Friday, August 30, 2013

ஷோபா சக்தியின் சமூகத்திற்கு மெட்ராஸ் கஃபே வந்தனங்கள்


ஷோபா சக்தியை நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக. 

ஷோபா ஒரு முன்னாள் விடுதலைப் புலி. முன்னாள் என்றால் பல வருடம் முன்னால். பிறகு புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பிரான்ஸில் வசிக்கிறார். தீவிரமான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அறியப்படும் நபர். லீனா மணிமேகலையுடன் சேர்ந்து ‘செங்கடல்’ படத்தை எடுத்தவர். அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஷோபாவில் எழுத்தில் இயல்பாகத் தெறிக்கும் எள்ளலும், மேவரிக்கான நடையும் தனித்தன்மை வாய்ந்தவை. 

மெட்ராஸ் கஃபே படத்தில் வரும் அனுராதபுரம் காட்சி தொடர்பாக ஒரு விவாதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

//இழவிலும் காசு பார்க்க 'கிழக்குப் பதிப்பகம்' வெளியிட்ட 'பிரபாகரன்' என்ற புத்தகத்தை எழுதிய செல்லமுத்து குப்புசாமி அனுராதபுரப் படுகொலைகள் குறித்த (Madras Cafe) விவாதத்தில் இவ்வாறு சொன்னார்: /அனுராதபுரம் கொலை மாதிரி பெரிய அளவில் சிங்களர்களைப் பாதிக்குமாறு ஒரு செயலில் ஈடுபடுமாறு RAW எல்லாக் குழுக்களையும் மிரட்டி, அதன் அடிப்படையில் புலிகள் அதைச் செய்தனர். பேச்சு வார்த்தைக்கு வராமல் இழுத்தடித்த ஜெயவர்த்தனாவை பேச்சு மேசைக்கு வரவைக்க இந்தியா கையாண்ட உத்தி இப்படி உமா மகேஸ்வரன் பேட்டி கொடுத்த சில நாட்களில் கொல்லப்பட்டதையாவது காட்டினார்களா? இந்தியாவின் சமாதான முயற்சியையும், அனுராதபுரம் நிகழ்வையைம் தனித்தனியே பார்க்க முடியாது./

நான் அவருக்கு இவ்வாறு எழுதியுள்ளேன்: / அப்படியா! நான் இதுவரை புலிகள் தன்னிச்சையாகவே அனுராதபுரப் படுகொலைகளை செய்ததாக நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் சொல்லித்தான் இந்திய அரசின் கைப்பாவைகளாகப் புலிகள் அந்தப் பாதகத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதேவேளையில் வேறெந்த போராளிக் குழுக்களும் இந்திய அரசு வற்புறுத்தியும் கூட இந்தப் பாதகத்தை செய்ய முன்வரவில்லை என்பதும் தெரிகிறது. தகவலுக்கு நன்றி தோழர்./

ஏலி ஏலி லாமா சபக்தானி!
//

நான் இதை மறுத்துப் பேசுவேன் என்றோ, அல்லது புலிகளின் செயலை நியாப்படுத்துவேன் என்றோ அவர் கருதியிருக்கக் கூடும். அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதும், அனுராதபுரம் நிகழ்வும் புலிகள் மீதும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய ஈழத் தமிழனம் மீதுமான கரும்புள்ளி என்பதில் எனக்கு பலமான நம்பிக்கை உண்டு.

அனுராதபுரம் நிகழ்வு குறித்த பகுதியை ’பிரபாகரன் – ஒரு வாழ்க்கை’ புத்தகத்தின் ஆங்கில வடிவமான Prabhakaran: The Story of his struggle for Eelam ல் இருந்து:

According to Uma Maheswaran’s 1989 interview to the Time magazine, it was India’s RAW that had encouraged LTTE to attack the Sinhala public to make Jayewardene come down from his position:

‘A RAW officer asked us to throw a grenade into a Sinhalese cinema [hall] or put a bomb in a bus or market in a Sinhalese town. Only we and the EROS refused. In May 1985 two busloads of Tigers drove into the ancient Sinhalese capital of Anuradhapura and, in the town's main bus station, opened fire with automatic weapons, slaughtering 143 civilians there and elsewhere. According to one of the participants in the killing spree, Tiger leader Vilupillai Prabhakaran was in radio contact with RAW agents during and after the massacre.’25

Time, Asian Edition, 3 April 1989

ஷோபா சக்தியின் புனைவுகளைப் போல அல்லாமல் நிகழ்கால வரலாறு எழுதுவது மிகவும் சவாலான காரியம். 

நீங்கெல்லாம் அரசியல் பேசுவது அதுவும் ஈழம் குறித்து எனக்கே பாடம் நடத்துவதற்கு இதுவொன்றும் எம்.ஜி.ஆர் போல ரோபோ சங்கர் பேசும் மிமிக்ரியல்ல. இரத்தமும் சதையுமான எங்களது வரலாறு.” என நீங்கள் சங்கரபாண்டியை நோக்கிச் சொன்னது என்னைச் சுட்டிச் சொன்னதாகவும் கருதுகிறேன். இரத்தமும், சதையுமான எங்கள் வரலாற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த எவனோ செல்லமுத்து குப்புசாமி எப்படி எழுதலாம் என உங்கள் அடிமனது சொல்வதாகவே நம்புகிறேன். இருக்கட்டும். அதற்கு உங்களிடம் ஆயிரம் காரணங்கள், நியாயங்கள் இருக்கலாம். நாம் முழுமையாக மதிக்கிறேன்.

ஆனால் மெட்ராஸ் கஃபே படத்தில் வருவது யாருடைய ரத்தமும், சதையுமான வரலாறு? படம் எடுத்தவன் உங்களோடு அல்லப்பிட்டியில் பிறந்தவனா?

4 comments:

இனியவன் said...

மெட்ராஸ் கபே படத்தின் துவக்கக் காட்சி - இயக்குனர் இக்காட்சியை இன்னும் தெளிவாக எடுத்திருக்க வேண்டும்.
-------------------------------------------------------------

பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களை ஒரு போராளிக்குழுவினர் சுட்டுக்கொல்லுவதப் போன்று காட்டியிருப்பார்கள். இதை பார்க்கும்போது இந்தப் படுகொலையை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று எண்ணத் தோன்றும். வரலாறு தெரிந்தவர்கள் இது 1985-ல் நிகழ்ந்த அனுராதபுரம் படுகொலையாக இருக்குமோ என நினைக்கலாம். தெரியாதவர்கள் இது விடுதலைப்புலிகளின் கைவரிசை என நினைக்கலாம். இந்த காட்சி தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. ஆனால் உண்மை என்ன?

இதை பொறுமையாக pause செய்து பார்த்தால்தான் இது அரச படைகளின் உதவியுடன் சிங்கள குழுக்கள் நடத்திய தாக்குதல் என்று. பெளத்த துறவியைக் காட்டுவதைப் பார்த்து அது ஒரு சிங்கள ஊர் (அனுராதபுரம்) என்று நினைக்கவேண்டாம். அதுவும் தவறு. இது கண்டிப்பாக ஜாஃப்னாவுக்கு அருகில் உள்ள பகுதி தான். இக்காட்சியின் துவக்கத்தில் இலங்கை வரைபடத்தை காண்பிப்பார்கள். அதில் கொழும்பு மற்றும் ஜாஃப்னா மட்டும் குறிப்பிடபட்டிருக்கும். ஜாஃனாவை நோக்கி கேமரா செல்லும். அதன்பிறகு தான் இந்த காட்சி. இதில் முகத்தை மறைத்து வரும் கும்பல் சிங்கள கும்பல் தான். ஜான் ஆப்ரகாம் இலங்கையின் வரலாறை சொல்ல ஆரம்பிக்கும் காட்சியில் இது தெளிவாக விளங்கும். 'சிங்களர்கள்' என்று சொல்லும்போது இந்த முகமூடி இளைஞர்களையும், 'தமிழர்கள்' என்று சொல்லும் போது காயம்பட்ட மக்களயும் காட்டுவர்கள்.

பெளத்த துறவியை பொறுத்தவரை, படத்தின் மற்ற சில காட்சிகளிலும் இது போன்ற பெளத்த துறவியை பார்க்க முடியும். ஜான் ஆப்ரகாம் யாழ் நகரில் நுழையும் போது கூட பெளத்த துறவி நடந்து செல்வார். ஜான் ஆப்ரகாமை முதலில் வரவேற்பவர் கூட "Welcome to the land of Budda, Sir" என்று வரவேற்பார். அதாவது இலங்கை முழுதுமே பெளத்தம் தான் என்ற தவறான கருத்தை இப்படம் சொல்வதாக இருக்கிறது.

சில உண்மைகளை சொல்லி, சில உண்மைகளை திரித்து, பல உண்மைகளை மறைத்து, தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

Ravindran Pathman said...

இந்தப் படத்தை இணையத்தளதஇதில் எங்காவது பார்க்க முடியுமா? இருந்தால் தயவுசெய்து இணைப்பை தரமுடியுமா நண்பர்களே.

Ravindran Pathman said...

இந்தப் படத்தை இணையத்தளதஇதில் எங்காவது பார்க்க முடியுமா? இருந்தால் தயவுசெய்து இணைப்பை தரமுடியுமா நண்பர்களே.

ஹரிஹரன் said...

//ஷோபா ஒரு முன்னாள் விடுதலைப் புலி. முன்னாள் என்றால் பல வருடம் முன்னால். பிறகு புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பிரான்ஸில் வசிக்கிறார். // இதற்கான ஆதாரம் கொடுக்க முடியுமா...

அப்புறம் சோபா சக்தியையும் அவரின் குடும்பத்தையும் சமூக விரோதிகள் என்று சொல்லி ஊரை விட்டு ஆதாவது ஈழத்தில் ஒரு ஊரை விட்டு விலக்கி வைத்தார்கள் ஏன் என்று கேட்டு சொல்ல முடியுமா...

உங்களின் புரிதலுக்கு இயக்கத்தில் இருப்பவர்கள் யாரும் தான் இயக்கத்தில் இருக்கிறேன் என்று வெளியில் சொல்ல மாட்டார்கள்.. இயக்கமே வெளியில் சொல்லும் வரை அதாவது இவர்கள் எங்களுக்காக இந்த பணியை செய்கிறார்கள் என்று புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களை சொல்லும் வரை.. அப்படி எதாவது அறிவிப்பு உள்ளதா இந்த சோனா பானா சகதியை பற்றி..

இது தான் அடிப்படை விதி வேணும் என்றால் உண்மையாக இயக்கத்தில் அதாவது விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த யாரையாவது கேட்டு தெரிந்து கொள்ளவும்...