Friday, October 16, 2009

புலி அரசியல்

- செல்லமுத்து குப்புசாமி
நேற்று நான் பதிப்பித்திருந்த ”பிணந்தின்னியும், அவன் * தின்னியும்!!” என்ற பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூன்றாந்தர மொழியில் இரண்டு மின்னஞ்சல்கள் வந்தன. எப்ப எவன் சாவான் - புத்தகம் போட்டுக் காசாக்கலாம் என்று அலையும் பிணந்தின்னியாகச் சித்தரித்து மூன்று பின்னூட்டங்களை முகம் காட்டாத பதிவர் ஒருவர் போட்டிருந்தார்.

அதிகாரமும், கொஞ்ச நஞ்ச சொகுசு வாழ்க்கையும் மனிதனை எந்த அளவுக்கு மாற்றும் என்பதற்குச் சான்றாகவே திருமாவளவன்-ராஜபக்சே சந்திப்பின் போது நிகழ்ந்தவற்றைக் கருத வேண்டியிருக்கிறது. கருணாநிதிக்கு கோயில் கட்டி கும்பிடணும்!

இந்த இடத்தில் சுகுணா திவாகரின் புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்! பதிவை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி, ஆனால் சுய விமர்சனம் செய்து கொள்வது ஆரோக்கியமான விசயம்.

அதே சமயம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் புலிகளே காரணம் என்ற பிம்பத்தை சந்தையில் இலகுவாக விற்பனை செய்து விட முடிகிறது. ”ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணங்களை ஆதரிக்கிறோம், ஆனால் ஆயுதப் போராட்டம் மூலமாகத் தீர்க்காமல் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்க வேண்டும்“ என்று நாட்டாமைத்தனமாக அப்போது சொன்னவர்கள் தாம் சொன்ன அரசியல் தீர்வு என்னவென்பதை இப்போதும் கூட தெரிவிக்காமல் இருக்கவும் இந்த ஜனநாயக நாட்டில் முடிகிறது.

1 comment:

perumal said...

''பிணந்தின்னியும் அவன் தின்னியும்'' பெயர் சூப்பர்.

அப்புறம் காட்டுக்குதிரை என்ற பெயரில் எழுதியவர் சொல்லவருவது என்னவென்றால் (நான் நினைக்கிறன்) திருமாவளவனும் கருணாநிதியும் காந்திய வழியில் போராடுராங்கலாமா. அதனால நேரடியா சண்டைப்போடாம கொஞ்சம் கொஞ்சமா உரிமையை பெற்றுக்கொண்டு அதை பயன்படுத்தி மேலும் மேலும் உரிமையை பெற்று கடைசியில் தனி ஈழம் பெற்று விடுவார்களாம். கேட்க நல்லா இருக்கில்ல? அவர்கள் அப்படியே காந்திய கொள்கைகளை தமிழ் நாட்டிலும் கடை பிடித்தால் நன்றாக இருக்கும்