Saturday, June 15, 2013

மணிவண்ணனை பாரதிராஜா கொல்லவில்லை

இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் மறைந்து விட்டார். தமிழ்த் திரைச் சூழலில் பொதுவுடமை, பகுத்தறிவு மற்றும் தமிழ்த் தேசியச் சிந்தனையோடும் அதற்குச் சற்றும் குறைவில்லாத நக்கலோடும் சுற்றி வந்த சிலரில் மணியும் ஒருவர்.

நம்மில் பலருக்கு அவரை ஒரு நடிகராகவும், அமைதிப்படை படம் எடுத்த படைப்பாளியாக மட்டுமே தெரியும். கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணியும், நூறாவது நாள் மொட்டைத்தலை சத்யராஜும் அவர் படைப்புகளில் மறக்க முடியாத சில முத்துக்கள். தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாரதிராஜாவின் படங்களானா நிழல்கள், டிக் டிக் டிக் மற்றும் அலைகள் ஓய்வதில்லை படங்களுக்குக் கதை எழுதியவர். விக்கிரமன், சுந்தர் சி, செல்வமணி முதலிய இயக்குனர்களை உருவாக்கியவர்.

ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாக அறுவைச் சிகிச்சையெல்லாம் மேற்கொண்டிருந்த மணிவண்ணன் ஆனந்த விகடனில் பாரதிராஜா தன்னை பிச்சைக்காரன் எனச் சொன்ன சில நாட்களில் செத்து விட்டார். ஆயுதங்களால் மட்டுமல்ல அவதூறுகளாலும் மனிதனைச் சாகடிக்கலாம் என ஃபேஸ்புக்கில் ஆளாளுக்கு கமெண்டு போடுகிறார்கள். விகடன் பேட்டி எந்த அளவுக்கு அவரது சாவுக்குக் காரணம் என்பதெல்லாம் மணியின் ஆன்மாவுக்கும், பாரதிராஜா என்கிற சின்னச்சாமியின் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம்.

மணியின் குடும்பத்திற்கும், திரை உலகிற்கும் ஆழ்ந்த அனுபாதங்கள்.

ராசாவின் பேட்டி (நன்றி: ஆனந்த விகடன்):
''ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்கனு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''

அப்படியே இதையும் கேளுங்கள் http://m.soundcloud.com/loveguru911/director-manivannan-crying-in

No comments: