Tuesday, June 18, 2013

இரவு வாழ்க்கை

டிஸ்கோ, பார், பார்ட்டி, கும்மாளம், செக்ஸ் என ஒரே வரியில் முடித்து விடக்கூடிய இரவு வாழ்க்கை நடவடிக்கைகள் எப்போதும் கேளிக்கை சார்ந்த்தாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றன. மேல் தட்டு வர்க்கத்தினருக்கும், மேல் நடுத்தர வர்க்கத்தினரும் பின் மாலைப் பொழுதையும், இரவையும் மகிழ்ச்சியாக்க் கழிப்பதற்கு பல வழிகள் உள்ளன.

ஏதாவது ஒரு கார்ப்பரேட் கிளப்பில் மெம்பராகலாம். (ஒரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து கிளப் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்) கிளப் உறுப்பினர் கட்டணம் ஆயிரங்களில் தொடங்கி இலட்சங்களில் முடியலாம். பிரிட்டிஷ் காலத்தில் துவங்கிய மெட்ராஸ் போட் கிளப் முதலியவை இப்போது புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதேயில்லை.
மாலை நேர ஒன்று கூடல்கள், உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு விளையாட்டுகள், குழு நிகழ்வுகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அங்கே அரங்கேறுகின்றன.

அடிக்கடி விசிட் செய்யும் பிரத்யேக கிள்ப்புக்ளைத் தவிர்த்து யார் வேண்டுமானாலும் சென்று வரும் பார்கள், பஃப்கள் மற்றும் டிஸ்கோத்தே ஆகியன மாநகர இரவு வாழ்க்கையின் முக்கியமான அங்கங்கள் ஆகும்.

ஆண்கள் மட்டுமே செல்லக் கூடிய இடங்கள், நண்பிகளை அழைத்துச் செல்லும் இடங்கள், ஜோடியாகச் சென்றால் மட்டுமே அனுமதி கிட்டும் இடங்கள் என யாவும் இங்கே உண்டு.
இவையெல்லாம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டாஸ்மாக் பார்கள். அதுவுமில்லையெனில் பேச்சுலர் ரூம்களில் நியூஸ்பேப்பரை விரித்துப் போட்டு நடக்கும் கச்சேரிகள் ஏராளம்.

எதற்காக இத்தனை ஆடம்பரங்கள், கேளிக்கைகள் என்ற கேள்வி நமக்குத் தோன்றுவது இயல்பே. முதன்மையான காரணம் Peer Pressure !!

இரவு வாழ்க்கை என்பது பெரும்பாலும் கெட்ட பழக்கங்களின் வெளிப்பாடாகத் தோன்றினாலும் வேலைப் பளு மற்றும் மன அழுத்த்த்தில் இருந்து ரிலாக்ஸ் செய்வதற்கு என்று காரணம் சொல்கிறார்கள். அவரவர் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கேளிக்கையில் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

மாதம் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இளைஞர்கள் வாரத்தில் ஒரு நாள் இப்படி குடித்துவிட்டு கூத்தடிப்பதைக் கண்டு கலக்கமடையத் தேவையில்லை. தினம் 150 ரூபாய் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் ஒருவன் அன்றாடம் ஐம்பது ரூபாயை டாஸ்மாக்கில் தொலைப்பதைக் கண்டே நாம் கவலையடைய வேண்டியிருக்கிறது.

ஆயிரக் கணக்கான பின்னலாடைத் தொழிலாளர்கள் திருப்பூரில் வேலை இழந்த்தையே அறியாத நாம் ஒரு சில ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு வேலை போனதை செய்தித்தாளின் முதல் பக்கத்தில் பார்த்து விவாதிக்கிறோம்.

மேலும் இரவு வாழ்க்கை என்பது மாநகரத்துக் கேளிக்கையைத் தாண்டி மொட்டை மாடியில் கொசுக் கடியைப் பொருட்படுத்தாமல் வின்மீண்களை ரசித்தபடி படுத்திருப்பதிலும், பகல் நேர மின்வெட்டின் காரணமாக தூக்கமில்லாமல் நீர் பாய்ச்சும் குடியானவனின் பொருள் நிறைந்த ராத்திரியிலும், இன்னபிற விசயங்களிலும் உள்ளது.

1 comment:

Mangai said...

nice one...