Wednesday, May 09, 2007

புத்தக அறிமுகம் 'இழக்காதே'

- செல்லமுத்து குப்புசாமிஇழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண இங்கே கிளிக் செய்க.

உதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்

சென்னை பங்குச் சந்தை இயக்குனர் நாகப்பன் அவர்கள் இந்த நூலின் ஆங்கில வடிவத்திற்கு எழுதிய அணிந்துரை

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஜி.டி.நாயுடு ஆரம்பத்த பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு முறை தமிழ் மன்றத் திருவிழா நடப்பது வழக்கம். விழாவுக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். பிரபலமான பேச்சாளர்கள் பங்குபெற்ற வழக்காடு மன்றம் நடந்தது. மாணவர்களுக்கான கவியரங்கம் நடந்தது. அமராவதி ஆற்றில் மீன் பிடித்தாடிய அரைக்கால் சட்டை நினைவுகளை அந்தக் கவியரங்கில் வாசித்ததும், அது கோவை வானொலியில் ஒலிபரப்பானதும் இப்போது நினைத்தால் கனவு போலத் தோன்றுகிறது.

ஆண்டு விழாவுக்கு அறிவியல் மலர் ஒன்று தமிழில் வெளியிட்டோம். அதன் தொகுப்பாளராகச் செயலாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. அதற்காக ஓரிரு கட்டுரைகளை எழுதிக் கொடுத்ததோடு, 'முன்னுறை' 'முடிவுறை' என்றெல்லாம் வந்து சேர்ந்த (அதை எழுதிய நண்பர் அந்தோணி இப்போது ஏர்ஃபோர்சில் நல்ல பதவியில் உள்ளார்) கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்தித் திருத்தும் வேலையையும் செய்ய வேண்டியிருந்தது.

அதன் முதல் பிரதியை வாங்கிச் சரிபார்த்த கல்லூரி முதல்வர், "நல்லா வந்துருக்குய்யா. ஆனா தமிழ் எழுத்து ரசனைக்கு வேணும்னா ஒத்து வரும். தொழிலுக்கு ஆகாது. எதோ ஒரு ஆர்வத்துல செஞ்சிருக்கீங்க. பாராட்டறேன்" என்றார்.

அவர் சொன்னது சத்தியமான வார்த்தை. வருடங்கள் உருண்டோடின. பொருளாதாரத்திற்கான போராட்டம் முதலிடம் பெற்றது. திரைப்படப் பாடல்களை முணுமுணுப்பதோடு சரி. எப்போவதாவது, "நான் நலம். நீங்க நலமா?" என்று வீட்டுக்கு எழுதும் கடிதத்தோடு தமிழ் நின்று விட்டிருந்தது, வலைப்பதிவு (blogs) பற்றி வா.மணிகண்டன் சொல்லும் வரை.

பொருளாதாரம் குறித்தும், பங்கு முதலீடு குறித்தும் மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்ளும் கருத்துக்களை அப்படியே ஆங்கில வலைத்தளத்தில் ஏற்றியதும், அதை வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி பங்கு வணிகத்தில் (தமிழ் வலைத்தளம்) போட்டதும் ஒரு வேகத்தில் நடந்தது. பல நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு (அவர்கள் பெயரையெல்லாம் எழுதினாலே ஒரு தனிக் கட்டுரை போடலாம்) இந்தத் தளம் உதவியது.

அவர்களை அஜர்பைஜானில் இருந்து, ஆஸ்திரேலியா வரை ஒவ்வொருவராக நெஞ்சோரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அடிப்படையில் வாசகனான எனது சொந்த வாசிப்பு அனுபவத்தை அகலமாக்கவும் அது வழி வகுத்தது.

(சொந்த ஊருக்காரர் ஒருவர் 2006 ஆம் வருடம் தி.மு.க. பதவியேற்பு விழாவுக்கு சென்னை வந்திருந்தார். அவரோடு துணைக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்ல நேர்ந்தது. ஒரு சராசரிக் குடிமகனுக்குரிய அணுகுமுறையோடு, 'கலைஞரும், தளபதியும் அடுத்த கட்டம்' என்ற தலைப்பில் பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை கை அரிப்பின் காரணமாக எழுதி வெளியிட்டதனால் 'கரையோரம்' என்ற பெயரில் இன்னொரு வலைத்தளம் (blog) பிறந்தது. அதற்குப் பிறகு 'அண்ணியின் அணைப்பில்' என ஒரு விவகாரமான கதையைப் (முதல் முயற்சி) பார்த்து விட்டு ஆளாளுக்கு மொத்தி எடுத்து விட்டார்கள். சிறுகதைகள் எழுதுவதற்கு என்னை உற்சாகப்படுத்திய கவிஞர்கள் கார்த்திக் வேலு மற்றும் மனுஷ்யபுத்திரன் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.)

இந்தச் சமயத்தில் பதிப்பாளர் பத்ரியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தப் புத்தகத்தைக் குறித்து விவாதித்தோம். பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதே போல வந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

"பழக்கம்னு ஒன்னு இருந்தா அதை மாத்தக் கூடாது" என்று கவுண்டமணி ஒரு படத்தில் கூறுவார். அதே போல புத்தகம் எழுதினால் யாருக்காவது அர்ப்பணிக்க வேண்டும் என்பது 'நல்ல' ஒரு பழக்கம்.

* என் ஆரம்ப நாட்களில் வாசிக்கும் பழக்கத்தை என்னுள் விரியச் செய்த நண்பர்கள் ஜெரால்டு மற்றும் ஜான் ஆகிய இருவருக்கும்
*நண்பனாக நான் கருதினாலும் பிசினஸ் என்று வரும் போது தன் 'தொழில்' திறமையை என்னிடம் காட்டியதோடு, சுயமாகவே அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியை ஏற்றி அது குன்றாமல் இருக்க உதவிய என் 'இனிய' பங்குத் தரகருக்கும்
*கல்யாணம் ஆவதைத் தாமதப்படுத்தி இந்தப் புத்தகம் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்த செவ்வாய் தோசத்திற்கும், அப்படியே ஒன்றிரண்டு பொருந்தி வந்தாலும் வேண்டாமென்று ஒதுக்கிய பெண்களுக்கும், அவர்தம் தகப்பனார்களுக்கும் (இங்கே சிரிக்கவும்)
*பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளுக்கும்"
);
*பங்கு முதலீட்டின் அரிய பெரிய கோட்பாடுகளையும், தத்துவங்களையும் எளிமையாக எடுத்துச் சொல்லி விட்டுச் சென்ற பல அறிஞர் பெருமக்களுக்கும்
'இழக்காதே' அர்ப்பணம்.

அருமையான அட்டைப் படத்தை வடிவமைத்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும், எடிட்டர் குமாருக்கும், பதிப்பாளர் பத்ரிக்கும் நன்றிகள்.

பெரும்பாலும் பாதுகாப்பான வாசகங்களையே பேசவும், எழுதவும் விரும்பும் நான் இப்போது ஒன்றைத் துணிந்து சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் பங்குத்தரகராக மட்டும் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை விரும்பிப் பாராட்டுவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
This book is worth the money.

கல்லூரி முதல்வர் சாம்பசிவம் இதைப் பார்த்தால் 'தமிழ்' தொழிலுக்கு உதவும் என்று ஏற்றுக் கொள்வார்.

28 comments:

பொன்ஸ்~~Poorna said...

வந்திடுச்சா? வாழ்த்துக்கள் :)

சீக்கிரம் வாங்கிட்டு, விமர்சனங்களோட வாரேன் ;)

Ramesh said...

All the best for the book.

Udhayakumar said...

எனக்கு ஒரு எழுத்தாளரைத் தெரியும், அவர் எழுத்தாளர் ஆவதற்கு முன்பிருந்தே :-)

ஆனாலும், அந்த குசும்பும், வருத்தமும் தெளிவாகத் தெரிகிறது உங்கள் "சமர்ப்பணத்தில்"

Boston Bala said...

வாழ்த்துகள் :)

Chellamuthu Kuppusamy said...

வாங்க பொன்ஸ். வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆனா, விமர்சனம்னு சொல்லிப் பயமுறுத்தறீங்க :-(

நன்றி ரமேஷ்.

Chellamuthu Kuppusamy said...

உதய்../ஆனாலும், அந்த குசும்பும், வருத்தமும் தெளிவாகத் தெரிகிறது உங்கள் "சமர்ப்பணத்தில்" // :-) வருத்தம் எத்தனை நாளைக்குனு தெரியல, ஆனா குசும்பு போகாது!!

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க பாலா.

Syam said...

நாயகன் மாதிரி நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கறீங்க வாழ்த்துக்கள் :-)

gulf-tamilan said...

வாழ்த்துகள் !!!

krishnasamy said...

Hi Kupps,

Congratulations.

Regards,
Kathiresan

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
வாழ்த்துக்கள்.

இளவஞ்சி said...

குப்ஸ்,

அருமையான செய்தி அய்யா! சந்தோசமா இருக்கு.

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!! :) ( கதை எழுதறதையும் ஒரு சைடுல வைச்சுக்கிடுங்க.. :)

Chellamuthu Kuppusamy said...

ஷ்யாம், வளைகுடாத் தமிழன் மற்றும் கதிரேசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

Chellamuthu Kuppusamy said...

வாழ்த்துக்கு நன்றி வெற்றி.

இளவஞ்சி: வளர வாழ்த்தியதற்கு வளர சந்தோசம் (மலையாளமாக்கும்..) :-)

மஞ்சூர் ராசா said...

பாராட்டுக்கள்.

கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Vinoth Kumar Gopal said...

திடீரென உங்கள் வலைப்பக்கத்தின் முகவரி சிக்கியது பார்த்தேன்
மிகவும் அருமை
வாழ்த்துக்கள்

தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?
எனது மின்னஞ்சல் முகவரி
vinothsoft@gmail.com

Vinoth Kumar Gopal said...

திடீரென உங்கள் வலைப்பக்கத்தின் முகவரி சிக்கியது பார்த்தேன்
மிகவும் அருமை
வாழ்த்துக்கள்

தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?
எனது மின்னஞ்சல் முகவரி
vinothsoft@gmail.com

Chellamuthu Kuppusamy said...

பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா.

வினோத் குமார் கோபால். மிக்க மகிழ்ச்சி. என் மின்னஞ்சல் முகவரி புரஃபைலில் உள்ளது.

Prem Anand said...

Kupps, Nalla arimugam! Vazthugal! Keep up the good work!!!
Prem

Peri said...

All the best.. Nalla samarpanam... Unnudaiya valarchiyai aarvathai paarthu aachariyamai irukkiradhu... Vaazhthukkal...
Anbudan
Perinbanathan.V

தமிழ்நதி said...

உங்கள் முயற்சிக்கு கடைசியில் பலன் கிடைத்துவிட்டது. அதென்ன செவ்வாய் தோசத்திற்கும் நிராகரித்த பெண்களின் தகப்பன்மாருக்கும் நன்றி சொல்வதில் ஒரு கவலை தெரிகிறதே...:) இந்த வெளியீடு முடிந்த கையுடன் அடுத்த வெளியீடும் நடக்க வாழ்த்துக்கள். இப்பல்லாம் கல்யாணம் பண்ணுவது கூட சுலபமான விசயந்தான், புத்தகம் வெளியிடுவதைக் காட்டிலும். 'பொருளாதாரம்'எழுதியவருக்கு 'தாரம்'என்ன பெரிய விசயமா...?அதனால் நம்பிக்கையோடு இருங்கள்.:) புத்தகத்தை வாசித்துவிட்டு கருத்துக்களோடு வருகிறேன். (புத்தகத்தில் நீங்கள் பேசிய விடயம் புரிந்தால்)

Chellamuthu Kuppusamy said...

மிக்க நன்றி பிரேம்.

பேரின்பநாதன், மகிழ்ச்சி. வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட என்னங்க இருக்கு? ஆறடிக்கு மேலைன்னு உங்களுக்கு முந்தியே தெரியுமே!

Chellamuthu Kuppusamy said...

தமிழ்நதி, இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நாங்கல்லாம் எதையுமே வெளையாட்டா எடுத்துக்கறதுதான் வழக்கம் :-)

//புத்தகத்தை வாசித்துவிட்டு கருத்துக்களோடு வருகிறேன்.// மிக்க நன்றி.

தென்றல் said...

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

இங்குள்ள... என்னைப் போன்றவர்கள் எங்கு வாங்குவது என்ற தகவல்கள் சொன்னால் நன்றாக இருக்குமே?!

Chellamuthu Kuppusamy said...

பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க தென்றல்.

உங்களுக்கு அமெரிக்காவில் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்றே கருதுகிறேன். முடிந்தால் support@nhm.in அல்லது bseshadri@gmail.com எதாவது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்கள்.

புத்தக விலையைக் காட்டிலும் உங்களை வந்தடைவதற்கான அஞ்சல் செலவு கூடுதலாக அமையக் கூடும் என்று அஞ்சுகிறேன். நீங்கள் இந்தியா சென்றாலோ அல்லது வேறு யாராவது வந்தாலோ அவர்கள் மூலம் தருவிப்பது சரியாக இருக்கும்.

தென்றல் said...

/முடிந்தால் support@nhm.in அல்லது bseshadri@gmail.com எதாவது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்கள். /

தகவலுக்கு நன்றி!

Anonymous said...

"இழக்காதே" - 200 பக்கம் வரை படித்துள்ளேன்..மிக ஆழமான கட்டுரைகள்..என்னைப் போன்ற சாமான்யர்கள் பின் தொடர்வது சிரமம்.ஆயினும் மிகவும் விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள்..கால்வாசி புத்தகம் உங்கள் பதிவுகளிலேயே படித்து விட்டாயிற்று..இருந்தாலும் மீண்டும் புத்தகத்தில் படிக்க சுவராஸ்யமாய் உள்ளது.

முதலீட்டு முறைகள் பற்றி நிறைய யோசிக்க வைத்துள்ளீர்கள்.நன்றி.

மீதி புத்தகத்தையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்

-ராதாகிருஷ்ணன்

Deepam Shanmugam said...

I am verymuch inspired by your 'Izhakkathey' and If I read this book one year before I saved a lot of maoney.(It means I loss lot of money) Its ok. But now I decide, in future anything read about share market(sorry 'investment') it must be written by Sellamuthu Kuppusamy only. Now, I read 'Panakadavul' also. Its also a wonderful book.

perumal karur said...

எப்படி இந்த பதிவை வாசிக்காமல் விட்டேன் என்றே தெரியவில்லை..

இப்பொழுதுதான் வாசிக்கிறேன்...

செமையா இருக்கு

நன்றிங்க...

செவ்வாய் தோஷம் ஹா ஹா வாய் விட்டு சிரித்தேன்...