Tuesday, May 31, 2016

புத்தகத் திருவிழாவும், புதிய அவதாரமும்

எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களாக (டப்பர்வேர், ஆம்வே கூட) இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் என்பது அவர்களது உறவினர்களுக்கே தெரியாது. ஒரு தொழிலைச் செய்வதை வெளியில் சொல்வதற்கு என்ன வெட்கம்? யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து இருட்டறையில் கள்ள நோட்டு அடிக்கும் பிசினஸ் அல்ல. நாலு பேருக்குத் தெரிந்தால்தான் அவர்கள் இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க, “அட நம்ம ஆளே ஒருத்தர் இருக்காறே!” என வருவார்கள். இல்லையென்றால் உச்சுக் கொட்டி விட்டு,..”எனக்குத் தெரியாமல் போச்சே.. தெரிஞ்சுருந்தா உங்க கிட்டியே போட்டிருப்பேனே” என்பார்கள்.

இன்சூரன்ஸ் ஏஜெண்டில் நிலைதான் தமிழ்நாட்டில் புத்தகம் எழுதுகிறவனுக்கும், அதை பதிப்பிக்கிறவன் மற்றும் விற்கிறவனுக்கும். ஒரு பக்கம் குப்பையான நூல்களையெல்லாம் ஓவராக மார்க்கெட் செய்து கலக்குகிறார்கள். இன்னொரு பக்கம் கெளரவம் பார்த்துக் கொண்டு சில எழுத்தாளர்கள் தனது புத்தகத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை. புத்தகம் எழுதுவது மட்டுந்தான் எழுத்தாளனின் வேலை; விற்பது பதிப்பாளரின் வேலை என நினைக்கிறார்கள். புத்தக வெளியீட்டு விழாவின் செலவை மட்டும் சமமாகப் பகிர்ந்து கொண்டு புத்தகக் கண்காட்சி முடிந்து அச்சடித்த புத்தகங்களை எல்லாம் பாதுகாத்து வைக்கும் பொருட்டு பதிப்பாளர் godown க்கு வாடகை கொடுக்க தனியாக சம்பாதிக்க வேண்டும்.

புத்தகம் எழுதுகிறவனே தன் புத்தகத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும் எனும் போது விற்கிறவன்? பேசித்தான ஆக வேண்டும்!

ஆம்.. இத்தனை நாள் சில பேருக்கு மட்டுமே தெரிந்திருந்த உண்மை.. Leemeer Publishers and Distributors எனும் ஆன்லைன் புத்தகக் கடையின் உரிமையாளர்களில் நானும் ஒருவன் என்பதே உண்மை. லீமீரின் முதன்மையான நோக்கம் தமிழ் நூல்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எளிய அவா மட்டுமே. அடிப்படையில் வாசக மனநிலை படைத்த நான் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இதைச் செய்திருப்பேன் எனும் அளவுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

Leemeer அச்சுப் புத்தகங்களைக் காட்டிலும் ebook வடிவில் கவனம் செலுத்துகிறது. கீழே கண்ட பல்வேறு வடிவங்களில் தினமும் ஆயிரக் கணக்கான பேர் இணையத்தில் துழாவுகிறார்கள்.

Tamil books online, Online Tamil books, Tamil ebooks online, தமிழ் நூல்கள் ஆன்லைனில் வாங்க, Buy Tamil Books Online, pdf books in tamil, tamil novels pdf, online bookshop chennai, tamil online books, online tamil books to read, online tamil books free reading, online tamil books free download, online tamil books pdf, online tamil books purchase, online tamil books shopping


மின்னூல்களை வாசிக்கும் ஆர்வத்தை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கிறது என்பதே இந்தத் தேடலுக்கான காரணமாக இருக்க முடியும். 

ஆங்கிலத்தில் வெளியாகும் பிரபலமான முதலீட்டுப் பத்திரிக்கையான Dalal Street Investment Journal இன் அதே வழிமுறையைப் பின்பற்றி லீமீரின் மின்னூல்கள் உருவாகின்றன. www.leemeer.com  தளத்தில் வாங்கும் ebooks PDF வடிவில் கிடைக்கும். அவற்றை வாசிப்பதற்கு பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டும். It will be a personalized PDF copy. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அது யாருடைய பிரதி என்பது சிறிய எழுத்தில் குறிப்பிடப்படும். 

குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை பிரதிகள் விற்றதோ அதற்கேற்ற ராயல்டி தொகை அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் எழுத்தாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. புத்தகத்தின் உரிமை பதிப்பாளருக்கு இருக்கும் பட்சத்தில் பதிப்பாளருக்கு இந்தத் தொகை வழங்கப்படும். 

Leemeer தளத்தில் தமிழ் மகன், என்.சொக்கன், லஷ்மி சரவணகுமார், வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி, சுப்ரபாரதி மணியன், புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் ebooks ஏற்கனவே வெளியாகியுள்ளன. வரும் மாதங்களில் தலைப்புகளின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகி இன்னும் பல முக்கியமான படைப்பாளிகளின் ஆக்கங்களும் வந்து சேரும். 

இந்தப் பின்னணியில் வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் ஆதரவுடன் ஜூன் 1 முதல் 13 வரை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியை எதிர்நோக்குகிறது லீமீர். 

இந்த திருவிழாவை முன்னிட்டு ரூ 250 மதிப்புள்ள ebooks வாங்குவோருக்கு ரூ 100 மதிப்புள்ள ebooks ஐ கூடுதலாக வழங்குவதில் மகிழ்கிறோம். ஆக ரூ 350 க்கு மின்னூல்களை வாங்கினால் ரூ 100 தள்ளுபடி.. இதற்கு உங்கள் ஆர்டர் மதிப்பு ரூ 350 க்கு மேல் இருக்க வேண்டும். பிறகு ‘View Cart’ பகுதியில் FAIR16 என்ற கூப்பனைப் பயன்படுத்தவும். ரூ 100 தானாகவே குறைந்து விடும்.

Monday, May 30, 2016

நம் உரிமை... நம் கடமை

நான் வாழும் குடியிருப்புப் பகுதியில் பெருங்கோபம் கொண்டு வெடித்திருக்கிறார்கள் மக்கள். அதற்குக் காரணம் இரண்டு வாரம் முன் பெய்த மழைக்கே வீதிகளில், வீட்டுக்குள் நீர் புகுந்ததுதான். சென்னையில் டிசம்பர் மாதம் பெருமழை வந்ததெல்லாம் பெரிய விஷயமில்லை. அப்போது வீதிகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்தது பெரிய செய்தியில்லை. இரண்டு வாரம் பெய்ததே ஒரு நாள் மழைக்கே நீர் சூழ்ந்து அவதியுற்ற சம்பவம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சொந்த ஊரானா நூக்கம்பாளையத்தில் (பெரும்பாக்கம்-செம்மஞ்சேரி இடையில்) நடந்தேறியிருக்கிறது.

டாஸ்மாட் கடையில் MRP விலைக்கு மேல் பணம் கேட்டாலும் கொடுத்து சரக்கு வாங்குவது பழகிப் போன நமக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பிரச்சினையில்லை. நமது அடுத்த வேளை ஜீவனத்திற்குப் பிரச்சினை வரும் வரையில் அமைதியாக ஒதுங்கிப் போவோம். நம்மை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றினால் பரவாயில்லை. சிறுகச் சிறுக ரத்தத்தை உறிஞ்சினால் பொறுத்துக் கொள்வோம். ஒரேயடியாக பிரச்சினை என்றால் பெருங்கோபம் கொண்டு வெடிப்போம். பிறகு மறந்து விடுவொம். அப்படித்தான் வெடித்திருக்கிறார்கள் எங்கள் ஏரியா மக்கள்.

சொன்ன விஷயங்களைச் செய்து கொடுக்காமல், வாடிக்கையாளர்களை உருட்டி மிரட்டிய பில்டரின் சில்லறைத்தனங்களை எல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்போது கொதித்தெழுகிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. நம் கண் முன்னால் நம்மை ஏமாற்ற அனுமதிப்பது ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் நாம் செய்யும் துரோகம். வருகிறவன், போகிறவன் எல்லாம் நம் மீது ஏறட்டும் என சரணாகதியாகும் அவலம். நம் உரிமைகளுக்கே போராடாத நாம் பாதிக்கப்படும் பிறரின் உரிமைக்காக எப்போது போராடுவோம்?

மாதம் 5 ஆயிரம், 6 ஆயிரம் என maintenance bill போடும் பில்டரை அதற்கு கணக்குக் கொடு என்று கேட்டால், “Are you mad? அதெல்லாம் கேக்காதீங்க. நம்ம பில்டிங் வேல்யூ கொறஞ்சிரும். நெகட்டிவ் நீயூஸ் வெளியே பரவுச்சுன்னா நம்ம கம்யூனிட்டிக்கு கெட்ட பேரு” என்றெல்லாம் நம்மை சமாதானம் சொன்னவர்களில் சிலர் இன்று வீதியில் இறங்கி தர்ணா செய்கிறார்கள். காரில் ஊர்வலம் போகிறார்கள்.

”அதென்ன பாஸ் சனிக்கிழமக ஈவினிங் தர்ணா? முடிஞ்சா திங்கட்கிழமை காலைல சோழிங்கநல்லூர் சிக்னலை மறிச்சு தர்ணா பண்ண வேண்டியதுதானே?” என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். இந்த அளவிற்கு ஒன்று கூடி வந்திருப்பதே பெரிய விஷயம். நான் ஊரில் இல்லை. இருந்தால் நானும் கூடச் சேர்ந்து ஒரு பேனரைப் பிடித்து நின்றிருக்கலாம்.

BSCPL என்ற அந்த பில்டரின் பித்தலாட்டங்களை பட்டியல் போட்டால் பெரிதாகப் போகும். நிறைய எழுத வேண்டியிருக்கும். சுருக்கமாக இந்த இணைப்புகள் உங்களுக்கு.. 


நேரமிருந்தால் பாருங்கள். சென்னையில் வீடு வாங்கியவர்கள், வாங்கப் போகிறவர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும்.

அந்த பிக்காலி பில்டர் மீது நான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நாலு வருசம் ஆகிறது. எப்போது கேட்டாலும், ”ஜட்ஜ் லீவ்ல போயிருக்காரு சார்” என்கிறார் என் வக்கீல்.  ”மொதல்ல நீங்க கோர்ட்டுக்குப் போறீங்களா ஸார்?” என்று கேட்க வேண்டும்.