Thursday, February 15, 2007

காதலர் தின புகைப்படங்கள்

- குப்புசாமி செல்லமுத்து

பாப் கனேட் ஓய்வு பெறும் வயதுக்காரர். வியட்நாம் போரில் ஈடுபட்டவர். உலக அறிவு மிகுந்தவர். அவரிடம் நேற்றைக்கே சொல்லி விட்டு வந்திருந்தேன், "நாளைக்குக் காலைல கால் பண்ணாட்டி 'ஹாப்பி வேலண்டைன்ஸ் டே' சொல்ல மாட்டேன் என்று.

அதிகாலை 12.35 மணிக்கு கணிப்பொறியை அணைத்து விட்டு தூங்கப்போகும் போது செல்போன் Bob Kanet calling என்றது.

'குப்ஸ் ..தூங்கிட்டியா?"

"இல்லை பாப். சொல்லுங்க"

"வழக்கம் போல 7.30 க்கு ஆஃபீஸ் வந்துடு"

"யூ ஆர் கிட்டிங்"

வழக்கமான குசும்புச் சிரிப்பு எதிர்முனையில்.

"இல்லைப்பா.. ரோடெல்லாம் மோசமா இருக்காம். பிளான்ட் குளோஸ் ஆகுது. ஸோ...லீவ் விட்டாச்சு..நல்லா தூங்கு"

இந்த ஆளுக்கு இதைச் சொல்ல நேரமே கிடையாதா!!

"சரி பாப்..குட் நைட்..சாரி, குட் மார்னிங்"

அடுத்த நாள் விடுமுறை எனும் போது ஒரு மணிக்கு முன்பே தூங்குவது அவமானம். மறுபடியும் மடிக்கணினியை உயிர்ப்பித்து மிச்சமிருந்த 'நாடோடி மன்னன்' படம் பார்த்து மரபு காப்பாற்றப்பட்டது.

தினம் ஏழரை மணிக்கே ஆஃபீஸ் போக வேண்டியவன் இன்றைய காதலர் தினத்தில் எட்டு மணி வரைக்கும் தூங்கி விட்டு.. உலகமே கொண்டாடும் இந்தக் காதலர் தினத்தில் சில போட்டோக்கள் எடுத்து, அதை ஒரு வகை 'உப்புமா' பதிவாகச் சமர்ப்பிக்கிறேன்.

என் ஜன்னலுக்கு வெளியே..
எல்லா மரங்களும் இலைகளை உதிர்த்து விட்டு குளிர்காலத்தில் அம்மணமாக நிற்கும் போது, மானமே பெரிதென இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்.
இந்த மரத்துக்குப் பின்னாடி இருந்த ஏரி எங்கெய்யா?
இங்கும் ஒரு எரி இருக்கிறது. அது தான் செவ்வக வடிவக் குழி.
அதே ஏரிதான். இதுக்குப் பக்கமா ஒரு வெள்ளைக்காரத் தாத்தா அவரோடு நாயைத் தெனமும் வெளிக்குக் கூட்டிட்டுப் போவாரு. பாவம் இன்னைக்கு என்ன செஞ்சாரோ!!இது நம்ம காரு. ஒரு காலத்துல சந்தியா நாயர்னு ஒருத்தங்க வச்சிருந்தாங்க. கரகாட்டக்காரன் செந்தில் பாணில 'சந்தியா காரை நீங்க வச்சிருக்கீங்க..அப்போ..' என்று கேட்டால் நான் பொறுப்பல்ல.
அனார்க் அலி லெவலுக்கு காதலர்தினத் தியாகம் செய்யுது இந்தக் கார். பின்னே உயிரோடு ஐஸ் சமாதின்னா சும்மாவா?ஒரு காலத்துல All roads lead to Rome.. அனா இப்போ all roads lead to Marysville mega city. 'சிட்டி'ன்னா என்னான்னு வெளக்கம் கேக்கக் கூடாது ஆமா!!


எஸ்கேப் ரூட்..காதலுக்காகக் கசிந்துருகும் கார்.


இங்கேதான் நம்ம கூட்டாளி 360 டிகிரி அடிச்சாரு. நல்ல வேளையா அந்த சர்க்கஸை வெற யாரும் வேடிக்கை பாக்கலை.இன்னிக்குப் பரவாயில்லை மக்கா. லீவுதே.. ஊட்டுக்குள்ள இழுத்துப் போத்திக்கிட்டுப் படுத்துக்கலாம். ஆனா, கிளீன் பண்ணாம விட்டா நாளைக்குக் காலைல இருக்குடி சங்கு..

இத்தன போட்டோவை எடுத்த மூஞ்சியைக் கொஞ்சம் பாக்க வேண்டாமா?

படம் நல்லா இருக்குன்னு யாராச்சும் சொன்னா பாப் கனேட்டுக்கு லேட்டாகவாவது காதலர்தின வாழ்த்துக் கூற வேண்டும். அதை விட முக்கியமாக, இன்னொரு புதன் கிழமை அதிகாலையில் எம்.ஜி.ஆர். படம் பார்ப்பது சாத்தியமும் இல்லையல்லவா!!

17 comments:

தமிழ்நதி said...

நன்றாகப் 'படம்'காட்டியிருந்தீர்கள். பார்க்கப் பார்க்கக் குளிர்ந்தது. இதையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். 'இதுதான் பாரதி வாழ்ந்த இல்லம்'ரேஞ்சில் நாளைக்கு 'இதுதான் குப்புசாமி வாழ்ந்த சூழல்'என்று காட்ட வேண்டுமல்லவா...ஆனால், வரிகளுக்கிடையில் ஒரு பொய்யைக் கண்டுபிடித்தேன். பரவாயில்லை.

பொன்ஸ்~~Poorna said...

படமெல்லாம் நல்லா இருக்கு..

இங்க எங்கூர்ல அநியாயத்துக்கு வெயில் கொளுத்துது!! :((( இதுல இப்படிப்பட்டப் படத்தை எல்லாம் போடுறீங்களே!!! :))

manasu said...

கசிந்துருகர கார் மாதிரி உங்க கார் காதலுக்காக பாரம் சுமக்குதோ???

(சங்கு மார்க் லுங்கி அங்கயும் கிடைக்குதாங்ணா)

வல்லிசிம்ஹன் said...

இவை எல்லாம் காதலர் தினப் புகைப்படங்களா:-)

இந்தப் பனியில காதலை யாரும் நினப்பாங்க??
நிறைய நல்ல படங்கள்.
அதென்ன நடோடி மன்னன். சிவாஜி படம் பாக்க மாட்டீங்களோ?
எங்க ஊரில மாய்ஞ்சு மாய்ஞ்சு பனி வெட்டினோம் நேத்திக்கு.
இதில பொன்ஸ் படம் போடலியானு கேட்டாங்க. நீங்க போட்டதுக்கு நன்றி:-))))

பெத்த ராயுடு said...

அண்ணாத்த,

கொஞ்ச நாளா பங்குசந்தை பக்கம் போறதில்லை போல?

பெத்தராயுடு

Anonymous said...

nice photos taken ,
which camrea you use take these photos.

reg anand(chennai)

Kuppusamy Chellamuthu said...

Thanks Nathy!! ithellaam over :-)
//வரிகளுக்கிடையில் ஒரு பொய்யைக் கண்டுபிடித்தேன். பரவாயில்லை.//
There is not just one 'poi'..more than one indeed.

Kuppusamy Chellamuthu said...

பொன்ஸ்.. உங்க ஊர் எதுங்க? நம்ம சென்னைப் பட்டிணம்தானே?? இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் நான் அழுதுருவேன்..

//கசிந்துருகர கார் மாதிரி உங்க கார் காதலுக்காக பாரம் சுமக்குதோ??? //
மனசு: என்னங்க இப்படி சொல்லிடீங்க? ரண்டு மணி நேரம் பனியெல்லாம் சுரண்டி எடுத்து சுத்தமா வைச்சிருக்கும் போதே இப்படிக் கேட்டுட்டீங்க?

லுங்கி மேட்டரை தனியா டீல் பண்ணிக்கலாம். (இது பிளாட்பாரம் லுங்கிங்கறதை ரகசியமா காப்பாதுனதுக்கு நன்றி)

மங்கை said...

குப்ஸ்..

பரவாயில்லை..விவரமான பதிவு கண்ணு

:-))))... Ok ...Ok

Kuppusamy Chellamuthu said...

//இவை எல்லாம் காதலர் தினப் புகைப்படங்களா:-)//
ண்ணா... பனிப்பெய்யும் தினத்துல காதல் செய்யலாம். ஆனால், காதலர் தினத்துல பனி பெய்வது எப்போதுமே நடக்காதாம்.

எம்.ஜி.ஆர். படம் வெறும் ஆரம்பம் மட்டுந்தாங்க. அப்புறம் சிவாஜி படமென்ன, தாமிரபரணி கூடப் பாத்தேனுங்க. (அதே கூட்டாளி) ஹீரோயினை வீட நதியா அழகா இருக்கிறதா சொன்னதை வேணும்னா சாட்சியா எடுத்து வைக்கிறேன்.

Kuppusamy Chellamuthu said...

பெத்தராயுடுகாரு..பாக உன்னாரா?

பங்குச்சந்தையா? அப்படீன்னா.. (சார் ஃபுட்பால்னா கால்ல ஓதைச்சு ஒதைச்சு விளையாடுவாங்களே - தில்லு முல்லு சூப்பர் ஸ்டார்)

சங்கதி என்னன்னா.. "நாணயமா?"என்பது "நாணயமே" என்று ஆகிவிட்டது. தனியே மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Kuppusamy Chellamuthu said...

//which camrea you use take these photos.//
Canon powershot SD 600. Not a highly sophisticated one!!

சிவபாலன் said...

எங்க ஊரைவிட அங்கே ரொமப அதிகம் போல.. எப்படி சமாளிக்கிறீங்க..

படங்கள் அருமை!!

Anonymous said...

thx for your reply
anand(chennai)

அருட்பெருங்கோ said...

காதலர் தின புகைப்படங்கள் னு தலைப்ப பார்த்துட்டு வேற மாதிரி எதிர் பார்த்து வந்தேன்... ;-)

ஆனாலும் ஏமாறவில்லை... :-))

Kuppusamy Chellamuthu said...

//பரவாயில்லை..விவரமான பதிவு கண்ணு//
க்க்க்கா.. என்னுங்க்கா, இதெல்லாம் வெவெரம்னு சொல்லீட்டீங்க? ஏதோ உள்குத்து என்பது மட்டும் புரியுதுங்க.

Kuppusamy Chellamuthu said...

வாங்க சிவபாலன். வேறு வழி இல்லையென்றால் சமாளிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

'காதல் கவி' அமராவதிக் கரை அருட்பெருங்கோ..வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி. அதே ஆற்றின் கரையோம்தான் இந்தக் கரையோரம்!!