Thursday, March 04, 2010

நித்தியானந்தாவுக்கு ஆதரவாக..

- செல்லமுத்து குப்புசாமி

பழனியில் இருந்து 40-45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர். இது வரைக்கும் அப்பன் முருகனை நேரில் சென்று தரிசித்து வந்தது எத்தனை தடவை என்பதை ஒற்றைக் கையில் விரல் விட்டு எண்ணி விடலாம். நம்ம பக்தி அத்தனை ஆழமா இருக்கும் போது ஆசிரத்துக்கு எல்லாம் போவதென்பது நடக்காத காரியம்.


ஒஹாயோவில் இருக்கும் போது சில ஆந்திர நண்பர்கள் பல முறை நித்தியானந்தா கோவிலுக்கு அழைத்தனர். போனதில்லை, ஆனால் அவர்கள் கொண்டு வந்து கொடுத்த சர்க்கரை பொங்கலையும், புளியோதரையையும் உண்டிருக்கிறேன். அந்த நண்பர்கள் நித்தியானந்தாவின் போதனைகளையும், மெய் சிலிர்க்கும் பிரசங்கத்தையும் பற்றி சிலாகித்துப் பேசுவார்கள்.

பிரிட்டிஷ்காரனிடம் தப்பித்து ஓடி பாண்டிச்சேரியில் குடிசை போட்ட அரவிர்தர் முதல் முள்ளம்பன்றித் தலை முடி வைத்திருக்கும் சாய்பாபா வரை எல்லாச் சாமியார்களும் நமக்கு ஒன்றுதான். இடையில் பிரேமானந்தா, சுகபோகானந்தா, ஜக்கி வாசுதேவ், மருவத்தூர் சாமியார் முதலியோரும் அடக்கம். சாமியே இருக்குதா இல்லையான்னு தெரியாத போது சாமியார்கள் சிலர் தங்களை சாமியாக முன்னிறுத்திக் கொள்வது நமக்கு ஒப்பில்லை.

இத்தனை நாத்திய ஆத்திகக் குழப்பங்களையும் கடந்து பார்த்த போது, அளப்பரிய உயரங்களை எட்டிய நித்தியானந்தா மீது வியப்பு இருந்தது உண்மை. இவ்வளவு சின்ன வயதில் அவன் எட்டிய உயரங்கள், அவனது management techniques, கூட்டத்தை வசீகரம் செய்யும் தன்மை, தனக்கென்று அவன் உருவாக்கி வைத்திருந்த பிராண்ட் ஆகிய எல்லாமே கவனிக்க வேண்டியவை. சுயமாக தொழில் தொடங்கி பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கட்டி எழுப்ப முனையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை இவை.

அத்தனை பேரும் நித்தியானந்தாவை கடவுளாகக் கண்ட போது மனிதனாகக் கண்ட என் மனது, இப்போது அவன் அத்தனை பேருக்கும் பொறுக்கியாகத் தெரியும் போதும் மனிதனாகவே காண்கிறது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய இயல்பான ஈர்ப்பை, அந்த ஈர்ப்பினால் ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கத்தை, அந்த நெருக்கத்தின் ஊடாக உருவான அந்தரங்கத்தை இங்கே வெளிச்சம் போட்டு விற்பது முறையாகப் படவில்லை.

அந்த மனிதனுக்கும், ரஞ்சிதா என்ற நடிகைக்குமான உறவை படம் பிடித்து வெளியிட்டது யாரென்ற உண்மைகள் விரைவில் வெளியெ வரலாம். அது ரஞ்சிதாவின் மீது பொறாமை கொண்ட நித்தியானந்தாவின் முன்னாள் காதலியாக இருக்கலாம். அல்லது போட்டி மடம் நடத்தும் இன்னொரு சாமியாரின் தூண்டுதலால் நடந்ததாக இருக்கலாம்.

அதில் இரண்டாவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த போட்டி சாமியாரை வெறுக்கிறேன். தொழிலில் போட்டி என்றால் திறமையாகத் தொழில் செய்துதான் வெல்ல வேண்டும். அவனை விட அதிகமாக பிரசங்கம் செய்து, யாகம் நடத்தி, பத்திரிக்கைகளில் தன்னம்பிக்கை / ஆன்மீகத் தொடர் எழுதி அல்லது வேறு யாராவது பிச்சைக்கார எழுத்தாளனை தன் பெயரில் எழுத வைத்து, விஐபி க்களை பக்தர்களாகச் சம்பாதித்து அல்லது உருவாக்கி, திறமையாக மார்க்கெட்டிங் செய்து.. இப்படியெல்லாம் சிலபல பிசினஸ் உத்திகளைக் கையாண்டுதான் அவனை முந்தியிருக்க வேண்டுமே ஒழிய, இப்படி அவனது அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியல்ல.

நிலங்களை ஆக்கிரமித்த போது அவன் கடவுளுமில்லை, இப்போது அவன் பொறுக்கியுமில்லை. எபோதுமே அவன் மனிதன். ஒரு திறமையான பிசினஸ் மேன். பிசினஸ்மேன்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும், நடிகையைப் புணர்வதும் நமது தேசத்தில் புதிதல்ல.

மேலும் சாமியார்கள் அனைவரும் உத்தமர்கள் இல்லை. நித்தியானந்தா படுக்கையைப் பகிர்வது இதுதான் முதன் முறையாக இருக்காது. அதே போல, நடிகையோடு கலவி கொள்ளும் ஒரே சாமியார் நித்தியானந்தாவாக மட்டுமே இருக்க முடியாது. இந்து மதத்தின் போப்பாண்டவராக நிறுவிக் கொள்ள முனையும் சாமியார் அமெரிக்கா ரிட்டர்ன் டிவி நடிகையோடு கூடிக் கலந்த காட்சிகள் இருப்பதாக செய்திகள் கசிந்த போது அவற்றைப் பற்றிய வீடியோக்கள் வெளிவராதது ஏன்?

சாமியார்களுக்குக் கூட சாதிகள் இருக்கிறது போல. இதே நித்தியானந்தா முதலியார் சாதியில் பிறக்காமல் சக்கிலி, பறையன், பள்ளன், நாவிதன், வண்ணான் போன்ற ஏதாவது சாதியில் பிறந்திருந்து, இதே அளவு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை எழுப்பியிருந்தால் அவனது செக்ஸ் லீலைகள் எப்போதே வெளியாகியிருக்கும். இவ்வளவு லேட் ஆகியிருக்காது.

நித்தியானந்தா மீது கொண்ட பொறாமையால் வீடியோவை எடுத்த நபரும், அதை வெளியிட்ட சன் விடியும் ரஞ்சிதாவைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை. உள்ளபடியே அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. மார்க்கெட் இல்லாத முதிர்ந்த நடிகையாகி விட்ட பிறகு, மண வாழ்க்கையும் தோல்வியில் முடிவடைந்ததாகச் சொல்லப்படும் ஒரு பெண்ணை இதை விட யாரும் காயப்படுத்த முடியாது.

இதே சாமியாரோடு கலவியது ஒரு ஆளுங்கட்சி பெண் எம்.பியாக இருந்தால் இப்படித்தான் வெளியிட்டிருக்குமா சன் டி.வி? அந்த வீடியோ எடுத்தவனை அல்லது எடுத்தவளை பேரம் பேசி செட்டில் பண்ணியிருக்க மாட்டார்கள்? அல்லது ஆளை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டார்கள்? சன் டி.வியில் மெகா சீரியல் நடிக்கும் நடிகைகள் யாருமே எந்த ஆசிரமத்துமே போனதில்லையா? அவர்களின் வீடியோ கிடைத்திருந்தாலும் இப்படித்தான் வெளியிட்டிருப்பார்களா? கேட்க ஆளில்லாத, மார்க்கெட் & பின் புலம் இல்லாத நடிகையென்றால் இப்படித்தான்...

அவன் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை, அவள் படி தாண்டாப் பத்தினியுமில்லை என்று சிலர் சொல்லலாம். அந்த அளவுகோல் காதலர்களுக்கு இல்லை. அவர்கள் மனிதர்களாக, ஆணும்-பெண்ணுமாக, காதலர்களாகவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

ரஞ்சிதாவுக்கும் எனது ஆறுதல். சக மனிதன் என்ற முறையில் நித்தியானந்தாவுக்கு ஆதரவு.

16 comments:

Thevesh said...

மக்களின் கொந்தளிக்கும் பிரச்சினை தலை தூக்கும் போதெல்லாம் அதை
மேலும் கொந்தளிப்பு நிலைக்குப்
போகாமல் திசைதிருப்ப இப்படியான வீடியோக்களை ஒளிபரப்புவது
அரச கட்டிலில் உள்ளவர்களின் உத்தி.
இந்த உத்தியில் பலியான சாமியாரே இந்த நித்தியானந்தா.மாணவர்களின்
அனியாய கொலைகளை மூடிமறைக்க இந்த உத்திபயன்படுத்தப்
பட்டுள்ளது.மாக்கள் மற்றவனது
அந்தரங்களைப் பார்ப்பதில் அதிக
ஆர்வம் உள்ளவர்கள் என்பதால்
இந்த வீடியோ மூலம் அரசுக்கு மிக
நெருக்கடி தந்துகொண்டிருந்த
மாணவர்களின் கொலை மறக்கடிக்கப்பட்டுவிட்டது.முட்டாள்
பொதுச்சனம் ஏமாற்றப்பட்டுவிட்டது
இதுதான் நிசம்.காலம் இதை உணர்த்தும்.மானிடா பொறுத்திரு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

Great ...........

பதிவு மிக அருமை

ராம்ஜி_யாஹூ said...

good post

yes lets support Ranjitha

D.R.Ashok said...

:)

காவேரி கணேஷ் said...

பதிவு அருமை
ரஞ்சிதாவுக்கு என்னுடைய ஆறுதல்.

Anonymous said...

சார்,
பொதுப்புத்திக்கு எதிரான பார்வை எனக்கிருக்கிறது என்று காண்பிக்கும் உத்தியாகத் தெரிகிறது.

உங்கள் பதிவு சரியென்றால்,மார்க்கெட் இழந்த பிறகு விபச்சாரம் மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கும் நடிகைகளை எல்லாம் பொது மன்னிப்பு அளித்து விட்டு விடலாமா?

பாவம் அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? அதை'த் தவிர வேறு தொழிலும் வேறு தெரியாது..

இதில் சாதிய அனுமாணங்களையெல்லாம் கொண்டு சேர்க்கிறீர்கள் பாருங்கள்,பிரமாதம்!

தவறென்றால் திருத்தவும்.

-வாசகன்

Anonymous said...

தேவேஷ் அவர்களுடைய கருத்துக்கள் சரி. சில வக்கீல்கள் கிரிமினல் வழக்கு பதியவேண்டும் என்று கூறுகின்றனர். பெண்ணுடைய சம்மதத்துடன் இந்த சாமியார் புணர்துள்ளான். இது எவ்வாறு குற்றமாகும். மனைவியும் துணைவியும் கொண்ட கருணாநிதி ஏதோ இவர்கள் உத்தமர்கள் போல் எச்சரிக்கை விடுகிறார்.

Karthikeyan G said...

this article looks Superb!!

Thnx!

Sai ganesh said...

உங்களின் கருத்தே எனது மனநிலையும் அவர்கள் செயல் அயோக்கியத்தனம் என்றால் மீடியா?

perumal said...

you have written what i am thinking sir.

i have no time to write in tamil.

with
lot of affection
perumal
karur

Anonymous said...

நீங்க சொன்ன இந்து மத போப்பாண்டவர் வினவின் இந்தப் பதிவை பாத்தீகளா?

Chellamuthu Kuppusamy said...

நன்றி தேவேஷ். தெரியாத செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.

உலவு, ராம்ஜி யாஹூ, அசோக் மற்றும் காவேரி கனேஷ், நன்றிகள்!

Chellamuthu Kuppusamy said...

வாசகன் என்ற பெயரில் பெயர் போடாமல் பின்னூட்டம் இட்டவருக்கு: I reserve the right in choosing not to answer anonymous comments.

Thanks Karthikeyan G.

சாய் கனேஷ்: ஆமென்...

நல்லதுங்க பெருமாள்.. யாராவது நினைப்பதை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது..

Prabu said...

எல்லாம் சரி, அது யார் அந்த பிச்சைக்கார எழுத்தாளன்? சாருவா?

ஒலகத்துல எவனுமே முறைதவறிய செக்ஸ் பண்ணாதமாரி பேசறானுங்க. அதுவும் இந்த நித்யா மேட்டர்க்கு அப்புறம் ஒழுக்கத்த பத்தி ரொம்பவே பேசறானுங்க. நித்தியா நடிகையோட படுத்துருந்தா என்ன நாயோட படுத்திருந்தா என்ன. அது எப்போ, எங்க எடுத்ததுன்னு தெரில. எல்லா மீடியாகாரனுங்களும் நல்லா காசு பாத்துட்டானுங்க.

நிதியா முதலியார் சமூகத்தை சேர்ந்தவன், வேதம் அறியாதவன், கடவுளை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. இதுவே ஒரு பார்ப்பன சாமியாராக இருந்தால் அது வேறு மாதிரி ஆகி இருக்கும். ரெண்டாவது, இவன் குறிப்பிட்ட, கடவுளுக்கு SMS அனுப்பி பேச கூடிய ஜாதியினரை அருகில் வைக்கவே இல்லை. அது மாபெரும் தவறு. {இந்த கருத்தை வெளியிட்ட கட்டுரை ஆசிரியருக்கு பூச்செண்டு(ஞானி ஸ்டைல்)}.

செல்வா said...

Our people want to believe and follow some one when he/she claims to be the representative of God, forgetting the fact that every one is a human and is bound to the basic human behaviors and instincts.

I am not sure how many of Nithyananda's followers had verified his personal life for not following basic instincts of this type before started following him - they were merely part of the (mad) crowd that blindly follows any one claims to be the representative of God! No one knows they have followed for what and what is making them to feel being betrayed (!), now.

And, now, they can not accept his behavior jus because it is exposed - no - it is cheaply publicized. If they had followed him for not indulging in sexual activities, it makes logical sense to feel so! Else, they had been and have been betraying themselves!

We have a long way to go to live the life with out such representatives!

- Selva

John said...

Atlast I found some identical thinking. Sun TV asked a rhetorical question "Is this Tamil Culture?".No primetime televsion in the so called "culturally depraved countries" has "exposed" the shots of consenting adults in their bedroom. The question should be asked back at the media. There was a report in the English media of another Swami (Swamy Dwivedi from Delhi) who ran a sex service on call for elite clients. Nithyananda is not in the same league as Dwivedi or Premananda.Leaving aside the charge of landgrabbing,the max charge against Nithyananda can be he projected an exterior different from his private life. Who is the one leading an open life? Lets see what charges they bring on him to prosecute. They will have to make some woman complain against him or take the land grab route.