Thursday, September 17, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - அஞ்சலி

இயல், இசை, நாடகம் - முத்தமிழின் மூன்று வடிவங்கள் இவை.


இதில் முதலாவது வடிவத்துக்கு எளிய நடையில் அளப்பரிய பங்களிப்பை நல்கிய தென்கச்சி கோ.சுவாமிநாதன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பயின்று, அரசுப் பணியில் இருந்து விட்டு பிறகு சில காலம் விவசாயம் பார்த்து வந்த சுவாமிநாதன் பிறகு வானொலி மூலம் பிரபலம் அடைந்தார். முதலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களித்தாலும், அவரது ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்த ஒன்று. நகைச்சுவை, சிந்தனை, தார்மீக நெறிகள் அனைத்தையும் ரசிக்கும்படி கலந்து கொடுப்பது அவருக்கே உரித்தான கலை. பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அஞ்சலி!

1 comment:

perumal said...

தென்கச்சி சுவாமிநாதன் காலமான செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் சார்.
வலம்புரி ஜான் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறார். சன் டீவியில் வலம்புரி ஜான் விட்டு சென்ற இடத்தை தென்கச்சி நிரப்பினார். அடுத்து இவர் இடத்தை யார் நிரப்ப போகிறார்களோ?