Saturday, June 08, 2013

இண்டெர்நெட் செக்யூரிட்டி

இந்தக் காலத்தில் பாஸ்புக் வசதியுள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நகர்ப்புற இளைஞர்களைக் காட்டிலும் ஃபேஸ்புக்கில் வலைக் கணக்கு உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகம். காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் கல்யாணத்துக்கு பெண் பார்ப்பது வரை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் இந்த சோஷியல் நெட்வொர்க் வலைத் தளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இணைய தளம் ஏராளமான கேளிக்கைகளை உள்ளடக்கியிருக்கிற அதே நேரம் எல்லையில்லாத தனி நபர் தாக்குதலையும், சரி செய்ய இயலாத அளவுக்கு அவமானத்தையும் உருவாக்கி விடக் கூடிய ஆபத்தையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அவர் மனைவியின் பெயரைச் சொல்லி இடைவிடாமல் போன் வந்திருக்கிறது. பிறகுதான் தெரிந்த்து யாரோ விஷமிகள் அவர்களது தகவலை இன்டெர்நெட்டில் போட்டு பலானா தொழில் நட்த்துவோர் என விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

குடும்ப புகைப்படத்தை நெட்டில் போட்டிருந்த ஒரு நண்பர் தனது மனைவில் போட்டோ ஒரு செக்ஸ் கதைக்கு நடுவே பிரசுரமாகியிருந்த்தைக் கண்டு அதிர்ந்து போனார்.

கல்லூரி விரிவுரையாளராக இருந்த தோழி ஒருவரைப் பற்றியும் ஆர்கூட் வலைத்தளத்தில் ஒரு விளம்பரம். அச்சு அசலாக அவரது விவரங்கள். அவருக்கும் போன் அழைப்புகள். ஆர்கூட் கம்பெனிக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பி புகார் செய்த பிறகே போலிக் கணக்கை அழிக்க முடிந்த்து.

முகம் தெரியாமல் இருக்கிற செளகரியம் காரணமாக இணையம் அளிக்கிற சுதந்திரம் எல்லையற்றது. அங்கே எல்லா விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. காமக் கதைகளை, செக்ஸ் வீடியோக்கள், தகாத உறவுகளைப் பற்றிய ஜோக்குகள் என யாவும் விரவிக் கிடக்கின்றன. இவை ஒரு வகையான ஆபாசம் என்றே கருதலாம்.

எனினும் இவ்வகையான ஆபாசம் எல்லாக் காலத்திலும், எல்லா வடிவங்களிலும் இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் இவை சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வடிகாலாகவும் செயல்படுகின்றன.

இதையெல்லாம் விட மோசமானது தனி நபர்களையும், அவர்தம் குடும்பத்து பெண்களையும் அவமானத்திற்கு ஆளாக்குவது. இத்தகைய ஆபாசத் தாக்குதல்களுக்கு ஆளாகாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(2011 தீபாவளிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தமிழ் இதழுக்கு எழுதியது)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் கவனம் தேவை தான்...