Tuesday, December 17, 2013

சிறுகதைகள் எழுதுவது இப்படி

’மச்சி. கத சொல்றேன். கேக்கறியா?”

’சொல்லு’

‘ஷார்ட் ஸ்டோரி”

“ஓகே.. சொல்லு”

“ரொம்ப ஷார்ட் ஸ்டோரி”

“ம் ம்”

“ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கான யூஸ் பண்ணாத ஷூ விற்பனைக்கு”

“பனைக்கு என்ன?”

“இதான் ஸ்டோரி”

“சரியாச் சொல்லு. கதையா, விடுகதையா?”

“கதைதான் பாஸ்”

“அப்ப சரி. நல்லா இருக்கு”

“புரிஞ்சுதா?”

“அதை எதுக்கு உனக்கு சொல்லணும்? விடுகதைக்குத்தானே பதில் வேணும்?”

“நிஜமாவே புரியலையா?”

“ம்ஹும்”

“யோசி”

“எனக்கு சின்ன மூளைடா. பிளீஸ் ஆன்சைட் கால் இருக்கு போகணும்”

“ஒரு வயசுக்குள்ள இருக்கிற கொழந்தையோட ஷூ விற்பனைக்குன்னு விளம்பரம் போடறாங்க. அதுவும் யூஸ் பண்ணாத ஷூ”

“ஒரு வயசுக்குள்ள கொழந்தை எப்படிங்க நடக்கும்? அதனால் யூஸ் பண்ணாத ஷூன்னு வெச்சுக்கலாம்”

“இல்ல மேன். கொஞ்சம் அவுட் ஆஃப் த பாக்ஸ் திங்க் பண்ணு.”

“ஷூ வாங்கின உடனே ஒரு பாக்ஸ்ல வெச்சு பூட்டிருப்பாங்க. அத பாக்ஸ்ல இருந்து அவுட்சைடு எடுக்கறதுக்குள்ள கொழந்த பெருசாகியிருக்கும்.”

“மிடியல”

“டீ இன்னும் மூனு சிப் பாக்கி இருக்கு. காலுக்கு நாலு நிமிசம் பாக்கி இருக்கு. அதுக்குள்ள முடிச்சிரு”

“புதுசா கல்யாணம் ஆன பொண்ணு கர்ப்பமா இருக்கும் போதே ஆசை ஆசையா ஷூ வாங்கி வைக்கிறாங்க. ஆனா கொழந்த பொறக்கல. அதனால் விக்கறாங்க. இதுதான் ஒரு வரிக் கதையில சொல்லப்படாத கதை”

“ஓ…”

“என்ன ஓ? நல்லா இருக்கா இல்லியா?”

”ஏன் பழசா கல்யாணம் ஆனவங்களா இருக்கக் கூடாதா?”

”இருக்கலாம்”

“கல்யாணம் ஆகாதவங்களா இருக்கக் கூடாதா?”

“பாஸிபிள்”

“இல்லாட்டி நெறைய ஷூ வாங்கிட்டு வந்து நிஜமாலுமே யூஸ் பண்ணாததா இருக்கக் கூடாதா?”

”இருக்கலாம்”

“ஷூ கடைக்காரன் பழைய ஸ்டாக் எல்லாம் விக்கறதுக்கு அந்த விளம்பரம் போட்டிருக்கக் கூடாதா?’

“போட்டிருக்கலாம்”

“இப்ப சொல்லு. இஞ்சி டீ போட்டுக் கொடுத்த அந்த அக்கா உனக்கு மட்டும் பேதி மருந்தை மிக்ஸ் பண்ணி போட்டிருக்கணுமா, போட்டிருக்கக் கூடாதா?’

“போட்டிருக்கலாம்”

குறிப்பு: இது நிஜமாலுமே நடந்த ஒரு உரையாடல். எங்கோ படித்த மாதிரி இருக்குன்னு நீங்க ஃபீல் பண்ணினால் அதற்கு நிர்வாணம்.. சீ நிர்வாகம்.. பொறுப்பல்ல.

3 comments:

vimala niranja said...

படிக்கும் போதே நினைத்தேன்.இது நிஜமாகவே நட்ந்த மாதிரியே இருக்கே என்று.!செம..செம...போங்க!:)

vimala niranja said...

படிக்கும் போதே நினைதேன்..இது நிஜமாகவே நடந்திருக்குமென்று..!செம..செம..பாஸ்..!

தமிழ் said...

உரையாடலின் இறுதிதான் ஹைலைட்!
எல்லாமே பாஸிபிள்!!
ஹாஹா!