Monday, June 08, 2009

ஐ.டி. இளைஞர்கள் அமைதிப் பேரணி (ஈழம்)

Tragedy of mankind is not due to brutality of few, but due to silence of many.புத்தரில் பெயரில்

இலங்கை அரசின் வதை முகாம்களில் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் திறந்த வெளிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அங்கே அவர்கள் படிப்படியாகக் கொல்லப்படுவதையும் கண்டித்து,சர்வதேச சமுதாயத்தை நோக்கி எழுப்பியதில் சிலரது மெளனம் நேற்று மாலை கலைந்தது, ஒர் அமைதிப் பேரணி வடிவில்.இப்பேரணி தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.


போராளிகள் மறைவதில்லை.


மன்றோ சிலை முதல் சேப்பாக்கம் வரை நீண்ட இப்பயணத்தில் பெரும்பாலும் இளைஞர்களே பங்கெடுத்தனர்.


போர்க் குற்றங்களுக்காக..குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் பெண்களும், குழந்தைகளும் பங்கு பெற்றனர்.

அடுத்த தலைமுறை....

The Hindu & Indian Express இல் இருந்து வந்ததாக இரு பெண் நிருபர்கள் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்களை நோக்கி, “நீங்கல்லாம் யார்? இதை எப்படி ஆர்கனைஸ் பண்ணீங்க? எப்படி இலங்கை அரசு மீது தப்பு சொல்றீங்க? நாமெல்லாம் இந்தியர்கள் அல்லவா?” என்று மல்லுக்கு நின்றனர்.

அதற்கு ஒரு பையன் திருப்பிச் சொன்னது: “First of all, we are all humans"சர்வதேச சமுதாயத்தை நோக்கி..


லசந்தவின் கொலையும், ராமின் லங்கரத்னா வருதும்.. மக்களுக்குத் தெரிந்தே இருக்கிறது..

தந்தை ஜெகத் கஸ்பர் மற்றும் முகம் மறைக்கப்பட்டிருக்கும் அய்யநாதன்அட்டையை மட்டும் படம் பிடிக்க அனுமதிக்காமல் தன்னையும் சேர்த்தே பிடிக்குமாறு சொன்னவர்..

அதிகார வர்க்கத்தைக் கண்டித்து உரக்கக் குரல் கொடுத்துக் கோஷம் போட்ட அம்மையார்..கோஷம் ..பேருந்தில் சும்மா போனவர்களும், இரு சக்கர வாகனத்தின் போனவர்களும் பேரணியில் இணைந்தனர்..


பேனருக்குப் பின்னால் பத்திரிக்கையாளர் அய்யநாதன்..
பேரணியின் முடிவில் அய்யநாதனும், தந்தை ஜெகத் கஸ்பரும் சிறு உரை நிகழ்த்தினார்கள்.

27 comments:

இராவணன் said...

miga nanri kupps for sharing.

Vaa.Manikandan said...

ஆறுதல் தரும் படங்கள்.

வண்ணத்துபூச்சியார் said...

பகிர்விற்கு நன்றிகள் பல..

ரஜினி ரசிகன் said...

Please organize more on future... we are ready to join...

ராஜ நடராஜன் said...

இடுகையும்,படங்களும் உரிமைக்கான நம்பிக்கையை துளிர் விடச் செய்கின்றன.

Anonymous said...

பொழுது போகாம வாக்கிங் போறதெல்லாம் ஒரு பேரணியா?

Anonymous said...

Thank you brothers and sisters.

- Kiri (Eelathamilan)

ஸ்ரீசரண் said...

பதிவிட்டமைக்கு நன்றி

இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் SAVE TAMILS கூகுள் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்

இந்த குழுமத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவர்கள் savetamil@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்--சரவணகுமார்

Anonymous said...

தப்புத் தாளம். தமிழர்க்கு அவலம் யாரால் எற்பட்டதோ அவர்களுக்கு ஆதரவாக ஒரு பேரணி.

Chellamuthu Kuppusamy said...

இராவணன். மணிகண்டன், வண்ணத்துப்பூச்சியார், ரஜினி ரசிகன்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பதி said...

பகிர்ந்ததிற்கு நன்றி !!!!

நம்பிக்கை அளிக்கின்றன படங்கள்....

Participant said...

More than 1,00 youths participated in it. But see what Hindu reported.

http://www.hindu.com/2009/06/08/stories/2009060860140500.htm

//
More than a hundred people participated in the ‘Rally for Justice’ holding placards condemning the Sri Lankan government and criticising the Indian Government’s inaction.

//

Anonymous said...

The Hindu & Indian Express இல் இருந்து வந்ததாக இரு பெண் நிருபர்கள் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்களை நோக்கி, “நீங்கல்லாம் யார்? இதை எப்படி ஆர்கனைஸ் பண்ணீங்க? எப்படி இலங்கை அரசு மீது தப்பு சொல்றீங்க? நாமெல்லாம் இந்தியர்கள் அல்லவா?” என்று மல்லுக்கு நின்றனர்.

அதற்கு ஒரு பையன் திருப்பிச் சொன்னது: “First of all, we are all humans"

Well done.

Ealathamilargkku Neethi kidaikkum varai Thodara vaendum idhu Ponra Manithabimana Poratangal.

( Nile Raja )

ஜோதிபாரதி said...

பகிர்வுக்கு நன்றி ஐயா!

பிரதமர் மன்மோகன் சிங்குக்காகவோ, முதல்வர் கருணாநிதிக்காகவோ யாரும் வேண்டுகோள் பதாகை கொண்டுவராததைக் கவனித்தேன் ஒன்றும் வியப்பளிக்கவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

ஆறுதலாக இருக்கு

Vasan, Canada said...

Thank you my brothers and sisters.

கிரி said...

பகிர்விற்கு நன்றி

Anonymous said...

//More than 1,00 youths participated in it. But see what Hindu reported.//

குறைந்த பட்சம் 2,000 பேராவது கலந்து கொண்டிருப்பார்கள்.

Chellamuthu Kuppusamy said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

பிருந்தன் said...

மனதுக்கு ஆறுதலாக இருகிறது நன்றிகள்.

Anonymous said...

Chennai alone might employ more than 2 lakh IT professionals, just a mere 2000 does not make it a rally by IT professionals.

பாலா... said...

பகிர்தலுக்கு நன்றி

கல்வெட்டு said...

மிகவும் தேவையான ஒன்று.
கலந்து கொண்டவர்கள், அமைப்பாளர்களுக்கு நன்றி!

**

சும்மா இணையத்தில் சொம்படிப்பவர்கள் மத்தியில் தெருவில் இறங்கியமைக்கு வாழ்த்துகள்!

**

நரேஷ் said...

பகிர்தலுக்கு நன்றி!!!

தீப்பெட்டி said...

நண்பரே..
பகிர்தலுக்கு நன்றிகள் பல..

தமிழ்நெஞ்சம் said...

Thanks for sharing.

க. தங்கமணி பிரபு said...

அற்புதமான பதிவு. பேரனியில் கலந்துகொள்ளாததற்கு வருந்துகிறேன்.