Tuesday, August 11, 2009

பன்றிக் காய்ச்சலை அரசியலாக்க வேண்டாம்

தயவு செய்து பன்றிக் காய்ச்சலை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று சொல்லாவிட்டாலும் கூட “யாரும் புரளியைப் பரப்ப வேண்டாம்” (நோயை மட்டும் பரப்பலாமாக்கும்??) என்று 'படித்த'வர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதைப் புரளியாக அவர் கருதுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களுக்கு மூன்றே மூன்று பரிசோதனை நிலையங்கள்தான் என்பதே புரியாத ஒன்றாக இருக்கிறது. நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பது என்பது வேறு; நோய் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது வேறு.

இதில் இரண்டாவதையாவது துரிதமாகச் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்க வேண்டாமா?

இது தொடர்பாக இன்று கண்ணில் பட்ட ஒரு செய்தி..


21 comments:

chinnu said...

அன்பிற்கினிய செல்லமுத்து குப்புசாமி சார்

மூன்று பரிசோதனை மையத்தையாவது இவனுங்க வச்சிருக்கானுங்களே அதுக்காகவாது நாம் சந்தோசப்பட்டுக்கொள்ளவேண்டும் சார்.

ஆமாம் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அரசியல் வாதிகளிடம் தங்களுடையா பிரச்னையை தீர்க்க சொல்லுவதற்கு? வரவு எட்டணா செலவு பத்தணா என்ற திரைப்படத்தை பார்த்தீர்களா? அதில் தண்ணீர் கேட்டு வரும் மக்களைப்பார்த்து கவுண்டமணி சொல்வார், ''உங்களுக்கு என்னடா உரிமை இருகுத்து தண்ணீர் கேட்கிறதுக்கு? நீங்க ஒட்டு போடலீடா நூறு ரூபாய்க்கும், ஒரு கோட்டருகும் ஒட்ட வித்துட்டீங்க. வேணுமுன்னா அடுத்த தேர்தலில் கொன்சம் சேத்து போட்டு கொடுங்க செய்யிறோம். அத்து ஜனநாயகம், அது மக்களாட்ச்சி,'' (இடையி தண்ணீர் கேட்டு போராட வந்த வடிவேலு சீரியசா எங்க தெருவுக்கு கோட்டர் மட்டும் தான் வந்தது நூறு ரூபா வரல்ல என்று சீரியசா கேட்பார்)

நிலைமை இப்படி இருக்க நீங்க என்னடானா மூன்று பரிசோதனை சாலை தான் இருக்குது என்று சொல்கிறீர்கள்.

சரி என்ன பண்றது நீங்களும் ஊதற சங்க ஊதித்தான ஆகணும். ஏனென்றால் எழுத்தாளர் என்ற சுமை உங்களின் மீது விழுந்து விட்டதல்லவா?

மிக்க அன்புடன்
பெருமாள்
கரூர்

ஜோ/Joe said...

ஏற்பாடுகள் போதாது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என கலைஞர் சொன்னதும் நியாயமானது .

யுவகிருஷ்ணா said...

இதுபோன்ற பதிவுகள் எழுதுவதற்கு முன்பாக பொதுசுகாதாரத் துறையில் பணியாற்றுபவர் யாரிடமாவது பேசிவிட்டு எழுதுதல் நலம் :-)

டாக்டர் ப்ரூனோ கூட அரசு மருத்துவராகதான் பணியாற்றுகிறார். அவரிடமாவது பேசியிருக்கலாம்!

கல்வெட்டு said...

//ஆமாம் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அரசியல் வாதிகளிடம் தங்களுடையா பிரச்னையை தீர்க்க சொல்லுவதற்கு?//

100 % true

ரோட்டில் சிக்னலை மதிக்காத xxxடங்களும்,வரிசையில் எப்படி நிற்பது என்று தெரியாத xxxxகளுக்கும் கொள்ளை அடிப்பவர்களே தலைவர்களாக வருவார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தகுதிக்கேற்ற தலைமைதான் வாய்க்கும் for more ...

http://masivakumar.blogspot.com/2009/04/blog-post_14.html

Chellamuthu Kuppusamy said...

நன்றி பெருமாள் & ஜோ.

யுவகிருஷ்ணா:
உங்கள் கோபம் என் மீதா அல்லது சின்னு(பெருமாள்) போட்ட பின்னூட்டம் மீதா? ;-) நிர்வாகத்தின் மீதான் விமர்சனங்களை எல்லாம் கலைஞருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக நீங்கள் கருதவில்லை என்றால்தான் ஆசரியம்.

கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களை நடத்துவதை தனியாரிடம் விட்டுவிட்டு சாராய விற்பனையை அரசாங்கம் எடுத்தும் நடத்தும் கால கட்டத்தில் நாம் வசிக்கிறோம்.

perumal said...

to அன்பிற்கினிய நண்பர் யுவகிருஷ்ணா அவர்களுக்கு

சிக்குன் குன்யா வந்த பொழுது நம் எஜமானர்கள் (அரசியல் வாதிகள்) என்ன சொன்னார்கள்? ""யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் சிக்குன் குன்யா வே இல்லை என்ற தோரணையில் பேசிவந்ததை மறந்து விட்டீர்களா?சரி இந்த கொள்ளை நோய்களையாவது விட்டுவிடுவோம். இந்த தெரு நாய்களின் அட்டகாசத்தைக்கூடவா இவர்களால் அடக்கமுடியவில்லை? சரி ஆற்றில் சாயநீர்
கலப்பதைத்தான் இவர்களால் தடுக்கமுடியவில்லை தடுகமுடியாததிர்ர்க்கு ஒரு லாஜிக் உள்ளது ஆனால் இந்த தெரு நாய்களை ஒழிப்பதன் மூலம் இவர்களின் ஊழல் வாழ்வுக்கு எந்த பங்கமும் வரப்போவதில்லேயே................

அண்மையில் படித்த ஒரு செய்தி எண்டா இந்த நாட்டில் வாழ்கிறோம்? என்று எண்ணவைத்தது.

அந்த செய்தி : மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிழ்ச்சை பெற வந்த எய்ட்ஸ் நோயாளி ஒருவரை வெறிநாய் கடித்து அவருக்கு ரேப்பிஸ் நோயும் தாக்கி அவர் வெளியே ஓட்டம் பிடித்தார் என்று. எப்படி சார் இந்த செய்தியை படித்தும் நாம் நிம்மதியாக இருப்பது?

செல்வேந்திரன் said...

பன்றிக் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிற சமயத்திலே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்காமல் 'ஜனநாயகப் பணி' செய்ய தம் பிள்ளைகளை கம்பத்திற்கும், தொண்டாமுத்தூருக்கும், ஸ்ரீவைகுண்டத்திற்கும், இளையான்குடிக்கும், பர்கூருக்கும் துணிச்சலோடு அனுப்பி வைத்திருக்கும் முத்தமிழ் வித்தவனை...ச்சீ வித்தகனையா கேள்வி கேட்கிறீர்கள்?!

Anonymous said...

//சிக்குன் குன்யா வந்த பொழுது நம் எஜமானர்கள் (அரசியல் வாதிகள்) என்ன சொன்னார்கள்? ""யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் சிக்குன் குன்யா வே இல்லை என்ற தோரணையில் பேசிவந்ததை மறந்து விட்டீர்களா?//

அப்படியெல்லாம் பேசவே இல்லை.. நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளாதீர்கள்

சிக்குன் குனியா இருக்கிறது என்பதால் தான் அதற்குரிய த்டுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை மறந்து விட்டீர்களா

சிக்குன்குனியாவிற்கு எதிராக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் 2006 அக்டோபருக்கு பின்னர் அந்த நோய் தமிழகத்தில் இல்லை

சிக்குன் குனியாவினால் தமிழகத்தில் ஒருவர் கூட மரணமடைவில்லை

(பன்றிக்காய்ச்சலினால் மரணம் உண்டு. சிக்குன்குனியாவினால் மரணம் கிடையாது)

--

அரசு எவ்வளவு வேலை பார்த்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத நபர்களை பார்த்தால் அண்மையில் படித்த ஒரு செய்தி எண்டா இந்த நாட்டில் வாழ்கிறோம்? என்று எண்ணவைக்கிறது.

--

எப்படி சார் இந்த உங்களை மாதிரி மனசாட்சி இல்லாமல் பேசுபவர்களை வைத்துக்கொண்டு நாம் நிம்மதியாக இருப்பது

--

செல்லமுத்து குப்புசாமி சார்

தீநுண்ம பரிசோதனை என்பது சிறுநீரில் சக்கரை இருக்கா இல்லையா என்று கண்டறியும் எளிதான பரிசோதனை கிடையாது

அந்த பரிசோதனை கூடங்களை நிறுவ ஏகப்பட்ட நடைமுறை உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை உள்ளது. எல்லா இடங்களிலும் அதை நிறுவ முடியாது

--

அடுத்த முக்கிய விஷயம் : மூன்று இடங்களில் பரிசோதனை நிலையம் என்றால் நீங்கள் அங்கு சென்று தான் பரிசோதனை செய்ய வேண்டுமென்று இல்லை

உங்கள் இரத்தம் / பஞ்சுருட்டு எடுத்து அங்கு அனுப்பினால் போதும்.

--

//இதில் இரண்டாவதையாவது துரிதமாகச் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்க வேண்டாமா?//

பிற மாநிலங்களுக்கு முன்னர் மூன்று கூடங்கள் அமைக்கிறோம் என்று கூறிய பின்னரும் குறை கூறும் உங்களை போன்றவர்களை திருப்தி படுத்தவே முடியாது

--

//எதைப் புரளியாக அவர் கருதுகிறார் என்று தெரியவில்லை. //

1. எலுமிச்சை சாறு குடி, நெத்திலி சாப்பிடு என்று குறுஞ்செய்தி வருகிறதே அது புரளி

2. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக 3 பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வந்த பின்னரும் ஒன்றும் செய்யவில்லை என்று எழுதுகிறார்களே அது புரளி

3. நான்கு மாதம் (ஜூலை 2006 முதல் அக்டோபர் 2006) பாடுபட்டு சிக்குன்குனியாவை ஒழித்த பின்னரும்
அது குறித்து மாற்றாக செய்தி பரப்புகிறார்களே அது புரளி

---

//கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களை நடத்துவதை தனியாரிடம் விட்டுவிட்டு சாராய விற்பனையை அரசாங்கம் எடுத்தும் நடத்தும் கால கட்டத்தில் நாம் வசிக்கிறோம்.//

இந்த விஷயத்தில் நான் உங்கள் கட்சி :) :) :)

இதில் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

--

அடுத்தாக

காலராவை விட, டைப்பாய்டை விட, காசநோயை விட மலேரியாவை விட பன்றி காய்ச்சல் ஒன்றும் பயங்கர நோய் கிடையாது

அப்படி இருக்க அதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் செய்திகள் கூட ஊடக பயங்கரவாதமே !!

perumal said...

இனி எனது பின்னூட்டம் பெருமாள் என்ற பெயரிலியே வரும். சின்னு என்ற பெயரில் வரத்து என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் சார்.

பிரியமுடன்
பெருமாள்
கரூர்

perumal said...

இனி எனது பின்னூட்டம் பெருமாள் என்ற பெயரிலியே வரும். சின்னு என்ற பெயரில் வராது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் சார்.

பிரியமுடன்
பெருமாள்
கரூர்

செல்வேந்திரன் said...

ஸ்ரீமான் அணானியார் கவனத்திற்கு,


கோவில்பட்டியில் பத்திரகாளியம்மன் தெருவில் மட்டும் சுமார் ஐநூறு நபர்கள் சிக்கன்குனியா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிக்குன்குன்யா கோபாலபுரத்தில் மட்டும் ஒழிக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

//காலராவை விட, டைப்பாய்டை விட, காசநோயை விட மலேரியாவை விட பன்றி காய்ச்சல் ஒன்றும் பயங்கர நோய் கிடையாது

அப்படி இருக்க அதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் செய்திகள் கூட ஊடக பயங்கரவாதமே !!
//

காவிரிக்குக் குறுக்கே மூன்று அணைகளை கர்நாடகம் கட்டும் போது அதைப் பற்றி மூச்சு விடாமல் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நம்மையெல்லாம் கலைஞர் டிவி மூலம் ஏமாற்றினாரே அதை விடப் பெரிய ஊடகப் பயங்கரவாதமா இது?

சும்மா ஊடகம் ஊடகம் என்கிறீர்களே, தமிழ்நட்டில் உங்கள் கட்சிதானே எல்லா ஊடகத்தையும் வைத்திருக்கிறது?

Anonymous said...

//எதைப் புரளியாக அவர் கருதுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களுக்கு மூன்றே மூன்று பரிசோதனை நிலையங்கள்தான் என்பதே புரியாத ஒன்றாக இருக்கிறது.//

இது தான் அக்மார்க் புரளி

தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன (சென்னை மற்றும் வேலூர்)

தற்சமயம் மேலும் மூன்று

ஆக மொத்தம் ஐந்து

அப்படியிருக்கும் போது மூன்று என்று போடுவது எந்த வகையில் நியாயம்

செல்லுமுத்து அண்ணாச்சி.... இது தான் உங்களது தர்மமா

Anonymous said...

//கோவில்பட்டியில் பத்திரகாளியம்மன் தெருவில் மட்டும் சுமார் ஐநூறு நபர்கள் சிக்கன்குனியா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிக்குன்குன்யா கோபாலபுரத்தில் மட்டும் ஒழிக்கப்பட்டுள்ளது.//

2006ல் சிகிச்சை எடுத்ததா அல்லது இன்று அவர்களுக்கு அந்த நோய் தாக்கியுள்ளதா

அது சாதாரண வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியாவா

சிக்குன்குனியா என்று எப்படி கூறுகிறீர்கள்

எங்கு பரிசோதனை செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

Anonymous said...

//காவிரிக்குக் குறுக்கே மூன்று அணைகளை கர்நாடகம் கட்டும் போது அதைப் பற்றி மூச்சு விடாமல் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நம்மையெல்லாம் கலைஞர் டிவி மூலம் ஏமாற்றினாரே அதை விடப் பெரிய ஊடகப் பயங்கரவாதமா இது?
//

அனானி உங்கள் நோக்கம் பன்றிக்காய்ச்சல் பற்றி அல்ல என்பது புரிகிறது

மிக்க நன்றி ...

Anonymous said...

எதாவது காரணத்தை வைத்துக்கொண்டு திமுகவை திட்டும் கீழ்த்தர அரசியலில் செல்லமுத்துவும் சேர்ந்து விட்டரா

காவிரி குறித்த மறுமொழிகளை இங்கு அனுமதிப்பது ஏன் ??

உங்கள் நோக்கம் மக்கள் நலனா அல்லது கலைஞரை திட்டுவதா

Anonymous said...

ஒரு உண்மையைச் சொல்லுங்கள். இதே போயஸ் தோட்டத்து அம்மன் ஆட்சியில் பன்றிக் காய்ச்சல் வந்திருந்தால் இப்படித்தான் பதிவு போடுவீங்களா?

Anonymous said...

ஊடக பயங்கரவாதமா? இங்கே ஊடகத்தை எல்லாம் கையில் வைத்திருப்பது யாரப்பா?

Anonymous said...

ஒப்பாரும், மிக்காரும் இல்லை உலக நாயகன்..
தமிழர்களின் தன்னிகரற்ற தலைவன்..
கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டு மரமாக மிதக்கும் முதல்வன்..
தியாகச் செம்மல்...
டாக்டர் கலைஞர் வாழ்க...

இது போன்ற பதிவுகள் ஒழிக

perumal said...

கலைஞர் ஆட்சிக்கும் ஜெயலிதாவின் ஆட்சிக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் முதல்வர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கும்.மற்றபடி எல்லாம் அப்படியேதான் இருக்கும்.

கலைஞர் ஆட்சி பொறுப்பை ஏற்ற இரண்டாவது நாளிலேயே ஜெயா டிவியின் செய்தியில் '''' ஐயோ அங்கே கொள்ளை இங்கே கொள்ளை, தண்ணீர் வரவில்லை, சாக்கடை அடைத்துக்கொண்டது, ரவுடிகள் அட்டகாசம், விலைவாசி ஏறிப்போச்சு.........................இன்னும் இப்படி எத்தனையோ செய்திகள்.''''

என்னமோ ஜெயலலிதா ஆட்ச்சியில் எல்லாம் ஒழுங்கா இருந்தது போலவும் கலைஞர் ஆட்சிக்கு வந்த over night ல எல்லாம் கெட்டுப்போச்சு என்பதாகவும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் (வரப்போறதில்லை ஒரு பேச்சுக்கு) அடுத்தநாளே கலைஞர் டீவியில் என்ன சொல்லப்போகிறார்கள்? ஜெயா டிவியின் பல்லவியை தானே இவர்களும் பாடப்போகிறார்கள்?

Anonymous said...

இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் திமுக வெல்லப் போகிறது.

கலைஞர் வாழ்க.
தளபதி வாழ்க.
அண்ணன் அஞ்சாநெஞ்சன் வாழ்க.