Sunday, April 05, 2009

அயன் - தமிழ் சினிமா வணிகமாக்கலின் மைல் கல்

- செல்லமுத்து குப்புசாமி


இது தமிழ் சினிமாவின் watershed தருணம். அயன் படத்தை அப்படித்தான் என்னால் நோக்க முடிகிறது. முக்கியமான படம் என்று சொல்லும் போது சாரு நிவேதிதா வகையறாக்கள் பூத கண்ணாடி வைத்துத் தேடும் பின் நவீனத்துவத்தின் கூறுகளை உள்ளடக்கிய படம் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக் கூடாது. எப்படியும் உயிர்மையில் சாருவின் 'அயன்' விமர்சனம் வரும்.

(கல்யாணத்துக்கு முன்னாலான அல்லது கல்யாணத்துக்கு அப்பாலான பாலுறவு தவிர்த்த பின் நவீனத்துவக் கூறுகள் நான் படிக்கும் சினிமா விமர்சனங்களில் எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்பது வேறு விஷயம்)

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்று சொல்வதற்குக் காரணம் இது சன் பிக்சர்ஸ் வெளியீடாக வந்திருப்பது தவிர வேறொன்றுமில்லை. கடந்த ஓராண்டு காலத்தில் சன் நிறுவனம் வெளிட்ட படங்களைக் கூர்ந்து அவதானித்தால் அதன் வலிமை கூடி வருவதை உணர முடிகிறது. காதலில் விழுந்தேன் என்ற சொத்தைப் படம் தொடங்கி திண்டுக்கல் சாரதி, ஒரு ஜீவா படம், சுந்தர்.சி படங்கள், தனுஷ் நடித்த படிக்காதவன் என தனது எல்லையை விரிவாக்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகத்துக்கே ஒரு மைல் கல்லாக விளங்கப் போகிறது அயன்.

சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து அவற்றை வெளியிடுவது என்பது வேறு. பாரம்பரியம் மிக்க ஏ.வி.எம் போன்ற நிறுவனம், சூர்யா மாதிரியான நட்சத்திர ஹீரோவை வைத்து பெரிய பெட்ஜெட்டில் எடுத்த படத்தை மிகப் பெரிய அளவில் மார்க்கெடிங் செய்து வெளியிடுவது வேறு. அதனால் முக்கியத்துவம் பெறுகிறது அயன்.

படம் எப்படி இருந்தாலும் அதை சந்தைப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் சன் டிவி என்ற பிரம்மாண்டமான மீடியா கம்பெனியின் தயவு அல்லது கூட்டணி இலலாமல் அந்தப் படத்தை வெற்றியடையச் செய்ய முடியாது என்ற நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி உருவாகும் சூழல் ஆரோக்கியமானதா இல்லையா என்பதெல்லாம் இந்த விமர்சனத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

எனினும், ஆனானப்பட்ட ஏ.வி.எம்மே மாறனை நாடியிருக்கிறது என்றால் பாருங்கள். நேற்று படிக்காதவன், இன்று அயன், நாளை எந்திரன்.

************இந்த முக்கியத்துவம் தவிர்த்து அயனில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. முரட்டுக் காளை மற்றும் சகலகலா வல்லவன் மூலம் தமிழ் சினிமாவின் ரசனையை, அதன் போக்கை மாற்றியமைத்த ஏ.வி.எம் நிறுவனத்தின் மற்றுமொரு மசாலா படைப்பு.

ஹீரோ - சூர்யாவின் பெயர் தேவா - விமானத்தில் வந்து இறங்குகிறார். சக பயணி ஒருவன் மாட்டிக் கொள்கிறான். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சிடி என்று அவன் சொல்லும் சிடியை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட, அது புதுப் பட சிடி என்று தெரிய வருகிறது. அவனை ஆங்கிலத்தில் திட்டி விட்டு வெளியே வரும் தேவா, விமான நிலையம் கடந்ததும் சென்னை பாஷைக்கு மாறுகிறான்.

அடுத்த நாள் பட ரிலீஸ். அவனும் கடத்தி வந்திருக்கிறான். அதே சி.டி. ஹீரோவின் முதலாளி புரபு. தேவாவின் அப்பாவுக்கு ஃபிரண்டு. பிரபு கும்பலில் காது கேட்காத கருணாஸும் அடக்கம். நேராகச் சென்று - சினிமா தயாரிப்பாளர் ரேஞ்சுக்கு பூஜை போட்டு விட்டு சிடி பிரதியெடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

அதற்குள்ளாக போலீஸ் ரெய்டு வருகிறது. போலீஸிடம் போட்டுக் கொடுத்தது விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட ஆளின் முதலாளியான ஒரு சேட்டு பையன். பிரபுவை போலீஸ் கைது செய்யும் போது, ”அவருக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் என் தப்புதான் சார்” என்று சொல்லி தானாகவே வந்து ஒருவன் சரணாகிறான். அவன் பிரபுவிடம் பல முறை வேலை கேட்டு வந்தவன். தனக்காக ஜெயிலுக்குச் சென்று வருவதால் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார் பிரபு.

மகள் திருமணத்திற்காக சில காலம் படங்களில் நடிப்பதைத் தள்ளிப் போட்ட பிரபு இனி நிறையப் படங்களில் தலை காட்டுவார் என்று நம்பலாம். மனிதர் இன்னும் அழகாக உள்ளார்.

பிரபு சேட்டு வீட்டுக்குப் போகிறார். “இந்தா பாரு சேட்டு. நான் உங்கிட்டத்தான் தொழில் கத்துக்கிட்டேன். உன்னை நானும் போட்டுக் கொடுத்ததில்லை. என்னை நீயும் போட்டுக் கொடுத்ததில்லை. ஆனா உன் பையன் என் கிட்ட சிடி இருக்குன்னு போலீஸ்ல போட்டுக் கொடுத்துட்டான். இது நல்லா இல்லை” என்று புகார் சொல்கிறார்.

பிரபு மற்றும் பெரிய சேட் ஆகியோர் கடைபிடித்த தொழில் தர்மம் சின்ன சேட்டிடம் இல்லை. அப்பா சேட் பையனைக் கூப்பிட்டு கண்டிக்கிறார். பையன், ”தும் காம் கரோ” என்று சொல்லி விடுகிறான் பையன்.

************

காமிரா நம்மை ஒரு ஆப்பிரிக்க தேசத்துக்கு கொண்டு செல்கிறது. அங்கே ஒரு ஆயுதப் புரட்சிக் குழுவின் தலைவன். அவனைச் சந்தித்து அங்கிருந்து பல கோடி மதிப்புள்ள வைரத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்காக சூர்யாவை அனுப்புகிறார் பிரபு. கூடவே ஜெயிலுக்கு போய் விட்டு வந்த அந்தப் பையன். (அவர் பெயர் தெரியவில்லை. சன் மியூசிக்கில் அவரைப் பார்த்திருக்கிறோம்) படத்தில் அவன் கொஞ்சம் சபலிஸ்ட்.

தேவா பாத்ரூமில் இருக்கும் போது ஒரு அழகான ஆப்பிரிக்க பிகர் (அ.முத்துலிங்கம் கதையில் வர்ணிக்கும் பெண்ணைப் போல கருப்பாக, செக்ஸியாக) அவனை சல்லாபிக்க, அந்த ஓசை கேட்டு வெளியே வருகிறான் ஹீரோ. அவளை அடித்துத் துரத்துகிறான். பார்த்தால் வைரமும் அவளோடு மிஸ்ஸிங்.

ஒரு மிகப் பெரிய துரத்தல் மற்றும் சண்டைக்குப் பிறகு வைரத்தைக் கைப்பற்றி சென்னையில் வந்திறங்கும் போது பிரபுவின் குறுஞ்செய்தி. “நீ கண்காணிக்கப்படுகிறாய். எச்சரிக்கை”

காலணி ஹீல்ஸில் வைரத்தை மறைத்து வைத்திருக்கிறான் ஹீரோ. அதைப் பிய்த்து ஏர்போர்ட் கக்கூஸில் போட்டு விட்டு வெளியே வருகிறான். காலணியில் வைரம் இருப்பதாகவே சுங்க அதிகாரிகளுக்கு தகவல் வந்திருக்கிறது. அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் போடுகிறார் கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன். “வெறும் காலோடு எப்படி நான் வெளியே போவேன்?” என அவரைக் கலாய்த்து விட்டு இன்னொரு ஆபீஸரின் ஷூவோடு வெளியேறுகிறான் ஹீரோ.

கூட வந்த நண்பனிடம் கக்கூஸ் கழுவும் ஆட்கள் வைரத்தைக் கொண்டு வருவார்கள் என்று சொல்லியிருப்பான். அவனும் அப்படியே நம்பியிருப்பான். ஆனால் கழிப்பறையில் இருக்கும் போது வாட்டர் பாட்டிலில் சுயிங்கம் வைத்து ஒட்டிக் கொண்டடு வந்திருப்பான். பேக்கு மாதிரி இருக்கும் அந்த நண்பனுக்கு ஒரே ஆச்சரியம்.

வைரத்தை பிரபலமான நகைக்கடை அதிபரிடம் விற்கிறார்கள். கூடவே அவருக்காக வாங்கி வந்த வயாகராவையும் தருகிறார்கள்.

************

பிறகு அந்த சபலிஸ்ட் நண்பன் தன் வீடு என்று சொல்லி ஒரு இடத்துக்கு அழைத்துப் போகிறான். உண்மை தெரியாதா தேவாவும் அங்கே போக, அது ஒரு மாதிரியான இடமாக முடிகிறது. பிறகு உண்மையிலேயே அவனது வீட்டிற்குச் செல்லும் போது அதையும் தப்பாக நினைக்கும் தேவா அங்கே அந்த நண்பனின் தங்கையை அரைகுறை ஆடையில் காண்கிறான்.

அவளோ சுவருக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி அவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள். இடுப்பைத் தேட வேண்டியிருக்கிறது. ”பாக்கறதுக்கு சினேகா மாதிரி இருந்துக்கிட்டு பண்றதெல்லாம் நமீதா வேலை” என்று அவள் அண்ணனே சொல்லுமளவு சீக்கிரம் காதல் பற்றிக் கொள்கிறது. அந்த லூஸுப் பய அண்ணனின் முழு ஆதரவுடன்.

************


சென்னை துறைமுகத்தில் பழுதாகி ஒரு கப்பல் நிற்கிறது. அதன் கேப்டன் பல கோடி மதிப்புள்ள தங்கத்தை ரொட்டியில் மறைத்து வைத்து கடத்த ஏற்பாடு செய்திருந்தான். இப்போது அதை கரைக்கு எடுத்து வர வேண்டிய நிலை. சூர்யாவை அனுப்பி அதை மீட்டு வருகிறார் பிரபு.

ரொட்டியைப் பிய்த்து தங்கத்தை வெளியே எடுக்கும் வேலையை பிரபு & கருணாஸ் இருவரிடமும் விட்டு விட்டு தேவாவுடன் தன் தங்கையை மாயாஜாலுக்கு டிக்கேட் எடுத்து அனுப்புகிறான் நண்பன்.

அவர்கள் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது பிரபு போனில் அழைக்கிறார். தேவாவும் வருகிறான். அதைக் கண்டதும் அவனது நண்பன் தேவாவை தூர அனுப்ப முயற்சித்து, “உங்க அம்மா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்காங்க. உடனடியா போ” என்கிறான்.

போலீஸ் ரெய்ட் வந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஹீரோ உடனடியாக பிரபுவிடம் சென்று சரக்கைக இடம் மாற்றி போலீஸ் கன்னத்தில் கரி (நிஜமாகவே) பூசுகிறான்.

தங்கள் குழுவைப் பற்றிய தகவல் எப்படி கசிகிறது என்று குழம்பிக் கொண்டிருந்த பிரபு (தாஸ்) & சூர்யா (தேவா) இருவருக்கும் இப்போது உண்மையான துரோகி யாரென்று தெரிகிறது.

இதற்காகவா தங்கச்சியைக் கூட்டிக் கொடுத்தாய் என்று திட்டு விட்டு நண்பனைக் காறி உமிழ்கிறான் தேவா.

இடைவேளை (இப்போதெல்லாம் இதைக் கூட ஆங்கிலத்திலேதான் போடுகிறார்கள்)

************

போதைப் பொருள் கடத்த வேண்டும் என்று சொல்லி இரு ஆப்பிரிக்கர்கள் பிரபுவை நாடி வருகிறார்கள். எத்தனை கோடி கொடுத்தாலும் சில காரியங்களைச் செய்ய மாட்டேன் என்று கூறும் பிரபு, அதில் இதுவும் ஒன்று எனச் சொல்லி மறுத்து விடுகிறார். அவரது தொழில் தர்மம் அப்படி. பெரிய சேட்டும் கூட அப்படியே. ஆனால் சின்ன சேட்டு, அதாவது வில்லன், அப்படியல்ல.

போதைப் பொருள் விவகாரத்தில் அவன் கடுப்பாகி அப்பா சேட்டையே மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுக் கொல்கிறான்.

போதை மாத்திரையை பொட்டலம் கட்டி வயிற்றில் விழுங்குக வைத்து ஐந்தாறு பேரை மலேசியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அனுப்புகிறான். அங்கே சென்றதும் இனிக்மா கொடுத்து வரவழைத்து விடுவார்கள். போய்ச் சேரும் வரை அன்னம், தண்ணி எதுவும் கூடாது.

அந்த ஆசாமிகள் செல்லும் அதே விமானத்தில் தேவாவும் போகிறான். அந்த ஐந்தாறு பேரில் அவன் துரோகியாக மாறிய முன்னாள் நண்பனும் அடக்கம். அவன் நண்பனும் வயிற்றில் விழுங்கியிருக்கிறான். துரதிர்ஷ்டவசமாக வயிற்றுக்குள்ள் அந்தப் பொட்டலம் ஓட்டையாகி விட, உயிர் ஊசலாடுகிறது. மலேசியாவில் அவனைக் காப்பாற்ற விழைகிறான் ஹீரோ. சட்டச் சிக்கல் வந்து விடுமென்று டாக்டர் மறுத்து விடுகிறார். அவனோ உயிருக்குப் போராடுகிறான்.

கமலேஷ் என்ற பெயர் கொண்ட வில்லன் சின்ன சேட்டின் ஆட்கள் அவனை ஹீரோவிடமிருந்து கடத்திச் சென்று வயிற்றைக் கிழித்து போதை மருந்தையெல்லாம் எடுத்து விடுகிறார்கள். அவன் இறக்கும் தருவாயில் தேவா அதைக் கண்டு அவர்களை அடித்து விரட்டுகிறான். நண்பனின் இறுதி ஆசைக்கு இணங்க அவனது உடலை அந்த இடத்திலேயே எரித்து விடுகிறான்.

அவன் இந்தியா வந்ததும், துரோகியாக மாறிய நண்பனின் தங்கையான முன்னாள் காதலி நாயகனை போலீஸில் மாட்டுவிக்கிறாள். பிறகு அண்ணனின் மொபைல் கேமராவில் பதிவாகியிருப்பதைக் கண்டு தெளிகிறாள்.

************

ஹீரோ மீண்டும் சிங்கப்பூர் போகிறான். அப்போது விமான நிலையத்தில் ஒரு பெண் தன் மாமியாருக்கு மாத்திரை தருவதாகச் சொல்லி போதை மருந்து கேப்ஷூலை அவனிடம் அளிக்கிறாள். அது மருந்தல்ல, போதை மருந்து. வில்லனின் ஆட்கள் அவன் போதை மருந்து திருடிச் செல்வதாக பொன்வண்ணனுக்கு தகவல் தருகிறார்கள்.

இந்த உத்தியை ஹீரொ யூகிக்கிறான். பல கோடி மதிப்புள்ள பொருளை வயிற்றில் கடத்திச் செல்லும் காரியத்தைத் திசை திருப்பவே தன்னை மாட்டி விட்டிருப்பதாக அவன் கெஞ்சுகிறான். அவன் சொன்னதைக் கேட்டு பொன்வண்ணன் சோதனை போட்டு பெரிய கடத்தலைக் கண்டு பிடிக்கிறார்.

பிறகு சூர்யாவும், பொன்வண்ணனும் கூட்டணி அமைத்து வில்லனின் கடத்தல் எல்லாவற்றையும் கைப்பற்றுகிறார்கள். கதையின் போக்கில் தமன்னாவுடனான காதலும், டூயட் பாடல்களும் ஓடுகின்றன. சூர்யாவின் அம்மாவைக் கொல்ல சதி நடக்கிறது. பிரபுவைக் கொன்று விடுகிறார்கள். (அந்த விபத்தில் சூர்யா மட்டும் தப்புவதன் லாஜிக் எல்லாம் கேட்கக் கூடாது)

பிரபு செத்துப் போனதும் தனக்கு வர வேண்டிய வைரத்தின் கதி என்னவென்று நகைக்கடை அதிபர் கேட்கிறார். உங்கள் சண்டையின் என்னை விட்டு விடாதீர்கள் எனப் புலம்புகிறார்.

அதற்காக மறுபடியும் ஆப்பிரிக்கா போகிறான் தேவா. அவனுக்கு முன்பாகவே பிரபுவிடம் திருடிய துருப்புச் சீட்டை எடுத்துச் சென்ற வில்லன் வைரத்தை அபகரித்துத் திரும்பும் போது, அவனை அடித்து மலை உச்சியில் தொங்க விட்டுத் திரும்பும் ஹீரோவை ஏர்போட்டில் மறுபடியும் பொன்வண்ணன் மடக்குகிறார்.

ஜட்டி தவிர எல்லாவற்றையும் கழட்டித் தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.

“உங்களுக்கு யாரோ ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார்”

”ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்தது யாருன்னு பாக்கறியா?”

அது சூர்யாவின் அம்மா.

திருந்தி விடுகிறான் ஹீரோ. தலை விக்கைக் கழட்ட அதனுள் வைரக் கிரீடம். அதை நேர்மையாக ஒப்படைக்கும் போது, அவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

மாறாக கஸ்டம்ஸ் டிபார்ட்மென்டில் வேலை.

முன்பு ஷூவைக் கழட்டிய போது கஸ்டம்ஸ் அதிகாரியின் ஷூவைப் போட்டுக்கொண்டு வெளியேறிய ஹீரோ இப்போது ஜட்டியோடு நிற்கிறான். அப்போது அந்தப் பக்கமாக வரும் அதிகாரியின் யூனிஃபார்மைக் கழட்டி அவனுக்குப் போட்டு அனுப்புகிறார் பொன்வண்ணன்.

சுபம்.

************
தமிழ் சினிமாவின் மைல் கல் என்றெல்லாம் சொல்ல முடியாத அயன், சினிமா வெளியீட்டு முறையில் ஒரு மாற்றத்திற்கான முக்கியப் படி என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அந்த வகையில் இது இன்னுமொரு சகலகலா வல்லவன்.
ரசிக்கும் படி இருக்கிறது. சினிமா என்கிற பிசினஸில் இது ஒரு வெற்றிப் படமாக அமையும். போகிற போக்கில் குப்பை என்றெல்லாம் சொல்லக் கூடாது.

ஆறுதல் :
நல்ல வேளையாக கதாநாயகியைக் கடத்திச் சென்று மிரட்டும் வழக்கமான உத்தியை வில்லன் செய்யவில்லை.

பிறகு இன்னொரு விஷயம். அகராதியில் பார்த்தேன். அயன் என்றால் பிரம்மன் என்று பொருளாம்.

எதற்காக இந்தப் பெயர்? புரியவில்லை!

14 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஹா.. ஹா.. ஹா..

அப்பாடா நான் தப்பித்தேன்..!

செல்லமுத்து ஸார் எனக்குப் போட்டியா முழுக் கதையையும் எழுத ஆரம்பிச்சிட்டாரு..!

படிச்சிட்டீங்கள்லே.. என்னைய இனிமே ஒரு பய திட்டக் கூடாது.. சொல்லிட்டேன்..

செல்லமுத்து ஸார்.. நன்றி.. முழுசையும் படிச்சி்டடேன். ஆனாலும் கண்டிப்பா படம் பார்ப்பேன்..

சென்ஷி said...

உக்கார்ந்து அரைமணி நேரத்துல முழுப்பட பார்த்த எஃபெக்ட் :-))

Thamizhmaangani said...

ஏங்க முழு படத்தின் கதையையும் எழுதிவிட்டீர்கள்!

கே வி ஆனந்து சார் பார்த்தாருன்னா, எவ்வளவு கஷ்டப்படுவாரு! :(

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

shabi said...

னல்ல விமர்சனம்.பாடல்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லயே.ஒளிப்பதிவு சூப்பர்

குடுகுடுப்பை said...

உண்மைத்தமிழனை வழிமொழிகிறேன். படம் எனக்கு பிடிக்கவில்லை என்பது வேறு விசயம்.

Chellamuthu Kuppusamy said...

உண்மைத் தமிழன்: இது முழுமையான விமர்சனம் எல்லாம் கிடையாது. படத்தின் அபத்தங்களையெல்லாம் பட்டியல் போட முடியாது. இது ஒரு வணிக ரீதியான பொழுது போக்குப் படம். அந்த வகையில் ஓகே.

//உண்மைத்தமிழனை வழிமொழிகிறேன்// நல்லதுங்க குடுகுடுப்பை!

பிரேம்குமார் said...

//மற்றுமொரு மசாலா படைப்பு.//

கடத்தல் பற்றியும் அதற்காக நடக்கும் கொடுமைகள் பற்றி நன்றாக ஆராய்ந்து எடுத்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்

பிரேம்குமார் said...

அப்புறம் கதையை இப்படி வரிக்கு வரி எழுதனுமா என்ன?

Chellamuthu Kuppusamy said...

சென்ஷி, Thamizhmaangani:
நன்றி!

சுரேஷ்: உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.நன்றி.

Shabi: ஒளிப்பதிவு நன்றாகவே இருந்தது. பாடல்கள் ஓகே..

பிரேம்குமார்: உண்மைதான். அந்த பிள்ளையார் சிலையை வேதிப் பொருள் கொண்டு கரைக்கும் இடம் சூப்பர். ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களும் ஆங்கிலப் படம் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள், இயக்குனர்களைப் போலவே. (கருணாஸிடம் சிடி கேட்டு வருவாரே ஒரு இயக்குனர் :-))

மங்களூர் சிவா said...

nice review.

Arunram said...

Sir,

You have a lot of patience! After spending a good 2.5 hrs in seeing a masala movie, you have the power to write down the entire story too!

I also had the same question. Why name "Ayan"? One of my friends told that Ayan means eagle and may refer to one who smuggles illegal goods. But Google did not provide any result affirming that view.

Chellamuthu Kuppusamy said...

நன்றி சிவா!

அருணன்: //You have a lot of patience! After spending a good 2.5 hrs in seeing a masala movie, you have the power to write down the entire story too!//
ஹி ஹி ஹி ..

Anonymous said...

குப்பையை குப்பை என்று சொல்லாமல் எப்படி சொல்ல சொல்கிறீர்கள் நண்பரே.... ம்ம்ம்ம்...