Wednesday, July 11, 2007

வாரன் பஃபட் புத்தகம்


- செல்லமுத்து குப்புசாமி

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

  • முதன் முறையாக ஒரு பசுமாடு ஆகாய விமானத்தில் பயணம் செய்தது. ஏரோபிளேனுக்குள்ளேயே அந்த மாட்டில் பால் கறந்தார்கள்.
  • புளூட்டோ என்ற கிரகம் சூரியனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது.
  • ஜனவரி 26 ஆம் தேதியை பூரண சுயராஜ்ஜிய தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது.
  • பிரிட்டிஷ் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் அலைகடலை நோக்கி மாபெரும் யாத்திரை நடத்தி உப்புச் சத்தியாகிரகம் செய்தார்.
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு சர்.சி.வி.ராமனுக்கு அளிக்கப்பட்டது.
ஒன்றோடொன்று தொடர்பில்லாத இந்தச் செய்திகளுக்கு இடையே நிலவும் ஒற்றுமை என்ன தெரியுமா? வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மைல் கல்லாகும். அதை விட சுவாரசியமான சங்கதி என்னவென்றால், இவை அனைத்தும் 1930 ஆம் வருடம் நிகழ்ந்தவை.

அந்த வருடம் பல குழந்தைகள் பிறந்தனர். அதில் இரண்டு பேருக்கு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இடம், ஏன் உலக வரலாற்றிலேயே கூட, காத்திருந்தது. அவர்களில் ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங். அவர் 1930 ஆம் வருடம் ஆகஸ்டு 5 அன்று பிறந்தார். நிலவில் காலடி வைத்து மனித சமுதாயத்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வித்திடப் போகும் அரிய வாய்ப்பு அந்தக் குழந்தைக்குக் காத்திருந்தது. அழிவில்லாத ஒரு பெயர் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.


ஆம்ஸ்ட்ராங் பிறந்த 25 நாட்களுக்குப் பிறது அதே அமெரிக்க நாட்டில் இன்னொரு மனிதர் பிறந்தார். அவர் பெயர் வாரன் எட்வர்ட் பஃப்பட். அமெரிக்காவில் மட்டுமல்லாமல், அகில உலக அளவில் மாபெரும் பெயரோடும், புகழோடும், செலவத்தோடும் அவர் திகழப் போகிறார் என்ற விவரம் அந்த ஆகஸ்ட் 30 அன்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
********
உலகின் இரண்டாவது மிகப் பெரிய செல்வந்தர், தன் சொத்தில் பெரும்பகுதியை தானமாகக் கொடுத்தவர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட வாரன் பஃபட் என்ற மனிதரைப் பற்றி ஆராயும் ஆர்வம் எனக்கு இயல்வாகவே பல ஆண்டுகள் இருந்து வந்தது. செனட்டர் மகனாக இருந்தும், 13 வயதில் பேப்பர் போடும் சிறுவனாக வேலை பார்த்த இந்த ஆளுமை கடந்து வந்த பாதைகள் மிகவும் சுவாரசியமானவை. அவரைக் குறித்து நான் அறிந்து கொண்ட சங்கதிகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் இருந்தது.


அப்போது ஒரு நண்பர் மின்னஞ்சலில் கீழ்க் காணும் வரிகளை அனுப்பினார்.

"வாரன் பற்றி நீங்கள் எழுதப் போகும் புத்தகம், இன்றைக்கு 25 வயதுள்ள அத்தனைத தமிழ் இளைஞர்களின் கையில் இருக்கிற மாதிரியான ஒரு புத்தகமாக இருக்க வேண்டும் என்பது ஆசை. 25 முதல் 40 வயதுள்ளவர்களை சுண்டி இழுக்கக்கூடிய ஒரு மொழி அதில் இருக்க வேண்டும். வாரன் பற்றிய புத்தகம் அடிப்படையில் ஒரு வாழ்க்கை வரலாறுதான். ஆனால், அதில் மார்க்கெட் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் வரவேண்டும். நிறைய சம்பவங்கள், அனுபவங்கள், படிப்பினைகள்.. என்று அடுக்கிக் கொண்டே போகலாம். முதலீடு என்பது 500 ரூபாயிலிருந்துகூட ஆரம்பிக்கலாம். இவ்வளவுதானே நம்மிடம் இருக்கிறது என்கிற எண்ணம் இல்லாமல் பணத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற எண்ணத்தை விதைத்துவிட்டால் வாரனை தமிழ்நாட்டின் அடுத்த ரஜினி ஆக்கிவிடலாம்."
அவரது வார்த்தையை முடிந்த வரை காப்பாற்ற முயற்சித்துள்ளேன்.


புத்தகத்தின் பின் பக்க வரிகள் கீழே..

******

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது.


ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட்.
சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.
ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது?


பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது.
***
He is one of my life time heroes and it gives me immense pleasure to write Warren Buffett biography which is also available as a kindle with the title 'Warren Buffett an Investography'

30 comments:

செல்வேந்திரன் said...

வணக்கம் குப்புசாமி சார்,

நாணயம் விகடனில் தாங்கள் எழுதிவரும் பஃபட் பற்றிய தொடர் படித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது.

Vijaya Kumar said...

Dear Chellamuthu Kuppusamy, thanks a lot for sharing this information about this book on Warren Buffett.

வெற்றி said...

குப்புசாமி செல்லமுத்து,
வருக! வருக! வருக!

வாழ்த்துக்கள். புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

Vaa.Manikandan said...

Superrrrrrrrrr!!! :)

Chellamuthu Kuppusamy said...

ரொம்ப நன்றிங்க செல்வேந்திரன். உங்களது நட்சத்திர வாரம் நல்லபடியாகப் போகிறது எனக் கருதுகிறேன்.

நாணயம் தொடர் குறித்த வாசகங்களுக்கு நன்றி.

நன்றிகளுக்கு நன்றிகள் விஜய குமார்.

vathilai murali said...

good sir

Chellamuthu Kuppusamy said...

அன்பின் வெற்றி, மணிகண்டன் மற்றும் முரளி: ஊக்கத்திற்கு நன்றிகள்.

Anonymous said...

Inda putthagam share marketil kaaladi eduthu vaikka virumbum ovvoruvarukkum migunda nambikkaiyum dhairiyamum tharum enbadil iyamillai. mem melum niraya ezhudhungal. vaazhthukkal.

venkat d(nigam1999@yahoo.com)

Anonymous said...

real good effort. all people who wants top get into share market must read this. This will give them confidence and courage. My heartfelt wishes to you. write more
venkat d(nigam1999@yahoo.com)

சந்தோஷ் said...

வாழ்த்துக்கள் குப்புசாமி சார், ஊருக்கு போயி வாங்கி படிக்கிறேன்.

Anonymous said...

Congratulations....

raja ram

Chellamuthu Kuppusamy said...

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் வெங்கட்.

சந்தோசம் சந்தோஷ் :-)

You too Raja Ram!

Raghu said...

All the best.

Arunkumar said...

Thanks for sharing this info. I have heard how Warren became rich with less. Your book must be a good read.

Can i place the order for this book in the US? If so, can you let me know how?
(findarun@gmail.com)

Arunkumar said...

Didn't realize you stay in OHio.
I stay in Cleveland.

Chellamuthu Kuppusamy said...

நன்றிகள் ரகு.

அருண். மிக்க மகிழ்ச்சி. சில மைல் தூரத்தில் (அருகில் இருக்கிறோம்).

I myself am trying to get few copies here and learn that it is expensive to get it shipped to the US. So, the better option would be to get it via someone who comes from India.

Sorry that I could not be of much help.

மங்கை said...

வாழ்த்துக்கள்...

Chellamuthu Kuppusamy said...

வாழ்த்துக்கு நன்றிங்க மங்கை.

THE BOSS said...

Hello sir,
please give me your mobile number

sahul-9843087676

தமிழ்பித்தன் said...

நான் கனடாவில் இருக்கிறன் இதை பெற ஏதாவது இலகு வழிகள் இருக்கிறதா ஏனெனில் என்னிடம் கடன் அட்டை இல்லை

Chellamuthu Kuppusamy said...

BOSS: தற்சமயம் நான் இந்தியாவில் இல்லை. ஆகையால், தங்களிடம் பகிர முடிகிற தொடர்பு எண் எதுவும் இல்லாமைக்கு வருந்துகிறேன்.

தமிழ்ப்பித்தன்: கனடாவில் தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளை, அனுப்பும் ஆட்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. முடியுமானால் பதிப்பாளருக்கு support@nhm.in முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பிப் பாருங்கள்.

Anonymous said...

I have read ur 'Panakkadavul' Warren Buffet. It has changed my paradigm about shares' business. It is very useful to everyone who interested in investing. Keep it up --- Jegan

Srini said...

srinivasan said,
it will be intrested.so iwill buy it and read it and use it. thank u sir.

Anonymous said...

dear sir i want one book
'varan part' tirupur saravana

Chellamuthu Kuppusamy said...

Dear saravana,

You can buy the book online at http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&itemid=384 or at any prominent book shop.

அறிவன் /#11802717200764379909/ said...

I had recently read your book on Waren Fat.
It made one of the good reading,but do you think the same scenario for exponential growth through stocks investments in India hold good?
I guess waren invested and multiplied his networth by basically choosing insurance and government bonds sector...

samsalos said...

Hello sir, I want to buy varan Pafat Book to read. Can i get this book in Hong Kong somewhere? if you know tell the place where i can buy in Hong Kong?

Chellamuthu Kuppusamy said...

Arivan,

Sorry for the late response & not giving that in Tamil. (this is just a biography of this BIG man & by no means suggest anything.. neither did I recommend any stock/sector in my stock investing book 'Izhakathey'. (sorry if I did not answer, i hold back from commenting on things that I am not very confident.

Dear.Samsalos, please send a mail to support@nhm.in & ask if there is a way you can get the book.

Anonymous said...

Hi sir, Very good effort...keep it up...

Anonymous said...

Just now i Read This Book. Always i am Crazy on Biographies. More over a month before i entered in to Market. Its really a nice Book to Valuate our thoughts. You Should give lot like this.

Thanks,
Vijay Prasath