Wednesday, September 10, 2008

தமிழ் வலைப்பதிவுகள்

- செல்லமுத்து குப்புசாமி

பங்கு வணிகம் வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ இருபத்தேழு மாதங்கள் ஆகின்றன. புதிது புதிதாக பதிவுகளைப் போடுவதற்கு தொடக்கத்தில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

"புது வட்டிலைக் கண்டால் எட்டு வட்டில் சோறு தின்பது போல" என்று கொங்கு மண்டலத்திலே சொல்வார்கள். அது மாதிரி இணையத்தில் தமிழைக் கண்டதும், நாமே அதை வலையேற்ற முடியும் என்று புதுமையுமே ஆரம்ப கால ஆர்வத்திற்கான ஆர்வமாக இருக்கிறது. ஆனால் காலப் போக்கில் ஒரு விதமான சலிப்பு ஏற்படுகிறது. புதிய காதலி மீதான இன்டிரஸ்ட் பழைய மனைவி மீதான 'போர்' ஆக மாறி விடுவதைப் போல!

பணிச் சூழலில் சுபலமாக இணைய வசதி இருக்கிற காரணத்தினால் பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கும் ஒரு காரியம்தான் என்றாலும், நாம் எழுதுவதையும் நாலு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும் போதே ஏற்படும் பேரின்பம் நம் வலைப் பக்கத்தில் வந்து விழும் பின்னூட்டங்கள் மூலம் ஊர்ஜிதமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பிறகு அதிகமான பின்னூட்டங்களைப் பெறும் டெக்னிக்குகள் நமக்கே தெரிய வரும்.

முடிவில்லாத ஆரிய-திராவிட வாதங்கள், போலிகள், பின் நவீனத்துவம், இலக்கையச் சூழல் எல்லாம் அறிமுகமாகும். தொடர்புகள் ஏற்படும். பிறகு ஒரு கட்டத்தில் ஆர்வம் மடிந்து விடுகிறது. நான் வலைப்பூ ஆரம்பித்த போது மும்முரமாக இயங்கிய இளவஞ்சி, முத்து(தமிழினி) போன்றோர் இதற்கு மிகச் சரியான உதாரணங்கள். Product life cycle இருப்பது போல வலைப் பதிவர் life cycle இருக்கிறது.

ஆனால் ஒரு சிலர் மாத்திரமே யார் படித்தாலும், படிக்காவிட்டாலும் இடைவிடாமல் எழுதி வருகிறனர். அதிலும் தரமான, சரியான தகவல்களைத் தருவம் நடக்கத்தான் செய்கிறது.

5 comments:

வேளராசி said...

உபயோகமான பதிவுகளுக்கு எப்போதும் வாசகர்கள் இருப்பார்கள்.ஆனால் பின்னூட்டங்கள் அதிகம் வராது.

பொன்ஸ்~~Poorna said...

//புதிய காதலி மீதான இன்டிரஸ்ட் பழைய மனைவி மீதான 'போர்' ஆக மாறி விடுவதைப் போல!//
தலைவா, வூட்ல இன்னும் வலைபதிவு படிக்க தொடங்கலியா? ;)

Chellamuthu Kuppusamy said...

உண்மை வேளராசி.

ஆமாம் பொன்ஸ். கரீக்ட்..

manasu said...

நானும் தேடினேன் குப்ஸ், முத்துவையும் இளாவையும்.

christopher said...

very fine ayya miga nandra irukkiradu ungal web site