Monday, May 31, 2010

செம்மொழி மாநாடு

’தோலர்’ (தோழர் இல்லை) மா.சிவகுமார் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார் – கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக.

கொழும்பு திரைப்பட விழாவுக்கு கமல்ஹாசனுக்கு விடுக்கப்பட்டதைப் போன்றதொரு அழைப்பொன்றும் செம்மொழி மாநாட்டுக்காக எனக்கு வரவில்லை. புனைவுச் சண்டையில் தமிழ் வலைப்பதிவுலகம் கும்மியடித்துக்கொண்டிருக்கையில் புறக்கணிப்பு குறித்து யாருக்கென்ன கவலை? குறைந்தபட்சம் லீனாவின் கவிதை அளவுக்குக் கூட புறக்கணிப்பில் கிளுகிளுப்பு இல்லை. பரபரப்பும் இல்லை.

எனினும் நாம் வாழும் காலத்தில் நம்மை மவுனச் சாட்சியாக மாற்றி ஒரு இனத்தின் மீது அவிழ்த்து விடப்பட்ட மிக்க் கொடூரமான அழித்தொழிப்பைத் தடுக்கத் துப்பில்லாத்தும், அந்த மக்களுக்கு இப்போதும் கூட நடமாடும் சுதந்திரத்தினை உத்திரவாதம் செய்ய முயலாத்துமான ஒரு தலைமை எதைச் சாதிக்க நடத்துக்கிறது இந்த மாநாட்டை என்ற ஆற்றாமை வருகிறது.

நம்மைப் போன்ற சாமானியர்களின் கருத்து எதையும் சாதித்து விடப் போவதில்லை. அதற்காக மவுனமாக இருந்து விடவும் முடியாது.

அதனால் கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை தார்மீகமாகப் புறக்கணிக்கிறேன்.

3 comments:

perumal said...

உயர்திரு சார்,

நீங்கள் மாநாட்டை புறக்கணிப்பதாக சொல்வதன் மூலம் அந்த மாநாட்டை பொருட்படுத்தவாவது செய்கிறீர்கள்.
ஆனால் நான் அந்த மாநாட்டை புறக்கநிக்கப்போவதும் இல்லை ஆதரிக்கப்போவதும் இல்லை. ஏனென்றால் அந்த மாநாடு மட்டுமல்ல நமக்கு ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றோ ஒரு அரசு இருக்கிறது என்றோ என் சிந்தனையிலேயே இல்லை.

பணிவன்புடன்
உங்கள் வாசகன்
பெருமாள்
கரூர்

Anonymous said...

What is your opinion about புனைவு & நர்சிம் & வினவு?

வால்பையன் said...

// Anonymous said...

What is your opinion about புனைவு & நர்சிம் & வினவு?//


இங்க என்ன கருத்து கணிப்பா நடக்குது!?