Thursday, August 20, 2009

ஜஸ்வந்த் சிங் - ஜின்னா

- செல்லமுத்து குப்புசாமி

பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம்.

அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம். அதனால் பா.ஜ.க. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. நரேந்திர மோடியின் குஜராத் அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தையே தடை செய்துள்ளது.



நான் இன்னும் Jinnah - India, Partition, Independence படிக்கவில்லை. ஆனால் ஜின்னா ஒரு practicing Muslim ஆக இருக்கவில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். சுதந்திரம், பிரிவினை, மதக் கலவரம் என்பதற்கெல்லாம் முன்பு ஒரு முறை செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்காக வெள்ளைக்காரன் கோர்ட்டில் ஆஜராகி ஜின்னா வாதாடினாராம்.

1948 இல் சாகாமல் (1964 வரை நேரு இந்தியாவை ஆண்டது போல) நீண்ட நாள் ஜின்னாவின் ஆளுகையின் கீழ் பாகிஸ்தான் இருந்திருந்தால் அது இன்றைக்கு வித்தியாசமான ஒரு தேசமாக விளங்கியிருக்குமோ என்னவோ!

ஜின்னாவைப் பற்றி தமிழில் ஒரு புத்தகம்

2 comments:

வினையூக்கி said...

// 1948 இல் சாகாமல் (1964 வரை நேரு இந்தியாவை ஆண்டது போல) நீண்ட நாள் ஜின்னாவின் ஆளுகையின் கீழ் பாகிஸ்தான் இருந்திருந்தால் அது இன்றைக்கு வித்தியாசமான ஒரு தேசமாக விளங்கியிருக்குமோ என்னவோ //

நிச்சயமாக !!!

perumal said...

//அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம்//

அழகான அருமையான இந்த ஒரு கருத்தை வைத்துக்கொண்டே இனிமேல் பி ஜே பி காங்கிரசை எதிர்த்து பிரச்சாரம் பண்ணலாம்.மேலும் தாங்களும் மதசார்பில்லாதவர்கள் என்று காட்டிக்கொள்ளலாமே. அதைவிட்டு விட்டு அந்தக்கருத்தை எடுத்துக்கொடுத்தவரையே கட்ச்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். இனி ராமனாலும் பி ஜே பி யை காப்பாற்ற முடியாது. கோவிந்த! கோ விந்தா!