கை said...

//நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. //

இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று

கோவை மைக்கேல்ஸ் ஸ்கூல் மாணவரா நீங்க ?... ஹி ஹி..
மைக்கேல்ஸ் பசங்க எங்க ஸ்கூலுக்கு வந்து ஸ்ட்ரைக் பண்ணது நியாபகம் வருது...

மங்கை

Anonymous said...

Maruthavanan expired read in online news paper....

Ramasamy, Nataraj ayya, Murugan Sir, Michael Raj, Joseph, Stephen, Jesudas, Nanjundan, Saminathan, Michael(PT) Ellorum sugama

Thirunavukarasu, Ammasaikutti, Thangavel, Botany (forgot name), Balasubramaniam, Louis ellorum sugam thanne...

Antony Lawrence, Mudiappan, fathers baga unnara...

Tarcious (Blue), Alacious (Pink),
Britto (Yellow), Bosco (Green) are doing good ?

Namakku 1980 ...

Another K from Michael's

வெற்றி said...

குப்புசாமி,
மிகவும் அருமையான பதிவு. பால்ராசு அவர்களின் மனவுறுதி பிரமிக்க வைக்கிறது. தான் விரும்பிய மருத்துவபீடத்திற்கு அனுமதி கிடைகாத போதும், மனம் தளராமல் முயற்சி எடுத்து வளர்ந்திருக்கிறார்.

சதயம் said...

போகிற போக்கில் மனசை துடைக்கிற எழுத்து நடை...எங்க திடீர்னு ஆள் காணாம போய்ட்டீங்க, ஒரு வேளை கிழக்கு பதிப்பகம் உங்களை பிடிச்சிட்டு போய் ஏதாவது அசைன்மெண்ட் குடுத்து எழுதச்சொல்லீட்டாங்களோன்னு நிணைச்சேன்.

அடிக்கடி எழுதுங்க நண்பரே...

Kuppusamy Chellamuthu said...

நன்றிங்க லதா. பால்ராசு வலைப்பதிவு வாசிப்பாரா தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் இதைத் தெரியப்படுத்துகிறேன்.

//share market la antha aaraavathu idathai pidichiurnga//
Manasu..நோ கமெண்ட்ஸ் :-)

//கோவை மைக்கேல்ஸ் ஸ்கூல் மாணவரா நீங்க ?... ஹி ஹி..
மைக்கேல்ஸ் பசங்க எங்க ஸ்கூலுக்கு வந்து ஸ்ட்ரைக் பண்ணது நியாபகம் வருது...//
ரொம்பப் பேருக்கு இப்படித் தான் தெரிஞ்சிருக்கு. மைக்கேல்ஸ் பசங்க வராத பஸ்ஸில் ஏறிப் போகுமாறு Presentation பொண்ணுகளை அவங்க வீட்ல சொல்லி விடுவாங்களாம். ஆனாப் பாருங்க மங்கை... நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.

Kuppusamy Chellamuthu said...

அனானி...எண்பதுகளில் படித்தும் இன்னும் ஆசிரியர் பெயர்களை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். அம்மாசைக் குட்டி ஆசான் நான் +2 படித்த போது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் தாவரவியல் ஆசிரியர் கிருஷ்ணசாமியாக இருக்கும்.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் வெற்றி. நான் தற்போது யூ.எஸ்.வடகிழக்குப் பகுதியில் தான் உள்ளேன். கனடாவில் இருந்து தொலைவில்லை. ஒரு முறை தொலைபேசலாம்.

Kuppusamy Chellamuthu said...

நன்றிங்க சதயம்.

//ஒரு வேளை கிழக்கு பதிப்பகம் உங்களை பிடிச்சிட்டு போய் ஏதாவது அசைன்மெண்ட் குடுத்து எழுதச்சொல்லீட்டாங்களோன்னு நிணைச்சேன்.//

That is not a bad guess :-)

மங்கை said...

//ரொம்பப் பேருக்கு இப்படித் தான் தெரிஞ்சிருக்கு. மைக்கேல்ஸ் பசங்க வராத பஸ்ஸில் ஏறிப் போகுமாறு Presentation பொண்ணுகளை அவங்க வீட்ல சொல்லி விடுவாங்களாம். ஆனாப் பாருங்க மங்கை... நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க//

நான்..Mani's ல படிச்சேன்.. ரெண்டு பள்ளிகளும் பக்கத்துல இல்லைதான் இருந்தாலும் மைக்கேல்ஸ் பசங்கன்னா பயம் தான்...

நீங்கல்லாம் Goody Goody boys னா.. ஹ்ம்ம்ம்..ஒகே.. நம்பறேன்

வெற்றி said...

குப்புசாமி,

//தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் வெற்றி. நான் தற்போது யூ.எஸ்.வடகிழக்குப் பகுதியில் தான் உள்ளேன். கனடாவில் இருந்து தொலைவில்லை. ஒரு முறை தொலைபேசலாம்.//

நிச்சயமாக. உங்களின் profileல் உள்ள மின்னஞ்சலில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

Sivabalan said...

குப்புசாமி

ஒரு வெற்றியாளைப் பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

நல்ல பதிவு..

Syam said...

பால்ராசு உழைப்புக்கு உதாரணம்... :-)

//Presentation பொண்ணுகளை//

இந்த school க்கு எங்க gang ல வெச்ச பேரு jackpot, 3 schools iruku illa :-)

Kuppusamy Chellamuthu said...

Thanks Sivabalan & Shyam.

Anonymous said...

//நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு//

A true words.. ippadi noothula orutha unmaiya differnciate pannikitu irukkarathunala than namum ip perumai migu indiyavil...


Poovodu senthu narum mankira mathiri..

A good post.. now only i started to read your posts.. all r nice..

bcmng fan of ur wrds..

..Convy my wishes to your frnd and ask him to make more Difference in all the fields..

-maniPRAKASH..