Saturday, June 08, 2013

மைசூர் மகாராஜா வம்சம்

கடந்த சில நாட்களாக மைசூரையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.

மைசூர் அரண்மனை கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு சலாம் போட்ட உடையார் பரம்பரைக்கு 1912 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கட்டிக்கொடுத்த அரண்மனைதான் இது.


அதே பிரிட்டிஷாரை எதிர்த்து அதே மைசூரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டிணத்தில் நிலை கொண்டு மாண்ட திப்பு சுல்தானின் அரண்மனை சிதிலமடைந்து வெறும் சுட்டிச் சுவராகக் கிடக்கிறது. லண்டன் Maritime museum இல் உள்ள திப்புவின் உருவம் கீழே.



உலகிலேயே முதன்முதலில் பீரங்கியைக் பயன்படுத்திய போரியல் நிபுணன் திப்பு. 
அவன் மாண்ட பிறகு கைப்பற்றிய பீரங்கிகளை வைத்து காப்பியடித்த உபரகரணங்களையே பிரிட்டிஷார் நெப்போலியனுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தினர் என்கிறது வரலாறு. 

No comments: