Thursday, May 14, 2009

போருக்குப் பிந்தைய அரசியல் தீர்வு

- செல்லமுத்து குப்புசாமி

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள் என்ற தலைப்பில் தமிழ் சசி எழுதிய பதிவிற்கான எதிர்வினை.

அன்புள்ள சசி,

ஈழ மக்களின் சுய நிர்ணயப் போராட்டம் தோல்வியின் விளிம்பை எட்டியதற்கு கிட்டத்தட்ட நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். அந்த மக்களின் உரிமைகளை, அவர்தம் அரசியல் அபிலாசைகளை உலகின் பிற பகுதியினருக்கு (தமிழ் நாட்டிலேயே கூட சிறு விழுக்காட்டினருக்குத்தான் அதன் பின்னணி தெரியும்) விளக்கிச் சொல்லத் தவறியிருக்கிறோம்.

புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைகளைக் கடந்து மானுடம் சார்ந்து அங்கே அரங்கேறும் அவலத்தின் ஆழத்தை அணுகாமல் போயிருக்கிறோம். இந்திய ஊடக மற்றும் ராஜதந்திர பலத்தினால் சுய நிர்ணயப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்றாலும், சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற நாம் எந்த அளவு (இடைவிடாமல்) பிரயத்தனப்பட்டோம் என்பதும் ஒதுக்க முடியாத கேள்வி.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு என்றுமே இருந்ததில்லை. அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. இராஜூவ் காந்தியின் மரணம் நிகழாமல் போயிருந்தாலும் இந்தியாவின் நிலை மாறியிருக்காது.

அதே போல போரை நிறுத்தவே துப்பில்லாத சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சம உரிமையோடு வாழும் அரசியல் தீர்வை உருவாக்கும் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. We are helpless, as you said.

இலங்கை அரசை பல முறை பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது புலிகளின் இராணுவ பலம்தான் என்றாலும், உரிமைப் போர் வெல்வதற்கு இராணுவ பலம் மட்டுமே போதாது. (அதற்காக அகிம்சைப் போராட்டம் சிங்கள எஜமானர்களை பேச்சு மேசையில் இழுத்து அமர வைக்கும் என்றல்ல) கூடவே ராஜதந்திர பலமும் முக்கியம். எனக்கென்னவோ பாலசிங்கத்தின் மறைவு சமாதானத் தீர்வின் மரணமாகவும் கருதப்பட வேண்டிய ஒன்று எனப் படுகிறது. ஒரு சில தனி நபர்களை முன்னிலைப்படுத்திய, அவர்களை மட்டுமே நம்பிய அமைப்புகளின் கதி இவ்வாறே முடிகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களை விடுத்து, இன்றைக்கு ஈழத்தில் பிறந்து வளர்ந்து, இன்னமும் உயிரோடிருக்கும் இளம் தலைமுறையினரில் பாலசிங்கம் போல கல்வி மற்றும் அரசியல் அறிவு நிறைந்தோர் எத்தனை பேர் உள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை.

புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் நிலையில் (இதன் சாத்தியம் குறித்து சிலர் கவலைப்படலாம்) தமிழர்களுக்கு பிராந்திய அதிகாரமும், ராஜீவ் காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்வது போல வடக்கு-கிழக்கு பகுதிகளை இணைத்து தமிழ் மாநிலம் அமைப்பதற்கும் இலங்கை அரசு இறங்கி வராது. வடக்கு தேவானந்தாவுக்கும், கிழக்கு பிள்ளையானுக்கும் என்பது கூட கனவே. மட்டக்களப்பு ஒருவருக்கு, அம்பாறை ஒருவருக்கு, யாழ்ப்பாணம் ஒருவருக்கு, மன்னார் ஒருவருக்கு என தமிழர் தாயகம் ஐந்தாறாகப் பிரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

இறுதிப் போர் முடிந்த பிறகு கை, கால் இழந்திருக்கும் இனம் முறையான கல்வி பெற்று தமது குரலை மேலெடுக்கவே 20-30 ஆண்டுகள் ஆகும். தமிழ் தேசிய சிந்தனை அப்போது பலம் பெறலாம். ஒரு வேளை சமஷ்டி/கூட்டாட்சித் தீர்வு என்பது அப்போது நடக்கலாம். அதுவும் முற்போக்கான சிங்கள அரசியல் தலைமை அமைந்தால் மட்டுமே அது நடக்கும்.

ஆனால் அதையெல்லாம் விட, அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

8 comments:

Anonymous said...

similar post http://selvanayaki.blogspot.com/2009/05/blog-post.html

Anonymous said...

Let Prabhakaran agree to lease Triconmalee harbour to US for (say) 50 years, Eelam would be a reality within a year.

Anonymous said...

பிரபாகரனின் தமிழீழம் இன்று ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர். பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.பிரபாகரன் ஆகாய விமானம் வரை வேடிக்கை காட்டி இந்தா தமிழீழம் என்றவர். இன்று அவர் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழக்க, பார்ப்பனியம் வழிநடத்தும் அம்மா ஜெயலலிதாவின் கற்பனை தமிழீழத்தில் இன்று சரணடைகின்றனர்.வலதுசாரிய புலியிசம் தன் அந்திமத்தில் கூட, தமிழினத்தை கனவுலகில் நிலைநிறுத்த முனைகின்றது. அதை இந்தியாவின் றோவின் பின், மீளவும் வடியவிடுகின்றது. எந்த றோ இந்த தமிழீழத்தை வலதுசாரி பாசிசமாக வளர்த்து அழிக்க இதில் தலையிட்டு, பணமும் பயிற்சியும் வழங்கியதோ, அந்த றோவின் பின் மீண்டும் புலிகள். இப்படி றோ மக்களை சார்ந்திருக்கக் கூடிய, அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்தது. இன்றும் மக்கள் சொந்தமாக எதையும் அணுகக் கூடாது என்ற றோவின் அக்கறை, ஜெயலலிதா ஊடாக புலியிசத்துக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழீழத்தை வைத்து சுரண்டித் தின்னும் புலியிசம், இந்த றோவின் சதியின் பின் அணிதிரளுகின்றது.இதற்காக உலகெங்கும் உள்ள புலிப் பினாமி அமைப்புகள் தந்திகள் அறிக்கைகள் மூலம் வாழ்த்துகளை கூட தமிழீழ ஜெயலலிதா அவர்களுக்கு அனுப்பிவிட்டனர். புலியின் வெற்றிடத்தில் மீண்டும் றோ. எந்தப் பார்ப்பனியம் தமிழ் மக்களைக் கொல்வதை ஆதரித்து கொக்கரித்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றதோ, அது மீண்டும் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையின் ஒளியாக புகுந்துள்ளது. இப்படி புலிகளின் தலைவர் பிரபாகரன் இடத்தை ஜெயலலிதா அபகரித்துக் கொள்வது கண்கொள்ளாக் காட்சிதான். புலியிசத்தின் தமிழீழம் எப்படி கற்பனையானதோ, அப்படித்தான் பார்ப்பனர்களின் தமிழீழமும். ஆனால் அன்னியனிடம் வெட்கம் கெட்டு சுயாதீனம் கெட்டு பிச்சை எடுக்கும் தமிழன், சுயமும் சுயஅறிவுமற்று, பகுத்தறிவின்றி கால்களில் வீழ்கின்றனர்.
பிரபானிசமே புலியிசமாக, அது தமிழீழ மக்களை ஒடுக்கியும் பிளந்தது. இதன் மூலம் சுரண்டி வாழும் அரசியல் கூறாகியது. இப்படி மாபியாக் கும்பலின் தமிழீழம், பரந்துபட்ட மக்களின் மேலான, பேரினவாத ஒடுக்குமுறைக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டது. இது எம் மக்களை என்ன செய்தது!?சுயநிர்ணயத்ததை மறுதலித்து, தமிழீழத்தை முன்னிறுத்தியது. ஒரு நாட்டின் சொந்த இறைமைக்கான பொருளாதார கூறை மறுத்து, அன்னிய சக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் தமிழீழத்தை முன்னிறுத்தியது.இப்படி சுயநிர்ணயம் என்பதை பொருளாதார துறையில் மறுத்தவர்கள், அன்னிய உதவியில் சுயநிர்ணயத்தையே இழந்தனர். சொந்த மக்களையே தமக்கு எதிரியாக நிறுத்தினர். சமூகத்தினுள் வன்மமும், பகையும் கொண்ட மனித உறவுகளை திணித்தனர்.தாயை மகன் உளவு பார்க்க, அண்ணணை தம்பி கொல்ல.. என்று எத்தனை பிளவுகளும், வக்கிரங்களும் நடந்தேறின. இப்படி குடும்பத்தினுள் கூட இந்த புலியிசம், பதம் பார்த்தது. இப்படி மனித அவலத்தின் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்த தமிழீழம், தன் மக்களையே கொன்று குவித்தது. பிளவுகளையும், பிரிவுகளையும் கொண்டு, தமிழினத்தை சுக்கு நூறாக்கியது. இப்படி தமிழீழம் என்பது, தனக்கு எதிராக தன்னை அணிதிரட்டிக்கொண்டது.
தமிழீழம் பெற வேண்டும் என்றால், இலங்கையில் ஒன்றுபட்ட ஜக்கியத்துக்காக உறுதியாக போராடியிருக்க வேண்டும். இதன் மூலம் பிரிவினையைத் தவிர வேறு வழியில்ல என்பதை, சிங்கள மக்களின் ஒரு பகுதி ஏற்கும் வண்ணம் போராடியிருக்க வேண்டும். அதேபோல் அயல்நாட்டு மக்கள், உலக மக்கள, எம் போராட்டத்தின் நியாயத்தை ஏற்று குரல் கொடுத்து போராடியிருக்க வேண்டும். அதேநேரம் ஜெயலலிதா ஊடாக, மீண்டும் தமிழீழத்தைக் காட்டுகின்றது.மாபியா புலியிசம் தான் பிழைத்துக்கொள்ள, பெரியார் முதல் பார்ப்பனியம் வரை தன் வியாபாரத்திற்கு ஏற்ப வித்தை காட்டுகின்றது. தமிழ்மக்களோ பேரினவாத கொடுமையில் சிக்கி சிதைகின்றனர். இதை புலியிசம் தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் அதேநேரம், பார்ப்பனியத்தின் பூனூலாகவே தமிழீழத்தை மாற்றியுள்ளனர்.

Anonymous said...

பேர் போட்டு எழுதாத பெரிய மனுஷா உங்க பேரு இரயாகரனா?

Prem said...

On the political side the death of Balasingam and TamilSelvan created a huge gap which could not be filled.The death of Balasingam could be natural but the later was a planned one.. to bring down the political strength.
It is time for us to review the way we fight and it is important to create diplomats as disciplined as the armed cadres.We invested in creating highly trained armed cadres but not diplomats and now its time to look into this possibility.

These are tough times and it may break us into pieces but it is important not to lose hope and stay focused.Lets understand the reality.. Freedom is not free and its time for us to review ourselves and take it to the next level.

sen said...

/தமிழீழம் பெற வேண்டும் என்றால், இலங்கையில் ஒன்றுபட்ட ஜக்கியத்துக்காக உறுதியாக போராடியிருக்க வேண்டும். இதன் மூலம் பிரிவினையைத் தவிர வேறு வழியில்ல என்பதை, சிங்கள மக்களின் ஒரு பகுதி ஏற்கும் வண்ணம் போராடியிருக்க வேண்டும்./

இதில் சொல்லப்பட்டு இருப்பது யாருக்காவது புரிகிறதா?
ஐக்கிய இலங்கைக்கு பாடுபடவேண்டுமாம்.,தமிழ் ஈழம் கிடைத்துவிடுமாம்.
இது என்ன வழவழா கொழகொழா வாதம்.
கலைஞரும் சொல்லில் வீரர்தான்.
அவர் சொல்வது அலங்கார ,பசப்பு வார்த்தைகள் என்றாலும் அவர் சொல்வது தெளிவாக இருக்கும் ,எதைச் சொல்கிறார் என்று புரியும்.
ஆனால் இவர்கள் புலிப்பாசிசம் என்ற வார்த்தையை மட்டும் அங்கே இங்கே தெளித்துவிட்டு ஏதோ சொல்கிறார்கள் ,ஒன்றும் புரியவில்லை.
இது யாராக இருக்கும் ?
பி யாகரனா ? அல்லது ஸ்ரீரங்கனா ?

Anonymous said...

இந்தியாவில் புதிய அரசு பதவி ஏற்பதற்குள் பிரபாகரன் அழிக்கப்படுவார்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஆய்வு நண்பரே