Friday, July 11, 2014

பங்குச் சந்தை பற்றிய புத்தகம் புதிய வடிவில் - நன்றி திரு.நாகப்பன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் ‘இழக்காதே’ புத்தகத்தின் முன்னுரை.
******
இழக்காதே புத்தகம் முதலில் 2007 ஆம் ஆண்டு வெளியானது. அது வெளியான சமயத்தில் நான் நாணயம் விகடன் இதழில் எழுதி வந்தேன். அதற்கு முன்பாகவே பங்கு வணிகம் பற்றி வலைப்பூவில் எழுதினேன். பெரும்பாலும் பங்கு வணிகம் அல்லது முதலீடு பற்றிப் பேசும் வல்லுனர்கள் மார்க்கெட்டில் புழங்கும் ஆட்களாக இருப்பார்கள். தமது தினசரி வருமானத்தை பங்குச் சந்தையில் மற்றவர்களை முதலீடு செய்ய வைப்பதன் மூலம் ஈட்டுகிறவர்களாக இருப்பார்கள். 

எனக்கு அப்படியான அவசியம் இருக்கவில்லை. அடிப்படையில் முதலீட்டாளனான எனக்கு முதலீட்டாளரை மனதில் வைத்து எழுத அத்தனை நியாயமான காரணங்களுமிருந்தன. நிதி மேலாண்மை குறித்தான அபத்தங்களையும், அதன் மீது மக்களுக்கிருக்கும் அலட்சியமுமே இதை எழுதத் தூண்டின. எல்லோருக்கும் இங்கே பணம் பிடிக்கிறது. ஆனால் பணத்தைப் பற்றிப் பேசவும், அதை நிர்வகிப்பது பற்றிப் பேசவும் விருப்பமில்லை.

நமக்கு நிதி மேலாண்மை பற்றிச் சொல்லிக் கொடுக்கும் ஆட்களுக்கெல்லாம் ஒரு hidden agenda இருப்பது இங்கே பல பேருக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கமே இதற்கான விதை. பணத்தின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் வெட்டிச் செலவு செய்வதும், அதை விட அதிகமாகப் பங்குச் சந்தையில் சூதாடுவதும் பிழைப்பாக வைத்திருக்கும் எண்ணற்ற சாஃப்ட்வேர் கண்மணிகளும் இதை எழுதுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.

பங்குக் குறியீடுகளைப் போலவும், வணிகச் செய்தித்தாளைப் போலவும் அடுத்த நாள் காலையே பழசாகிப் போய் குப்பையாகாமல் எப்போது படித்தாலும் சரியென்று உணர வைக்கும் கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் வகையில் இந்த நூல் அமைய வேண்டும் என்ற ஆசையில் உருவானதே இதற்கான முயற்சி. அம்மாதிரியே 2007 இன் முதல் பகுதியில் இது வெளியானதில் மகிழ்ச்சி.

முதல் பதிப்பு வெளியான பிறகு ஆயிரக் கணக்கான பிரதிகள் விற்று பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது. இந்தக் கால இடைவெளியில் தான் திரு.நாகப்பன் சென்னை பங்குச் சந்தையில் உரையாற்றுவதற்காக அழைத்தார்.

பிறகு இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவம் TheScience of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற பெயரில் வெளியான போது அதற்கு அருமையான அணிந்துரை எழுதிக் கொடுத்து உதவினார். பர்சனல் ஃபைனான்ஸ் துறையில் விழிப்புணர்வு உண்டாக்க நீங்கள் இன்னும் நிறையச் செய்ய வேண்டுமென ஊக்குவித்திருக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பிற்கும் அணிந்துரையை வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

பெரும்பாலும் பாசிட்டிவான தலைப்பு இருந்தால் மட்டுமே மக்கள் விரும்பி எடுத்துப் பார்ப்பார்கள். இழக்காதே என்ற தலைப்பு விற்பனைக்கு ஏற்றதா தெரியவில்லை. ஒரு வேளை இதற்கு கவர்ச்சிகரமான தலைப்பொன்று வைத்திருந்தால் இன்னும் சில ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்றிருக்கலாம்.

பரவாயில்லை. ஆனால் ’இழக்காதே’ புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு! மறுமதிப்பாகக் கொண்டு வருகையில் வேறொரு தலைப்பிடலாமா என்று கூட பதிப்பாளரோடு யோசித்த பிறகு அதே தலைப்பில் வெளிக்கொணருகிறோம்.


வளம் பெறுவோம்!

5 comments:

senthil kathirvel said...

well done, keep it up

Ganesan R said...

வாழ்த்துக்கள் திரு.குப்புசாமி. கோவையில் 15.08.2014 முதல் புத்தக கண்காட்சி ஆரம்பம் ஆகிறது. உங்கள் புத்தகம் அப்போது வாங்கலாமா ?. கோவையில் எங்கு உங்கள் புத்தகம் எப்போது கிடைக்கும்?. --கணேசன்.

Chellamuthu Kuppusamy said...

அன்பு நண்பருக்கு - இது எதிர் வெளியீட்டின் அரங்கில் கிடைக்கும்

Ganesan Durai said...

இழக்காதே பங்கு படுகுழிகளும் பாதுகாப்பு வழிமுறைகளும் எங்கு கேட்டாலும் கிடைக்க வில்லை. அந்த book கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள் please

அன்புடன்
d .கணேசன்
செல் no :9159222695

Chellamuthu Kuppusamy said...

அன்புள்ள கணேசன்.. ஆன்லைனில் http://www.wecanshopping.com/brands/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html என்ற லிங்கில் பாருங்கள். இல்லையேல் வரும் புத்தகக் கண்காட்சியில் ’எதிர் வெளியீடு’ அரங்கில் கிடைக்கும்.