Thursday, November 07, 2013

இரவல் காதலி நாவல் குறித்த அறிவிப்பு

எனது Borrowed Girlfriend நாவலில் தமிழ் வடிவம் இரவல் காதலி என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கிறது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

இது குறித்து நண்பர் பிரபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த ஒரு சின்ன விமர்சனம் கீழே:

//இலவசம் என்ற சொல்லை கேட்டதும் நமது ஐம்புலன்களும் விழித்துக்கொண்டுவிடுகிறது. Chellamuthu Kuppusamy அவர்கள் எழுதிய Borrowed Girlfried என்ற ஆங்கில நாவல் அமேசானில் இலவசமாக தரப்படுகிறது என்பதை பார்த்ததும் உடனே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாரில் ஐம்பது ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் ஒரு புத்தகத்துக்கு ஒரு டாலர் கொடுத்து வாங்குவதென்பது நமக்கு இன்னும் பழக்கப்படாத விசயமாகவே இருக்கிறது. 

மொபைலில் Kindle App இல்லை, அமேசானில் அக்கவுண்ட் இல்லை, 3G ஆக்டிவேட் செய்யவில்லை என்று பல காரணம் இருந்தாலும் இலவசம் என்றதும், காரமடைக்கு அந்தபக்கம் ஒரு வெள்ளரிக்காட்டில் இருந்தவாறே அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு கோவை வந்து சேரும்போது புத்தகம் Kindleக்கு டெலிவரி ஆகியிருந்தது. ஆசிரியர் நம்ம தாராபுரத்துகாரர். ஒரு சாப்ட்வேருக்கு கட்டிங், சைசிங். டிரில்லிங், ரி-போரிங், ப்லட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், பயாப்சி, MRI ஸ்கேன் மற்றும் எனிமா கொடுப்பது முதல் ஆட்டோப்சி செய்வதுவரை அனைத்தும் தெரிந்த ஆள். பங்குவர்த்தகம், தமிழ் ஈழம் குறித்து இவரது நூல்கள் நமக்கு பரிச்சயமானவை. இரண்டு நாளில் இந்த e-book படித்தாயிற்று. சரி, என்னதான் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால்...

எனக்கென்னவோ ஆசிரியர் தன் சுயசரிதையை பல்வேறு பெயர்களில் எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது (நேரில் பார்க்கும்போது இதை தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்) கார்ப்பரேட் உலகில் நிகழும் தினசரி கதைதான் என்றாலும் அதை சொன்னவிதமும், அதன் ஊடாக புகுத்தியிருக்கும் மெசேஜ்-ம் அவரின் முதிர்ச்சியை காட்டுகிறது. தினசரி அலுவலக அரசியல்கள், உடலியல் சார்ந்த பிரச்சனைகள், சமூக அழுத்தம், ஆண்-பெண் உறவுகள், கள்ள உறவுகள் எழும் விதம், அதன் பாதிப்புகள் அதனால் நிறுவனத்துக்கு எழும் லாப, நட்டங்கள் என சகல கோணத்திலும் உரைநடையை கவனமாக கையாண்டிருக்கிறார். 

கார்பொரேட் உலகத்தின் பலமே அதன் ஊழியர்களின் productivity-தான். கழுதையாக இருந்தால் நிறைய சுமக்கவைத்தும், குதிரையாக இருந்தால் குறைவாக சுமக்கவைத்து அதேநேரத்தில் விரைவாக ஓடவைத்து இரண்டையும் பேலன்ஸ் செய்து லாபம் ஈட்டி survive ஆகிக்கொண்டிருக்கிறது. இதன் ஊழியர்கள் தினசரி அக்கப்போரில் நொந்து நூடுல்ஸ் ஆனாலும் ரியல் எஸ்டேட், கன்சூமர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏனைய பிராண்டு பொருட்கள் இவர்களை வைத்து எப்படி வருமானம் பார்க்கின்றனர் என்பதை ஆசிரியர் தவிர்த்துவிட்டார். மேலும் அது புகுத்தவேண்டிய இடமும் நாவலில் இல்லையென்றே தோன்றுகிறது. 

ஊழல்கள், லஞ்சம் எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை இந்த நாவல் மேலும் உறுதிபடுத்துகிறது. Corruption-proof என்ற ஒன்று இந்த உலகில் எங்கும் கிடையாது. நீங்கள் எல்லா இடங்களும் rational ஆக இருப்பதைவிட practical and happy ஆக இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்று ஆசிரியர் அட்வைஸ் செய்திருக்கிறார். Practical of course! ஒரு project மேனேஜர்-இன் job profile -யும் அவர்கள் படும் அவஸ்தையையும் விவரிக்கும்போது ஆசிரியர் கார்ப்பரேட்-களில் நீண்டகாலம் உலவிகொண்டிருப்பவர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. 

நாவல் X ரேட்டட் என்றாலும், இது குழந்தைகள் புதினம் அல்ல என்பதால் எதுவும் மிகையாக தெரியவில்லை. பெண்களின் leggings மீது ஆசிரியருக்கு என்ன கோபமோ, இந்த நாவலிலும் அதை இழுத்திருக்கிறார்!!!! ஒரு '' ரேட்டட் ஜோக்கை நாயகன் தன் கள்ளக்காதலியிடம் சொல்லுகிறார். ஆளும்கட்சியினர் யாரேனும் அதை படித்தால் ஆசிரியர் மீது அவதூறு வழக்கு பாய வாய்ப்பிருக்கிறது! எதற்கும் முன்ஜாமீன் வாங்குவது நலம்.  //

1 comment:

Anonymous said...

waiting for release