Thursday, August 13, 2009

ஸ்டாக்ஸ் இன் தமில் - வருத்தம்

- செல்லமுத்து குப்புசாமி

உண்மையில் நான் இதை இங்கே வெளியிட வேண்டும் என விரும்பவேயில்லை. ஆனால் ‘தொடர்பு கொள்க' (http://www.stocksintamil.com/contact.php) என்ற பகுதியில் தொடர்பு கொள்வதற்கான சாத்தியமே இல்லாமல் போனதால் அவர்களுக்குச் சொல்ல வேண்டியதை இங்கே வெளியிட வேண்டி வருகிறது.

தொடர்பு கொள்க என்ற பகுதியில்

என்ற விளம்பரம் மட்டும் மூனறு இடத்தில் காணக் கிடக்கிறது.

மேலும், கீழ்க்கண்ட வாசகங்களும்:

வலைப்பக்க வரலாற்றில் முதன் முயற்சியாக எம் உயிரினும் மேலான தமிழ் மொழியில் பங்கு சந்தை பற்றிய சர்வதேச தரத்துடனும் , முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பை எளிய நடையில் மிகச் சிறப்பாக வழங்க இருக்கிறோம்.

நாங்கள் , உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய சிறு அச்சங்களை போக்கும் ஆசானாக, பங்கு பற்றி நன்கு தெரிந்து, நுட்பமாக முதலீடு செய்து, ஆதலால் உயர்வடைந்து, அதன் பொருட்டு பெருமை கொள்ளும் பெற்றோராக, உடனுக்குடன் தகவல் மற்றும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நல்ல நண்பனாக, இவ்வலைப்பக்கத்தில் தொண்டாற்ற காத்திருக்கிறோம்
. ”

**************

இப்போது அவர்களுக்கான செய்தி.

http://www.stocksintamil.com/ நண்பர்களே,

இதை நடத்துகிற நீங்கள் யாரென்று தெரியவில்லை. பங்கு முதலீடு குறித்து தமிழில் ஒரு இணைய தளம் நடத்த வேண்டும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. அது பாராட்டுக்கும் உரியது.

அதே நேரம் என்னுடைய பல கட்டுரைகளை எனது அறிதல் இல்லாமலேயே நீங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும், வியப்பும் அடைந்தேன்.

இதை நீங்கள் செய்யாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது குறைந்த பட்ச நாகரீகம் கருதி என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அந்தக் கட்டுரைகள் வலைப் பதிவில் எழுதப்பட்டவை அல்லது உயிரோசை மாதிரியான இணைய இதழில் வெளி வந்தவை என்பதற்காக அனுமதி கேட்காமல் அப்படியே எடுத்துக் கையாள்வது தவறான செய்கை மட்டுமல்லாது மோசமான முன்னுதாரணமும் ஆகி விடும்.

இனி மேல் இப்படிச் செய்யாதீர்கள். அதிலும் குறிப்பாக “விளம்பரம் செய்ய அணுகவும்” என்ற வாசகம் உங்கள் இணைய தளத்தில் தென்படும் போது...

2 comments:

perumal said...

யார் மயித்தயோ புடுங்கி யாருக்கோ தானம் கொடுத்ததா ஒரு சொலவடை சொல்வாங்களே அதுமாதிரி இருக்குது stocksintamil ளோட வேலை.

*** **** **** **** *** ******* **** *** **** ******** **** **** ******** **** ******

நிச்சயமாக சொல்கிறேன் சார் நீங்கள் எழுதிய ""இழக்காதே"" புத்தகம் தான் பங்குசந்தை பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்களிலேயே ஆகசிறந்தது.

அனேகமாக இழக்காதே புத்தகம் தான் உங்களின் மாஸ்டர் பீசாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் பிரபாகரன் படிக்கவில்லை

Chellamuthu Kuppusamy said...

உங்களது நீடித்த ஆதரவுக்கு மிக்க நன்றி பெருமாள்.

இம்மாதிரி வாசகங்களைக் கேட்கும் போது பொறுப்புணர்வு மேலும் கூடுகிறது.