ஒரு ஊருக்கு பல காரணங்களுக்காக பெயர்
கிடைக்கலாம். தாராபுரம் பழமையான ஒரு நகரம். கடந்த நூறு ஆண்டுகளாக வளர்ச்சியடையாத
ஒரு நகரம்.
கொங்கு நாட்டில் கோவையும், தாராபுரமும் ஒரே
நாளில் முனிசிபாலிட்டி அந்தஸ்து பெற்றவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தாராபுரம்
தெற்கு நொய்யல் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. இன்று கோவை இந்திய அளவில்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரு நகரமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் தாராபுரம்
தமிழக அளவில் கூட பிரபலமாக அறியப்படாத ஒரு ஊராகத்தான் இன்னமும் உள்ளது.
அதனால்தானோ என்னவொ அந்த ஊரை பிரபலமாக்கும்
முயற்சியில் T.M.ராமலிங்கம் என்பவர் ஈடுபட்டிருக்கிறார்.
நாகேஷ் பிறந்த அக்ரஹாரத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் இருக்கும் உப்புத்துறைப்
பாளயத்தில் வசிக்கும் ராமலிங்கம், நிலக்கடலை (கடலைக்காய்) வியாபாரம் செய்து வந்தவர்,
சுமார் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீட்டுப் பத்திரங்களை
வைத்திருக்கிறார் என்ற செய்தி ஊருக்கே ஒரு செலிபிரிட்டி ஸ்டேட்டஸை தந்துள்ளது.
2 comments:
28000 கோடிக்கு தாராபுரத்தையே வாங்கிரலாமுங்க
அதெல்லாம் போலி பத்திரமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் !!
Post a Comment