Thursday, May 09, 2013

தமிழ் செக்ஸ் கதைகள்

தமிழ் செத்துக்கொண்டிருக்கும் ஒரு மொழி. அதிலெதையாவது எழுதுவதும், நாலு பேரையாவது அதை வாசிக்க வைப்பதும் பாராட்டுக்குரிய செயல். அது பத்து வரி படித்தவுடன் கண்ணைக் கட்டும் கடின இலக்கியமாக இருந்தாலும் சரி, சும்மா டைம் பாஸாக போகிற போக்கில் வாசித்துக் கடந்து போகும் எழுத்தாக இருந்தாலும் சரி, இல்லை கில்மா எழுத்தாக இருந்தாலும் சரிஆனால் எழுத்தாளர்களுக்கு போதுமான அங்கீகாரமும், வெகுமானமும் கிடைப்பதில்லை என்ற குறையும், குற்றச்சாட்டும் இங்கே நீண்ட காலமாக நிலவுகிறது. 

இதைப் பற்றி தமிழ் எழுத்தாளன் என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு குறிப்பு:
//ஒரு வகையில் சொன்னால் தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளனுக்குக் கிட்டும் சன்மானம் பொருளாதார ரீதியாம அமைவதை விட சமூக அங்கீகாரம் மூலமாகவே கூடுதலாகக் கிடைக்கிறது. பல நேரங்களில் சமூக அங்கீகாரமும், சில தருணங்களில் ரசிகைகளின் நெருக்கமும் அந்தக் காயத்திற்குக் களிம்பு பூசுகின்றன. வெறும் பொருளாதார அனுகூலம் என்ற காரணி அவனது உழைப்பை ஈடு செய்வதாக இல்லை. முழு நேர எழுத்தாளனாக இருக்க முயல்வதின் முட்டாள்தனத்தையும், எழுத்தின் மீது அந்த நபருக்கு இருக்கும் தீராத காதலையுமே அது வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறது.//

இந்த சப்ஜக்டை எடுத்தாலே இணையத்தில் பரவலாகப் புழங்குகிற எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாரு நிவேதிதா. சாரு தனது வெப்சைட்டில் ICICI bank அக்கவுண்ட் நம்பரையெல்லாம் கொடுத்து காசு அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார்.

எனது புத்தகத்தை யாரும் வாசிப்பதில்லை என்று புலம்புவார். புத்தகத் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய இலட்சக் கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் என் புத்தகத்தை நீ ஏன் வாங்கவில்லை, வாங்கி வாசிக்கவில்லை, வாசித்து சாருஆன்லைனில் விமர்சனம் எழுதவில்லை என யாரும் கேட்டதாத் தெரியவில்லை.

தான் எழுதுவது மட்டுந்தான் இலக்கியம், மற்றதெல்லாம் குப்பை என்கிற நினைப்பு சில எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர்கள் நினைப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக காசு கொடுத்து வாங்கி சாருவை கோடீஸ்வரன் ஆக்க வேண்டும் என்றோ, ஏ.கே.செட்டியார் அமெரிக்காவில் பார்த்த ஊர்களையெல்லாம் பார்க்க வைக்க வேண்டும் என்றோ, சிட்டி செண்டரில் அவர் பிட்சா சாப்பிடவும், மிருதுவாக இருக்கிற எலாஸ்டிக் ஜட்டி வாங்கவும் பணம் அனுப்ப வேண்டும் என்றோ அவசியம் இல்லை.

இத்தனை நாள் தனது இணைய தளத்திலும், தமிழ் இதழ்களிலும் புலம்பிக்கொண்டிருந்த சாரு அண்மையில் ஆங்கிலத்திலும் புலம்பியிருக்கிறார்.

எழுதுவது பணத்துக்காகத்தான் என்றால் இப்படியெல்லாம் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை. கக்கூஸ் கழுவுவதைப் போல, பஸ் கண்டெக்டராக இருப்பதைப் போல, கால் செண்டரில் வேலை செய்வதைப் போல இதுவும் ஒரு தொழில். அதில் போதுமான வருமானம் இல்லையெனில் வேறு வேலைக்குப் போகலாம்.
அப்படியெல்லாம் இல்லை, நான் சமூகத்தை மேம்படுத்தத்தான் எழுதுகிறேன். மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி நல்வழிப்படுத்தவே எழுத்தாளனாக என்னை அர்ப்பணித்துள்ளேன் என்றால் காசைப் பற்றி வாய் திறக்கவே கூடாது.
//எழுதுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் என்றால் அதற்கு வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எதற்காக எழுத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?  ஒருவன் எழுதவில்லையென்றால் யாருமே தூக்கு போட்டு சாகப் போவதில்லை, ஒருவனும் தீக்குளிக்க போவதில்லை, அதிகபட்சமாகஏன் எழுதுவதை குறைத்துக் கொண்டீர்கள்என கேட்பார்கள். அதற்கும் பதிலை எதிர்பார்க்க மாட்டார்கள். என்ன பதிலைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

மாறாக, எழுதினால்தான் டென்ஷன் ஆவார்கள். நான்கு வருடமாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களெல்லாம் பெரிய ரைட்டர் ஆகி அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். பூனை குட்டி போடுவது போல எழுதுகிறான்; புலி ஆய் போவது போல எழுதுகிறான் என்பார்கள். அடுத்தவன் காலில் விழுந்தோ கையைப் பிடித்தோ வாரப்பத்திரிக்கையில் தொடர் எழுதுபவர்களெல்லாம் உன் ஹேர்ஸ்டைல் சரியில்லை என்று அலம்பல் செய்வார்கள். (இங்கு ஹேர்ஸ்டைல் என்ற சொல்லை நாகரீகம் கருதி பயன்படுத்தியிருக்கிறேன்). எழுதுவதையும் எழுதிவிட்டு இந்த ஆட்கள் பேசுவதையும் கேட்டுத் தொலைக்க வேண்டும்.

சாரு எழுத ஆரம்பித்த போது நான் பிறந்திருக்க கூட மாட்டேன். ஆனால் கலாய்த்துக் கொண்டு திரிகிறேன். இப்படித்தான் எழுதுவதற்கு பணமும் கிடைப்பதில்லை, ஆளாளுக்கு லோலாயமும் செய்கிறார்கள். பிறகு எதற்கு சார் எழுத வேண்டும்?//

அடுத்த முறை ஏதாவது மலையாள பேப்பரில் போய், ’எனக்கு தமிழ் நாட்டில் காசு கிடைப்பதில்லை’ என்று புலம்பாதீர்கள். நிஜமாகவே வறுமையில் வாடும் எழுத்தாளர்களும், உங்களை விட நன்றாக எழுதும் ஆட்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.

தமிழ் வாசகர்களை இன்றைக்கு வாசிக்க வைத்துக்கொண்டிருப்பதில் இணைய தளங்களுக்கு பெரும் பங்கு உண்டு.  நீங்கள் நிஜமாகவே தமிழுக்கும், தமிழர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் தமிழ் விக்கிபீடியாவில் பல கட்டுரைகளைத் தொகுத்து உதவுங்கள். உங்களுக்கு எவன் சரக்கு வாங்கி ஊற்றுகிறானோ அவனைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல், தமிழில் வரும் (உண்மையிலேயே) சிறந்த படைப்புகளை வாரம் ஒன்றாக வாரம் ஒன்றாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

இல்லையெனில் ஒரு கில்மா வைப்சைட் ஆரம்பித்து தமிழ் செக்ஸ் கதைகளை எழுதுங்கள். அண்ணி செக்ஸ் கதை, சித்தியுடன் தகாத உறவு, ஆபீஸ் செக்ஸ், கல்லூரியில் காமம், அத்தையுடன் ஆட்டம், மனைவியான மாணவி, முதலாளியம்மாவின்முனகல் என எழுதுவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது. 

6 comments:

ko.punniavan said...

நண்பரே,
எழுத்துக்குக் கூலி கேட்டு அழும் அவலம் தமிழ்ச் சூழலில் மட்டுமே நிகழும். கூலி வேண்டுமென்றால் எழுதுவதற்குப் பதில் ஏதாவது தொழில் செய்யலாம் எனும் கூற்று தமிழை, முழு நேர எழுத்தாளரைக் கேலி செய்வதாகும்.எழுத்தும் தொழில்தான்.அது வயிற்றை நிரப்பும் என்றால் எழுத்தாளனுக்கான கௌரவமாகும். காசு கொடுக்காமலேயே படைப்பாளனைத் தெருவுக்குத் தள்ளிய சமூகம் தமிழ்ச்சமூகம். சரி என்னிடம் ஒரு கேள்வி.இதழ் உரிமையாளர்கள் (குமுதம், ஆ.விகடன்) படாடோபத்தை நீங்கள் ஆதரிப்பதாகவும், சுரண்டலை ஆமோதிப்பதாகவும் உள்ளது.என்ன முரண் , எழுதியவன் ஏழையாகவும், அந்த எழுத்தை விற்றவன் பணக்காரனாகவும் வாழலாம் என்கிறீர்கள்.எனக்குத் தெரிந்து புத்தகம் போடும் பதிப்பாளர்கள், நூலாசிரியருக்கு ரோயல்டியைக் கூட கொடுக்காமல் ஏமாற்றுப் பேர்விழியாக இருக்கிறார்கள்!

மகேஷ் said...

எந்தப் புரிதலும் இல்லாத முட்டாள்தனமான கட்டுரை.

Anonymous said...

பாஸ் அப்ப இது என்ன?

Anonymous said...

@ko.punniavan ,
தமிழ் சமூகத்தில் கூலி கொடுக்கவில்லை என்று யார் சொன்னது ? சாருவை பொறுத்தவரை அவர் எதிர்பார்க்கும் கூலி அவர் தகுதிக்கு அப்பால்பட்டது.
திரைப்படம் ஒன்றும் வசனம் எழுத அழைத்திருக்கின்றார்கள் இவர் கேட்ட கூலி ஜெயமோகன் வாங்குவதை விட பல மடங்கு அதிகம். யார் வேலைக்கு எடுப்பான் ?
பிறகு தமிழ் சமூகத்தை திட்டுவதில் என்ன பயன் ?

இவருடைய புத்தகங்கள் லச்சத்தில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இவருடைய நூறுகளில் தான் விற்கின்றது. என்ன செய்வது ?
இவருடைய எழுத்து பாணி தமிழர்களுக்கு பிடிக்கவில்லை.
இவருடைய் எழுத்து கேரளாவில் கொண்டாடினால் அங்கு எழுதுவது தானே. இங்கு இருந்து கொண்டு எதுக்கு கரித்தது கொட்ட வேண்டும்.
சுஜாதாவை கொண்டாடியது தான் தமிழ் சமூகம் என்பதை மறக்க கூடாது.

HD

Anonymous said...

"நூலாசிரியருக்கு ரோயல்டியைக் கூட கொடுக்காமல் ஏமாற்றுப் பேர்விழியாக இருக்கிறார்கள்!"

இந்த சாரு பணம் வாங்காமல் எப்போது எழுதினார். அவர்க்கு எதிர்பார்க்கும் பணம் கிடைக்கவில்லை என்று தான் புலம்புகின்றார். இவர் இப்படி புலம்பி பிச்சை எடுப்பதை விட அவருடைய பழைய தொழிலான விபச்சாரத்தை செய்யலாம்

HD

Anonymous said...

நீயெல்லாம் பேசுற லெவலுக்கு ஆகிபோச்சி இலக்கியம்