Wednesday, December 24, 2008

பிரபாகரன் - புத்தக அறிமுகம்

- செல்லமுத்து குப்புசாமி

சில பேர் வாழ்த்துச் சொன்னார்கள். சில பேர் எச்சரித்தார்கள். வேறு சிலர் அனுதாபப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதற்குத்தான் எல்லாமே.ஆன்லைனில் ஆர்டர் செய்ய

புத்தகம் குறித்த சரவணனின் பதிவு - அண்ணியின் அணைப்பிலிருந்து பிரபாகரன் வரை ...

விருமாண்டி படம் பார்த்திருப்பீர்கள். ஒரே சம்பவத்தை கதாநாயகன் கமலும், வில்லன் பசுபதியும் வேறு விதமாக விவரிப்பார்கள். ஒரு சம்பவத்தை அதை விவரிப்பவன் தன் வசதிக்கு ஏற்ப ’கூடக் குறைய’ சொல்வதே ’ரஷோமான் விளைவு’. ரஷோமான் என்ற ஜப்பானியப் படம் ஒரு கொலையை நான்கு பேர் நான்கு விதமாகச் விவரிப்பதை அடிப்படையாகக் கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையும், போராட்டமும் கூட அப்படித்தான். பல்வேறு மர்மங்களும், யூகங்களும் நிறைந்ததாகவே அவரது வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது ... அதைச் சித்தரிப்பவர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு கோணங்களில் பிரபாகரனைப் பற்றிய கதைகள் உலவுகின்றன. ஒரு சாரார் அவரை உலகமகா தீவிரவாதி என்று வர்ணிக்கிறார்கள். ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலைகாரன் என்று வெறுக்கிறார்கள். மற்றொரு சாரார் அவரை உலகமகா புரட்சிக்காரன் என்றும், விடுதலைப் போராளி என்றும் கொண்டாடுகின்றனர். சிலர் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுக்கின்றனர்.

உண்மையில் அவர் யார்? சுருங்கச் சொன்னால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நடத்திய நீண்டதொரு உரிமைப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான அத்தியாயத்தை எழுதியவர். அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி அவரது வாழ்க்கைப் பாதையை, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தூண்டிய வரலாற்றுப் பின்னணியைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

எனக்கும் அப்படித்தான் இருந்தது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் பரபரப்புக்குரிய அந்த மனிதர் எதற்காக ஆயுதம் தூக்கினார் என்பதைத் தெரிந்து கொள்ளும் தேடல் இருந்தது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.

ஈழப் பிரச்சினையையும், விடுதலைப் புலிகளையும் உணர்வுப் பூர்வமாக அணுகுவது இந்த நூலில் நோக்கமல்ல. வரலாற்று ரீதியாக, அறிவுத் தளத்தில் அணுகும் நோக்கில் இது வெளியாகிறது.

வாழ்த்தும், வசவும் வரவேற்கப்படுகின்றன.

17 comments:

Anonymous said...

Is it pro-tiger or anti-tiger book?

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள். வசைபாட வைக்கமாட்டீர்களென்றே நம்புகிறேன்:) வரலாற்றை எழுதுவதற்கே தனியானதொரு தைரியம் வேண்டியிருக்கிறது இல்லையா?

boopathy perumal said...

வாழ்த்துக்கள்

சாத்திரி said...

புத்தகத்தை படித்து விட்டு எந்தளவு ஆதாரங்களை திரட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்து விட்டு என்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறேன்.

Chellamuthu Kuppusamy said...

அனானி,
இது ஆதரவுப் புத்தகமும் அல்ல எதிரான புத்தகமும் அல்ல, ஆவணப் புத்தகம்.

நன்றிகள் தமிழ்நதி, பூபாலன் மற்றும் சாத்திரி.

Anonymous said...

நீங்கள் தமிழ்நதி ,சாத்திரி போன்றோரின் பாராட்டை பெறவேண்டும் என்றால் பிரபாகரனை உலகத்தமிழருக்கே வழிகாட்டி என்று எழுத வேண்டும்.

Anonymous said...

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

Udhayakumar said...

அப்படிப்போடு... இன்று முதல் பிரபல எழுத்தாளர் ... (நீங்களே நிரப்பிக்குங்க)...

பார்த்து சூதனமா இருந்துக்குங்க.... புக் பார்சல் ஆகிறது :-)

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் நண்பரே

Chellamuthu Kuppusamy said...

நன்றி உதய். ஆமா புக் எங்கே பார்சல் ஆகுது,உங்க ஊருக்குனு நம்பறேன்.

வாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ் குமார்.

Anonymous said...

Good work. I think you have not written anything wrong about him. Otherwise you will face the fate as many other leaders in SL & India.

Anonymous said...

have you got permission from tamil sasi and ramani?

Walter Edwin said...

Its really a good article which we are not aware during our stay in south india.

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

ஓர்மைகள் said...

ஏம்பா கிழக்கு பதிப்பகத்தில் நூல் போடுறதெல்லாம் ஆவணமா. இரண்டு நாளைக்கு நெட்டில் உட்கார்ந்து டவுண்லோட் பண்ணினா ஒரு புக் எழுதிடுறீங்க இல்லையா? போன தடவை விடுதலைப் புலிகள் என்றொரு நூல் வெளியிட்டீர்கள் அதில் புதிதாக என்ன இருந்தது. கிழக்கு பதிப்பகம் செய்வது மிக மோசமான அறிவின் மோசடி..

Chellamuthu Kuppusamy said...

ஓர்மைகள்,

Please understand that I do not represent Kizhakku. Likewise, I neither agree nor disagree with your provoking comment - for I have not read all the book from that publishing house.

Books are written by individuals, not by publications.

சரவணன் ரெங்கநாதன் said...

என்னுடைய விமர்சனம் இங்கே http://pakadi.blogspot.com/2009/01/blog-post.html