Wednesday, June 12, 2013

ஏரிக் கரைகளும் ஒரு இளைஞனும்

உங்களுக்கு அருண் கிருஷ்ணமூர்த்தியைத் தெரியுமா? இல்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள். Environmentalist Foundation of India என்ற அமைப்பை நடத்தி வரும் இளைஞன். Sparrow reintroduction, lake conservation, herb restoration/native species plantation, creating urban eco responsibility, composting, setting up bio diversity parks in schools, animal care, youth camps and mass awareness through media என பல விஷயங்களைச் செய்கிறார்கள்.

சென்னையில் உள்ள கீழ்க்கட்டளை ஏரியைத் தூர்வாரி சுத்தம் செய்ததில் இந்த அமைப்புக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது அரசன்கழனி ஏரியை ஏரியாக மாற்றும் வேலையில் அந்தப் பகுதியில் குடியிருக்கும் சிலரின் கூட்டு முயற்சியோடு இறங்கியிருக்கிறார்கள். அதன் மூலமாகவே அருண் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும், EFI அமைப்பினைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

தனது நேரத்தின் பெரும்பகுதியை சுற்றுச் சூழலைப் பேணுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு உருவாக்கத்திற்கும் செலவிடும் அருண் வெறும் 26-27 வயது வாலிபன். நாலு வருடம் முன்பு வரை கூகிள் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுற்றுப்புறச் சூழலைப் பேணும் இவரது பணியினைச் சிறப்பிக்கும் விதமாக கூகிள் அமைப்பிற்கு 15,000 டாலர் கொடுத்து ஊக்குவித்திருக்கிறது.

இவர் எடுத்த குறும்படம் அமெரிக்காவின் சான்-டியாகோவில் பரிசு வென்றிருக்கிறது. பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பேணும் இவரது செயலை ஊக்குவிக்கும் விதமாக Rolex award for enterprise வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேட்டியில் அருண் சொன்னது: ”People think that by the click of a mouse or the tap of space bar you can save tigers or turtles, which is absurd. You need to get to the ground to work.”


மேலதிகத் தகவல்களுக்கும், இணைந்து பணியாற்றவும் http://www.indiaenvironment.org என்ற இணைய தளத்தைக் காணுங்கள். EFI உடன் கரம் கோர்க்கும் 900 சொச்சம் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், 20 வயதுக்கு உட்பட்டவர்களும் என்பது எத்தனை மகிழ்ச்சியான செய்தி !

No comments: